குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கான சத்து தாய்ப்பாலில் தான் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு தாயும் தன் கடமையை உணர்ந்து பாலூட்டுவதை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.
தாய்ப்பாலில் ஆண்டிபாடிஸ் இருப்பதால் பிறந்த குழந்தைக்கு எந்தவித வைரஸ் மற்றும் பாக்டீரியல் இன்ஃபெக்ஷன்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
தாய்ப்பால் கலப்படமற்றது:
அதுவும் எந்த பாட்டிலிலும் போடாமல் நேரடியாக குழந்தைக்குக் கொடுக்கப் படுவதால் கலப்படமில்லாத பரிசுத்தமான பால் குழந்தைக்குக் கிடைத்து விடுகிறது.
தாய்ப்பால் முழு சத்துகள் நிறைந்தது
மேலும் இந்தப் பாலில் கொழுப்புச் சத்து, சர்க்கரை, தண்ணீர், புரதச் சத்து தேவையான அளவில் இருப்பதால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்கள் கிடத்துவிடுகிறது.
அலர்ஜி வாய்ப்பு குறைவு:
தாய்ப்பால் சாப்பிடும் குழந்தைதக்கு உடலில் எந்தவித ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி ஒவ்வாமை ஏற்பட்டாலும் அது தாய் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் ஏதோ ஒன்றின் ஒவ்வாமையினால்தான் இருக்கக் கூடும்.
அதிக வெயிட் போடாது:
தாய்ப்பால் சாப்பிடும் குழந்தைகள் வெயிட் போடாமல் ஒல்லியாகத்தான்இருப்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக இருப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை எடை கூட வில்லையேஎன்று மிக விரைவில் தாய்ப்பாலுடன் பாட்டில் உணவுகளுக்கு மாறிவிடுவார்கள்.இப்படிச் செய்வது குழந்தையின் உடல்நலத்துக்கு நல்லதல்ல.பாட்டில் பாலில் கொழுப்புச் சத்து சற்று அதிக சதவிகிதத்தில் இருப்பதால் எடை கூடத்தான்செய்யும்.ஆனால் ஆரோக்கியமானதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்குழந்தைகள் எதிர்காலத்திலும் அதிக வெயிட் போடாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். தாய்ப்பால் குழந்தைகளிடம் ஓபிஸிட்டிக்கான ரிஸ்க் மிகவும் குறைவு. அதே போல குழந்தையின் எலும்புவளர்ச்சிக்கும் தாய்ப்பால் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நுண்ணறிவு வளர்கிறது:
சமீபத்தில் கனடிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஐக்யூ டெஸ்ட்எடுத்துப் பார்தார்கள். இதில் தாய்ப்பால் சாப்பிட்டு வளர்ந்த குழந்தைகளின் ஐக்யூ லெவல் தாய்ப்பால் அளிக்கப்படாத குழந்தகைளவிட சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!
தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!
எதுவரைத் தாய்ப்பால் கொடுக்கலாம்:
குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலிருந் ஒருவருடம் வரை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தாய்ப்பால் கட்டாயம் தேவை. இந்தஒரு வருட காலத்தில் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.ஒரு நாளைக்கு எட்டு ஃபீடிங் கொடுக்கலாம். அடுத்த ஆறு மாதங்களில்மற்ற உணவு முறைகளுடன் தாய்ப்பாலும் கொடுக்கப்படவேண்டும்.சிலர் மற்ற உணவுகள அறிமுகப்படுத்தியவுடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அப்படிச் செய்யாமல் மற்ற டின் ஃபுட் கொடுக்கத் தொடங்கியபின் எட்டு ஃபீடிங்காக குறைத்துக் கொள்ளலாம்.
எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.
மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்
குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.
சில பிரச்சனைகளும் தீர்வும்:
இரவு நேரங்களில் ஃபீடிங் கொடுத்தால் தாயின் உடலில் ஹார்மோன்களின்செயல்பாடு அதிகரித்து பால் சீராகச் சுரக்கும். அதிகமாக பால் சுரக்கும்போது குழந்தைக்கு ஃபீட் செய்தால் உரிஞ்சி எடுக்க முடியாமல்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.அதனால் இந்தச் சமயத்தில் தாய்ப்பாலைப் பிழிந்து எடுத்து சுத்தமான பால் புட்டியில்போட்டுக் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும்போது மார்பகத்தில் வலி ஏற்படும்.ஆனால் போகப் போக உடல் இதற்குப் பழகிவிடும்போது சரியாகிவிடும்.
