07 January 2009

ஒற்றைத் தலைவலி

உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகக்கூடும்.

அறிகுறிகள்:
தலைவலி விட்டுவிட்டு ஒரே பக்கத்தில் வரும். வலி கடுமையாக இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய வேலைகளை பாதிக்கும். தலையின் இரண்டு பக்கங்களில் அல்லது ஒரே பக்கத்தில் தோன்றி இன்னொரு பக்கத்திற்குப் பரவும். விண்விண் என அதிர்வோடு, பிசைவது போன்று, கண்ணையும் நெற்றியையும் அமுக்குவது போன்ற உணர்வுகளும், தலையில் ஏதோ ஒன்று கிளறுவது போனற உணர்வும் இருக்கும். வெளிச்சத்தை உற்றுப் பார்க்க முடியாது. சத்தம் கேட்டால் மிரட்சி உண்டாகும். திடுக்கிட வேண்டியிருக்கும். வாசனைகளை முகர்ந்தால் உடனடியாக அதிக உணர்ச்சி வசப்படும் நிலை. அதிகப்பசி, பசியின்மை, பார்வை மங்குதல், மூக்கடைப்பு, அடிவயிற்றில் வலி, சிறுநீர் அதிகரித்தல், மற்றும் முகச் சோகையால் தோலின் நிறம் மங்குதல் ஆகியவை காணப்படும்.படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

வகைகள்
ஒற்றைத் தலைவலி இரண்டு முக்கிய வகைப்படும்

1. கிளாசிக் மைக்ரேன் (Classic Migraine)

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்தவலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

பொதுவான மைக்ரேன்: (Common migraine)

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் திடீரென சுருங்குவதால் இரத்தக்குழாய் சுவர்களில் உண்டாகும் அழுத்தம் காரணமாக சுரக்கும் ரசாயனங்களால் மூளை வலியை உணர்கிறது.
ஒளிப்பட விளக்கம் இங்கே காண்க.

சிலர் ஒற்றைத் தலைவலி வரப்போவதை முன்பே எதிர்வு கூறுவார்கள், இதற்கு முன்னறிகுறியாக பார்வைப்புலன் தளத்தில் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள், ஒளிவட்டம், குறுக்கு மறுக்கான ஒளிக்கோடுகள் அல்லது தற்காலிகமான பார்வையிழப்பு போன்றன தோன்றுவதாக கூறுவார்கள். பலருக்கு இந்த ஒளிக்கீற்றுகள்தோன்றாமலே தலைவலி தோன்றுகின்றது.இத்தலையிடி வருபவர்களுக்கு இது திரும்ப திரும்ப வருவதாக காணப்படுகிறது. அத்துடன் போதியளவு உணவு, உறக்கமின்மை, சில உணவுகளில் ஒவ்வாமை, ஏற்றுக்கொள்ளாமை, ஒளியின் அளவு ஹார்மோன்களினால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் (பெண்களில் மட்டும்) போன்றவை இதைப் பொறிதட்டிவிடும் . மேலும் மனவெழுச்சி (Anxeity), மனவழுத்தம் (stress) ஆகியனவும் காரணமாகலாம்.

அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல் மதுவகைகள் சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர்,வினிகர்,சாக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?
ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. மற்றபடி, கட்டாயம் வரும் என்றும் சொல்லமுடியாது.

தாக்குண்டவர் துன்பத்தில் துடிக்க, சூழ இருப்பவரின் நோய் நீக்க முடியாத கையாலாகாத நிலை இன்னும் துன்பமானதாகும். சந்தோசமாக இணைந்து வாழும் இருவரில் ஒருவருக்கு இது வந்துவிட்டால், அவ்வுறவே பிரியுமளவுக்கு இந்நோய் பாதிக்கும். பெற்றோர்க்கு தலைவலி வந்துவிட்டால் சிறு பிள்ளைகள் குழப்பமடைந்து கவலைகொள்கின்றார்கள்.

