முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
- ஒவ்வொரு முறையும் பசி ஏற்பட்ட பின்னர், பசி எடுத்தவுடன் சாப்பிடவேண்டும். அப்போது தான் உண்ட உணவு செரித்து விட்டதாகக் கருத முடியும். இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். உடலில் நச்சுப் பொருள்கள் தேங்கி பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
- சரியான நேரத்தில் சாப்பிடவும்.
- உணவில் எதை நீக்கலாம் என்பதைவிட, எதைச் சேர்க்கலாம் என யோசியுங்கள். பருப்பு, முட்டை (40 வயதுக்கு மேல் மஞ்சள் கரு வேண்டாம்). உள்பட புரதச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுங்கள்.
- உணவை வாயில் வைத்து சுவைத்து கூழ்போல் ஆகும் வரை நன்றாக மென்று பின்னர் விழுங்க வேண்டும். இது உணவு எளிதில்ஜீரணமாக உதவுகிறது. எல்லா சத்துக்களும் கிடைக்கவும் உதவுகிறது.உணவை மெல்லும் போது வாயை மூடி மெல்ல வேண்டும்.
- முகம்,கைகள் நன்றாகக் கழுவி விட்டு சாப்பிட உட்காரவும்.
- சாப்பிடும் போது மிகவும் தளர்வாக, அமைதியாக இருக்கவேண்டும். மனக் கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுகளோடு சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வழி வகுக்கும்.
- சாப்பிடும் போது அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிஷங்ளுக்கு முன்பாக 2 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுபோல் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே வயிற்றில் இருந்து குடலுக்கு தள்ளப்பட்டு விடும். சாப்பிடும் போது காரமாக இருந்து, கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.
- சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. உணவு வகைகள் ஜீரணமாகவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத் துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால்ஜீரணக் கோளாறுகள் ஏற்படும். எனவே சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குப் பின்னர்தான் தூங்கவேண்டும்.
- சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் ஜீரண உறுப்புகள் முறையாகச் செயல்பட போதிய ரத்தம் கிடைக்காது. சாப்பிட்டு மூன்று 3 அல்லது 4 மணி நேரத்துக்குப் பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது நல்லது.
- சாப்பிடவுடன் பெல்டை தளர்த்துவதால் சிறுங்குடல் அடைபடவோ அல்லது முறுக்கிக் கொள்ளவோ சந்தர்ப்பம் உள்ளது.
- காலை உணவைத் தவிர்க்கக் கூடாது
- சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.
- சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்றுவிடுவதால் ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும்.குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும்.
- உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எப்போதும் அதிக குடிநீர், கலோரி இல்லாத பானங்களைக் குடிக்கவும்.
- டிவி பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடாதீர்கள், உணவு மூச்சுக்குழாய்க்குள் போய் அடைத்துக்கொள்ளும்.அப்போது மனம் ஜீரணச் சுரப்பிகளை சுரக்கத் தூண்டுவதில்லை
- குறைவான வெளிச்சத்தில் சாப்பிடாதீர்கள்.
- நமது சாப்பாடு காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்க வேண்டும்.
- சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் (salad) சாப்பிட வேண்டும்.
- காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும்
நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
உண்ட
உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே
செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். எனவே சாப்பிட்டு 1-2 மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
- பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.இதனால் அதிக நார்ச்சத்தும் பிற சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்
- சாப்பிடவுடன் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள அமிலத்தன்மை நாம் உண்ண உணவில் உள்ள புரத பொருளை கடின பொருளாக மாற்றிவிடும், அதனால் ஜீரணம் செய்வது கடினம்.மேலும் உணவிலிருந்து பெறப்படும் இரும்பு சத்தின் அளவையும் டீ குறைத்து விடுகிறது.
- வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. அதிகமாக சாப்பிடுவதும் தவறு.
- சமைப்பதற்கு முன் இறைச்சியில் உள்ள கொழுப்பையும், கோழிக்கறியில் உள்ள தோலையும் நீக்கி சாப்பிட வேண்டும்.