தாய்ப்பால் கொடுக்கும் முன்பு மார்பகங்களை இளஞ்சூடான துணியால் மென்மையாக ஒத்தி எடுங்கள்.தாய்ப்பால் கொடுக்கும் முன்பு இளஞ்சூடான தண்ணீரில் குளித்தால் பால் சுரப்பது கொஞ்சம் ஈஸியாகிவிடும்.
ஒரே பொஸிஷனில் ஃபீட் செய்யாமல் உங்கள் நிலையைக் கொஞ்சம் மாற்றியும் தாய்ப்பால் கொடுத்துப் பழகலாம். வலி நிவாரணிகள் மருத்துவரின் ஆலோசனப் படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுத்து மார்பக நிப்பிள்களில் வெடிப்பு ஏற்பட்டால், செயற்கயான மாய்சுரஸர்கள் பயன்படுத்தத் தேவையில்ல.தாய்ப்பாலே மாய்சுரஸராக வெடிப்ப ஆற்றிவிடும்.
தாய்ப்பால் கொடுக்கத்தொடங்கும் தாய்மார்களுக்கு ஆரம்பத்தில் உடல் அளவிலும், மனசிலும் சில அசௌகரியங்கள் ஏற்படும்.மருத்துவரின் ஆலோசனைப் படியும், வீட்டில் உள்ள பெரியவர்களின், குறிப்பாக அம்மாவின் யோசனைகள்படி நடந்து கொண்டால் தாய்ப்பால்கொடுப்பது சுலபமாகப் பழகிவிடும்.
பால் கொடுப்பது தாய்க்கும் நல்லது:
சரி.. தாய்ப்பாலினால் குழந்தைக்கு மட்டும்தான் நன்மை கிடக்குமா? தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும்சமபங்கு நன்மைகள் கிடைக்கும்.
டி.பி., ஹெபாடிடிஸ், எய்ட்ஸ் நோயாளிகள் மட்டும் பாலூட்டுவதைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
பாலூட்டும் தாய்மார்கள் எந்த மாத்திரகள் எடுத்துக் கொண்டாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளக் கூடாது. சில மருந்துகள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும்.
தாய்ப்பாலின் பெருமையை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து குழந்தைகளுக்குப் பாலூட்டி வந்தால் ஆரோக்கியமான குழந்தைகளை இந்தசமுதாயத்துக்கு அளிக்கலாம்.

- பாலூட்டும் தாய்மார்களுக்குஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளிப்படுவதால் பிரசவத்தின் போது விரிந்த கருப்பை நார்மலானஅளவுக்குச் சுருங்கத் தொடங்கும்.
- பிரசவ காலத்தின்போதுஉடலில் சேர்ந்துள்ள அதிகப்படி கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை இளைத்து சிக்கென்றுதிரும்புவார்கள். இவை இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த வரப்பிரசாதங்கள்.
- மாதவிடாய் தள்ளிப்போடப்படுவதால்இயற்கையான முறையில் கரு உண்டாவது தடுக்கப்படுகிறது.
- தொடர்ந்து இருபத்துநான்கு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு ஓவரியன் மற்றும் மார்பக புற்றுநோய்தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.
- பாலூட்டுவதால் உடல்எடை இளைத்து அழகுகூடுமே தவிர, எந்தவிதத்திலும் தாயின் அழகு பாதிக்கப்படாது என்பதை உறுதியாகச் சொல்லாம்.
- பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தையின் மனதளவில் நெருங்கி ஒரு அரவணைப்பு கொடுக்க இயலும். குழந்தைக்கு ஒருவித பாதுகாப்புஉணர்வு இதனால் ஏற்படுகிறது என்பது உண்மை.
- பாலூட்டுவதால் மனதளவில்ஏற்படும் டிப்ரஷன்கூட குணமாகி இழந்த உற்சாகத்தைத் திரும்பிப் பெற முடியும்.

கருத்துகள்