உணவு¸ வாழ்க்கை முறை மாற்றங்கள்:
தாக்குதல் ஏற்ப்பட்டபோதான விபரங்கள் - நாள், நேரம், தாக்கின் கடுமைநிலை, கடந்த 24 மணி நேரத்தில் உட்கொண்ட உணவு போன்றவற்றை குறித்து வைத்துக்கொண்டால், தாக்குதலுக்கான தனிப்பட்டவருக்குரிய காரணிகளைக் கண்டுகொள்ளலாம். பின்னர் தெரிந்த காரணிகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

வராமல் காக்கும் வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.சீனியளவு கூடிய உணவுகளைத் தவிர்ப்பதோடு குருதி வெல்லவளவு அதிகம் மாறுபடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். போதியளவு நீர் குடிக்கவேண்டும்.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது. மன, உடலமைதிக்கான தியானப்பயிற்சியும் செய்யவேண்டும். தொடர்ச்சியான, திரும்பத் திரும்ப ஒன்றையே செய்யும் வேலைகளிலின்போது ஒழுங்கான சிறு ஓய்வுகள் எடுக்கவேண்டும்

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

மேலும் விபரம் அறிய http://yourtotalhealth.ivillage.com/migraines

Download As PDF

5 comments:

Sathik Ali said...

பாலாடைக் கட்டியில் உள்ள ‘தைரமின்’வேதிப்பொருள் தலைவலியைத் தூண்டும்

கேக், சைனீஸ் உணவுகள், சாக்லெட் போன்றவற்றிலும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், தலைவலியைத் தூண்டும் நைட்ரைட் கலக்கப்படுகிறது. ஊறுகாய்,ஆரஞ்சு, அன்னாசி, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, செயற்கை இனிப்புகள், குளிர்பானங்கள், சிப்ஸ் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கும் தலைவலி வரலாம்.

மது , கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கிற பெண்களுக்கும்கூட அடிக்கடி தலைவலி வரலாம்.
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
உயர்தரக் கொழுப்பான ஒமேகா ஃபேட்டி 3 அமிலம் கொண்ட மீன், இஞ்சி,பூண்டு, கீரை, ஃபிளாக்ஸ் சீட்ஸ் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.வைட்டமின் பி12 நிறைந்த காளான், பிராக்கோலி, மக்னீசியம் அதிகமுள்ள முள்ளங்கி, கீரை போன்றவற்றையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். தீராத தலைவலிக்கு சில சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. நவீன மருந்துகளுடன், போடாக்ஸ், ஸ்டெல்லேட் காங்லியன், கஸேரியன் காங்லியன் போன்ற சிகிச்சைகளையும், சில பயிற்சிகளையும் மேற்கொண்டால் தலைவலியிலிருந்து முழுமையான விடுதலை பெறலாம்.’’

Sathik Ali said...

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே இவற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

Sathik Ali said...

ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.
7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு
இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.
8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.
9.. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.
10. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

Sathik Ali said...

11)Massage the forehead with primrose oil when you have pain. It works as an excellent anti-inflammatory agent, preventing any kind of constriction in the blood vessels.

12)daily add garlic in your diet.chew raw garlic daily.

13)Increase Vitamin B3 intake which is found in whole wheat, green leafy vegetables, tomatoes, nuts, sunflower seeds, liver and fish.

14) Drink lots of water

15) Avoid factors which precipitate the attacks. e.g. sleeping late, tension, starvation, chocolates, cheese, alcohol, dry food, excessive sex and suppression of natural urges, excess physical/mental exertion.

16)During acute attack: lie down in a dark and quiet room and give ice bag over the head.

