முதல் உணவு தாய்ப்பல் தான்:
குழந்தயின் முதல் வருடத்தின் சத்துணவு பெரும்பாலும் தாய்ப்பால் தான்
எப்போது புட்டிப் பால்:
தாய்ப்பால் சுரக்காவிட்டால் என்ன செய்ய?தாய்ப்பால் சுரந்தும் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போய்விடுகிறது. என்ன காரணம்? பாலில் லாக்டோஸ் என்பதுதான் முக்கியப் பொருள். குழந்தைக்குத் தொடர்ந்து வயிற்றில் ஏதாவது கோளாறு என்றால் இந்த லாக்டோ சத்தை குழந்தையால் ஜீரணிக்க முடிவதில்லை. எனவே வயிற்றில் உப்புசம், இதைத் தொடர்ந்து பீய்ச்சியடிக்கும் பேதி.ஆனால் ஒன்று, வயிற்றுப்போக்கை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பால் அலர்ஜி என்று முடிவெடுப்பது தப்பு. குழந்தை பிறந்ததும் இரண்டிலிருந்து ஆறு வாரங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும்போது இப்படி ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு முடிவுக்கு வரலாம்.
வேறுசில சமயங்களிலும் தாய்ப்பால் அளிக்கமுடியாத துரதிர்ஷ்டமான நிலை ஏற்படக்கூடும். அம்மாவுக்குப் புற்றுநோய். அதற்கெதிராகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டிய நிலை. அல்லது அவளுக்கு மன இறுக்கம்போன்ற சைக்கலாஜிக்கான கோளாறுகள் காரணமாகத் தொடர்ந்து மருந்தை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாமா? டாக்டரை கலந்து நன்கு ஆலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவெடுங்கள்.
குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பவுடர் பால் கொடுக்கும்போது ஒரு விஷயத்தை மறக்காதீர்கள். எந்த அளவு பவுடருக்கு எவ்வளவு நீர் கலக்கவேண்டும் என்பது போன்ற விவரத்தை பால் டின்னின் மேற்பகுதியிலேயே அச்சடித்திருப்பார்கள். அதன்படிச் செயல்படுங்கள். (குழந்தையின் முதல் இரண்டு மாதங்களுக்கு வேண்டுமானால் பாலைச் சற்று நீர்க்கக் கொடுக்கலாம்). பால் பவுடர் தயாரிப்பாளரின் ஆலோசனையை அப்படியே கடைப்பிடியுங்கள். காரணம், பலவித சோதனைகளுக்குப் பிறகு அனுபவபூர்வமாக வந்த தீர்மானமாக அது இருக்கும்.
கூடுதல் இரும்பு சத்து தேவை:
பாலில் கால்ஷியம் சத்து ஏராளம். பலவித வைட்டமின்களும் உண்டு. ஆனால் இரும்புச்சத்து என்பது கிடையாது. குழந்தை நன்கு வளர இரும்புச் சத்தும் தேவை. இரும்புச்சத்து அடங்கிய வைட்டமின் சொட்டுமருந்துகள் உண்டு. அவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.முடிந்தவரை நள்ளிரவில் பால் கொடுப்பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடைவில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்றுநோய்கள் உண்டாகக்கூடும்.
திடஉணவு
குழந்தைக்கு நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டதா? பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீரை அளிக்கலாம்.
ஐந்தாவது மாதம்:
ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை முதல் சாய்ஸ். மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி வாழை அளிப்பதைத் தவிர்க்கலாம். வைட்டமின் ‘சி’ சத்து நிறைய அடங்கியவை _ சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை. குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடியவைகளும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள்களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது.பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்குக் கூழ் போலாக்கி கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.
ஆறாவது மாதம்:
ஆறாவது மாதத்தில் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம். இட்லியுடன் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம். (குழந்தையின் வளர்ச்சிக்கு கொழுப்புச் சத்தும் தேவைதான்) ஆனால் குடும்பத்தில் பலரும் ‘கன’வான்கள் என்றால் இப்படி நெய், எண்ணெய் சேர்ப்பதை சற்றுத் தள்ளிப்போடலாம்.இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட, தெளிவான ரசம் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்குப் பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயாராகும்.
சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி புரதம் செறிந்த இறைச்சி, மீன், முட்டை,கோழிக் குஞ்சின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்ககுவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாக உள்ளதாயும் இருத்தல் அவசியம்.
ஏழாவது மாதம்:
ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கூட கொடுக்கலாம்.தோசை, பால் குறைவான மில்க்ஷேக் சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.
பத்தவது மாதம்:
குழந்தைக்குப் பத்துமாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண்பொங்கல் போலாக்கி காய்கறித்துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம். காய்கறிகளைக் குழந்தை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கிக் கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே ஒரு வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாமே.காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டபிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்துவிடுங்கள்.
எப்போதுமே ஒரே நாளில் புதிதாக இரண்டு வித உணவு வகைகளைக் குழந்தைக்குக் கொடுக்கவேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.
முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.
உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப்படியான சர்க்கரை சொத்தைப் பல்லை உண்டாக்கும், பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகும்.முக்கியமாக 1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும்.குழந்தையின் சுவை உறுப்பு நன்றாக வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை.
உணவைத் திணிக்காதீர்கள்:
சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது. குழந்தை திட உணவை புறக்கணித்தால் அதனை சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்க கூடும்.குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயப்படுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்குழம்பு போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டித்ததன்மையும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும்.
குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள்.அவன் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.
குழந்தையைப் பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த தின்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.
புளிக்காத, ஃப்ரிட்ஜில் வைக்காத தயிர்சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள்.குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
சற்றேறக்குறைய இந்த வயதிலேயே குழந்தை தன்னுடைய வாயில் எல்லாப் பொருட்களையும் போட்டுக் கொள்வதைக் காணலாம். இப்பொழுது அதன் கையினால் எடுத்த சப்பி சாப்பிடத்தக்க உணவு வகைகளை அறிமுகம் செய்விக்கலாம். தானே சாப்பிடும் குழந்தைக்கு எல்லாம் ருசியாக இருக்கும். இது குழந்தையை திறமையுள்ளவனாகவும் மாற்றும்.கையில் பிடித்துக் கொள்ளும் வகையிலான பெரிய துண்டு ரொட்டி ,அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரெட்டு போன்றவை கொடுக்கலாம்.
அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவிபுரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது செளகரியமாக அமையும். விரல் போன்ற உருவில் இருக்கும் உணவுகள் இதே காலகட்டத்தில் குழந்தையின் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், தானே உணவு உட்கொள்ளும்போது குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டும். அவன் ஒரு துண்டைக் கடித்து மென்று பின் அதை விழுங்குவதில் கஷ்டப்படலாம் எனவே, அவனுக்கு கொட்டைகள், முலாம்பழம், தானியங்கள், உருளைக்கிழங்கு வறுவல், சாக்லேட்டுகள் முதலியவைகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம்.வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் (இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை, அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.
2 வயதுக்கு மேல்
2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும். இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்த உணவை விட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.
எண்ணையில் பொரித்த உணவுகளை விட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.
கடைகளில் வாங்கும் உணவுகள், `பாஸ்ட் புட்'களை கூடியமட்டும் தவிர்த்துவிடுங்கள்.
இனிப்புச் சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களை கொடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக பாலையும், தண்ணீரையும் கொடுங்கள்.
பள்ளி செல்லும் போது
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது. என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து டிபன்பாக்ஸில் சாப்பாடு கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை ப்ரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவில் நீங்கள் குழந்தைகள் மீது கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய சத்துணவின்றி குழந்தைகள் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள்.ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.மேலும் அறிய
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு
மூளை வளர என்ன சாப்பிடலாம்?
கருத்துகள்
One Smoothie, Your Way
This is a great recipe for getting nutrition
½ cup plain, nonfat yogurt
1½ cups (12 ounces) 1 percent milk or soymilk
1 teaspoon vanilla
1 banana (or 1 frozen peeled banana)
Agave nectar (optional)
1. Combine yogurt and ½ cup of the milk, pour into ice cube trays,and freeze overnight.
2. Put frozen yogurt-milk cubes in to blender. Add vanilla, the rest of the milk, and the banana.
3. Blend until smoothie consistency. Taste for sweetness. If not sweet enough, sweeten with a dash of agave nectar.