- கோதுமை, கம்பு போன்ற தானியங்களை மாவாக்கி பின்னர் சல்லடையால் சலிக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் ஊட்டச் சத்துக்களும் நார்சத்தும் குறைந்துவிடும்.
- உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. தேவையான அளவுக்கு குறைவாகவும் இருக்கக்கூடாது
- வெப்பம், அதிக ஒளி, காற்று ஆகியவை ஆன்டி-ஆக்டெசிடென்ட் வைட்டமினுக்கு எதிரானவை, எனவே காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திறந்து வைப்பதில் பலன் இல்லை. குக்கரில் காய்கறிகளை அவிப்பதால் சத்துக்கள் வெளியேறாது.
- "ஃபாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே உங்கள் பாக்கெட்டுக்கும் (பணம்) உங்கள் இதயத்துக்கும் நல்லதல்ல.
- பொரித்த உணவை விட அவித்த உணவு மிகவும் நல்லது.
- உயரத்திற்கு ஏற்ற எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- உணவில் ஆறு சுவையும் இருக்க வேண்டும் .எந்த சுவை அதிகம் பிடிக்கிறதோ அதை அதிகம் உண்ணலாம்.சுவையை ரசித்து ருசித்து உண்ண வேண்டும்.
கருத்துகள்
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
1. உடலினுக்கு தேவையான பொருந்திய உணவு.
2. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3. வாயை மூடி நன்கு மென்று சாப்படுதல். வாயை மூடாமல் எவ்வளவு நேரம் மென்று கொண்டிருந்தாலும் உமிழ் நீர் சுரக்காது. உமிழ் நீர் கலக்காத உணவு தரமான உணவுச்சத்தியாக மாறாது.
4. இந்த உணவில் இருந்து நன்மை பெறுகிறோம் என்ற எண்ணம் வேண்டும்.
5. உணவு உண்ணும் போது பேசக்கூடாது. (பேச வாய் திறக்கும் போது உட்புகும் காற்று உமிழ் நீருடன் உணவை சேரவிடாது தடுத்து விடும். சீரணம் கெடும்.)
6. கண்களுக்கும் வேறு வேலைகள் கொடுக்க்க் கூடாது.
7. மன உணர்வுகளுக்கு (கோபம், வருத்தம், பயம் போன்ற) ஆட்பட்ட நேரங்களில் உணவருந்துவதை தவிர்க்க வேண்டும்.
8. உணவருந்தும் போதும், முன்னும், பின்னும் தண்ணீர் தேவைப்படாது. ஏதேனும் காரணத்தால் தேவையெனில் மிக அளவாகப் பயன்படுத்தவும்.
9. தாகம் வரும் போது மட்டும் தண்ணீர் அருந்துக.
10. இயல்பான கிணற்றின் நீரே சிறப்பு.
11. கொதிக்க வைத்த தண்ணீர் கூடாது.
12. நவீன முறையில் சுத்தப்படுத்தப் பட்ட நீர் நஞ்சே.
13. மண்பானை நீர் சிறப்பு.
14. தண்ணீர் அருந்தும் போது வாயை மூடி உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
15. சாப்பிடும் போதும், நீரருந்தும் போதும் தரையில் காலை மடித்து அமர்ந்து உண்ணுதல் வேண்டும்.
16. நாற்காலியில் காலை தொங்கவிட்டபடி சாப்படுவது கூடாது.
17. கை, கால் முகம் கழுவிய பின் உணவருந்தல் வேண்டும்.
18. குளித்த பின் முக்கால் மணி நேரமாவது இடைவெளி விட்டு பின் சாப்பிடுதல் வேண்டும்.(உடல் வெப்பம் தன்னிலைக்கு வர வேண்டும்)
19. சாப்பிட்ட உடன் குளித்தல் கூடாது. குறைந்த்து இரண்டரை மணி நேரமாவது இடைவெளி தேவை.
காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண்தான்.
பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.
ஒருமுறை பாலைக் காய்ச்சிய பின், அதை ஃபிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்த பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.