17)Ayurveda medicines for Migraine i.e. "ARDHAVBHEDAK" contains bhasma and Ras [mercury] but in purified form, some of the safe and result oriented medicine which can be given/practiced in Migraine are:
. rub onion paste to opposite feet.
. put 2-3 drops of coconut water into nose.
. apply garlic pod paste on forehead.
. put 4-5 drops of lime juice into opposite side nostril.
. put 2-3 drops of white onion juice in eyes.
. purified til tail: 280 ml kapoor-chandan-dalchini: 1o gm each i.e. 9ml mix all the ingredients and safely put in a bottle: you can use 4-4 drops as massage or put in ears
. grind small pippali 1/2 gm into powder and lick with 10 gm honey.
. crush RIPE grapes and drink [don't add water in it] .

18)A. Take: Cereals: wheat Pulses: Black gram Fruits & Vegetables: brinjal, mango, pomegranate, grapes [black], garlic, drum stick [shigru] Others: clarified butter, oil,milk,coconut water,sour vinegar [kanji],sesame
. Lifestyle: massage on head, gentle pressing, rest

B. Avoid: Cereals: special variety of rice [kodrava,sanvaka] Pulses: green gram, pigeon pea,peas,chickpea, Fruits & Vegetables: jambu,bitter gourd. Others: betel nut, excessively heavy food
Life style: excessive exercise, suppression of natural urges,use of uneven bed, night awakening.

19) medicines : vrihat vaat chintamani ras, mahalaxmi vilaas ras, godanti bhasma, dashmoolarisht, shadbindu tail, cephagraine tablets/drops

Nisha said...

தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்..!
தலைவலி எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுவம் ஒன்று தான். தலைவலி ஆனது பொதுவாக காய்ச்சல், சளி, உடற்சோர்வு,
மன அழுத்தம், கணணியில் அதிக நேரத்தை செலவிடுதல் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகின்றது.

தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்.

ஆனால், சில நேரங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட காணப்படலாம். தலைவலி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு விதமானதாக காணப்படும்.
ஒவ்வொரு விதமான தலைவலியும் ஒவ்வொரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

தலைக்குள் இடி இடிப்பது போன்ற தலைவலி ஒரு நிமிடத்திற்கு மேல் ஏற்பட்டால் அது மூளையில் சிறியதாக இரத்த கசிவு ஏற்பட்டதை உணர்த்துவதாகும். இவ்வாறு அடிக்கடி தலைக்குள் இடி இடிப்பது போன்று இருந்தால் உடனே மருத்துவரின் நாடுவது அவசியம் ஆகும்.

தலைவலி ஒரே மாதிரியாக இருக்காமல், வலி ஏற்ற இறக்கத்தோடு இருந்தால், அவ்வப்போது ஏற்பட்ட குருதி நாள நெளிவு அல்லது ஒற்றை தலைவலியாக இருக்கலாம் என்று அர்த்தம்.

தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்.

வலி தலையில் இல்லாமல் கண்களுக்குப் பின்புறமாகவோ அல்லது கண்களை சுற்றியோ இருந்தால் உங்களுக்கு சைனஸ் உள்ளதை குறிக்கும்.

நெற்றியின் இரண்டுப் பக்கங்களிலும் வலி அதிகமாக காணப்பட்டால் அது ஏதாவது ஒரு இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குறிப்பாக 50 வயதை தாண்டியவர்களுக்கு இது மிகப் பொருந்தும்.

இரவில் தூங்கும் போது மூக்கு எரிச்சல் இருந்தால் அது காலையில் எழுந்திருக்கும் போது தலைவலியை உண்டாக்கும். இந்த தலைவலி சைனஸ் இருப்பதை குறிப்பதாக இருக்கலாம்.

பக்கவாதம், தலைவலி, மயக்கம் மற்றும் தலைச்சுற்று போன்றவை ஒரு மாதத்திற்கு மேலாக காணப்பட்டால் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு தொடர்ந்து காணப்பட்டால்
மருத்துவரை அணுக வேண்டும்.
நன்றி : IBC Tamil