காலை எழுந்தவுடன் தூக்கக் கலக்கத்தில் அறைகுறையாகப் பல் விளக்குவது, நாள் முழுவதும் நொறுக்குத்தீனி, இரவு பிரஷ் செய்யாமல் படுப்பது போன்றது பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் விஷயங்களைச் செய்து வருகிறோம். பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இருதயம் உட்பட மற்ற அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.
பல் சுத்தமாக இல்லாவிட்டால், உணவை உட்கொள்ளும்போது,அசுத்தப் பற்களில் இருக்கும் கிருமிகளும் உள்ளே செல்கின்றன. உள்ளே சென்று இரைப்பையையும், சிறு குடலையும் அடைந்து, உணவைக் கெடுத்து, புளிக்கச் செய்து அஜீரணத்தை எளிதாக உண்டாக்குகிறது.
மேலும் உள் நாக்கையும், மூக்கையும், காதுகளையும், நுரையீரல்களையும் இந்தக் கிருமிகள் அடைந்து அந்த அங்கங்களில் நோயை உண்டாக்குகின்றன.
ஒருவனுக்குச் சொத்தைப் பற்கள் இருந்தால், அவன் சுவாசிக்கும் காற்று, அப்பற்களிலுள்ள கெட்ட வாயுக்களோடு நிறயைக்கலந்து உள்ளே செல்கிறது. இந்த கெட்ட வாயு ரத்தத்தோடு கலந்து அனைத்து அங்கங்களுக்கும்கெடுதல் ஏற்படுத்தி விடுகிறது.
வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சரும நோய், தலைவலி இவற்றுக்கும்பற்களின் ஆரோக்கியத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டு.
பற்களின் ஆரோக்கியம் என்றால் சொத்தைப் பற்கள் இல்லாமல், கிருமிகள் வளர வழியில்லாமல் சுத்தமாகப் பராமரித்துவருவதும், ஈறுகளில் சீழ் இல்லாமல் பராமரித்து வருவதே பற்களின் ஆரோக்கியமாகக் கருதுகிறோம்.
ஒரு பல் அழியத் தொடங்கினால், பக்கத்துப் பல்லும் விரைவில் அழியும். அதனால் ஒரு பல்லில் பிரச்சினையிருந்தால், அந்த நோய்க் கிருமி அடுத்த பல்லைத் தாக்கும் முன்பு மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.
பலர் அவர்களுடய அலட்சியமான பராமரிப்பாலும், கெட்ட பழக்கங்களினாலும் மட்டுமே பல் நோய்க்கு ஆளாகிறார்கள்.
பற்களை கையில் தேய்ப்பது நல்லதா? பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா? பற்பொடியை விட பற்பசை சிறந்ததா?
Flouride கலக்கப்பட்டுள்ள பற்பசையக் கொண்டு மிருதுவான பிரஷ்ஷினால் பல் துலக்குவதே சரியானமுறை. பிரஷ்ஷினால் ஒரு முறையில் இரண்டு பற்களை மட்டுமே சுத்தம் செய்ய முடியும். எனவேஅடிக்கடி திசைகள மாற்றியபடி பல் துலக்க வேண்டும்.
குறைந்த ஐந்து நிமிடம் பல் துலக்கினால் மட்டுமே பற்களில் படிந்துள்ள கிருமிகள் நீங்கும். இந்தக் கிருமிகள் அதிகப்படியாக உருவாவதற்குக் காரணம், இரவில் பல் துலக்காமல் உறங்கச் செல்வதான்.இரவு உணவு உண்டபின் பல் துலக்காமல் படுக்கைக்குச் செல்வதால் பற்களில் அகப்பட்டிருந்த உணவு பொருட்கள் பாக்டீரியாக்களாக உருமாறி ஒரு வித அமிலத்தை வெளியிடுகிறது. இந்த அமிலம் பற்களின் எனாமலைப் பாதிக்கும்.
எனவே ஆரோக்கியத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கும் பற்களைச் சுத்தம் செய்ய இரவில் இரண்டு நிமிடம் ஒதுக்க முடியாதா என்ன? சிறு குழந்தகளை, சிறு வயதிலிருந்தே இரண்டு வேளை பல் துலக்கவும் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகு வாய்கொப்பளிக்கவும் பழக்கிவிடுங்கள்.
எலுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழவகைகள் பற்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. உணவு உண்டபின் இந்த பழவகைகளில் ஒன்றைச் சாப்பிட வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த பழங்கள் நார்சத்தை அளித்து உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்து பற்களில் உணவினால் படிந்திருக்கும் சர்க்கரையைக் கரையச் செய்கிறது. சர்க்கரை அயிட்டங்கள் பற்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.
சாக்லெட், ஐஸ் க்ரீம், ஜாம்,ஜெல்லி, இனிப்புகள் போன்றவற்றை, குறைவான அளவில் எடுத்க்துகொள்ள வேண்டும். இனிப்பு வகைகளத் தனியாக எடுத்துக்கொள்ளாமல் உணவு உண்ணும்போது எடுத்துக் கொள்ளலாம்.சாப்பாடு கடித்துச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரக்கப்படுவதால் சர்க்கரையும் இதில்கரைந்துவிடும்.
இறைச்சி, பால், காய்கறிகள், கீரைவகைகள், விதைகள் இவை பற்களுக்கு நன்மை தரக்கூடிய உணவுப்பொருட்கள். எனவே, இவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
BadBreath: சிலர் பேசினாலே துர்நாற்றம் ஏற்படும். இது பற்களின் பராமரிப்பைக் காட்டிலும் நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாததால் ஏற்படும் துர்நாற்றம். இரவிலும், காலையிலும் நாக்கை அதற்கான ஸ்க்ரேபர் பயன்படுத்தி சுத்தம் செய்தால் நாள் முழுவதும் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
பல் துலக்கும் பிரஷ்ஷை இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பிரஷ்ஷின் ஷேப் மாறத் தொடங்கும் முன்பு மாற்றிவிட வேண்டும். ஒவ்வொரு முறை சளி, காய்ச்சல் வநது குணமான பின்பு பிரஷ்ஷை மாற்ற மறந்துவிடாதீர்கள்.
சிறு குழந்தைகளுக்குப் புட்டிப் பால் கொடுத்தவுடன் பற்களை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். புட்டிப்பால் கொடுத்துவிட்டு அப்படியே உறங்க வைப்பது நல்லதல்ல. சிறு குழந்தகள் சாக்லெட்டுகளஅதிகம் விரும்பிச் சாப்பிடுபவராக இருந்தால், சாக்லெட்டு சாப்பிட்டவுடன் பழ வகைகள் ஏதாவது ஒன்று சாப்பிடக் கொடுத்தால் பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கும் சாக்லெட் விடுபட்டுவிடும்.
காலை, இரவு இருநேரமும் பல் துலக்குவதை பழக்கப்படுத்திக் கொண்டால் மட்டுமே பல் நோய்களிலிருந்து விடுபடமுடியும்.
மேலும் தொடர்புடைய கட்டுரை:
டூத் பேஸ்டில் ஃபுளூரைடு அவசியம் தானா?

கருத்துகள்
You will need:
Lemon juice from half an organic lemon
1/4 cup of baking soda
Instructions:
Squeeze the lemon juice into the baking soda.
The mix will bubble a bit. Allow it to sit.
Dip a cotton ball into the baking soda mix and apply to your teeth.
Let the mix stand on your teeth for about a minute.
Brush your teeth as you normally would to remove the acid. If you let it sit indefinitely, it’ll start to erode your teeth