19 January 2009

உயிர் காக்கும் தேநீர்

காபி, தேநீர் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் மருந்துபோல் தினமும் பால் கலக்காமல் ஒரு கப் தேநீர் அருந்தி வருவது நல்லது. இது உயிரைக் காப்பாற்றும். மருத்துவச் செலவையும் முழுமையாகக் குறைக்கும்.

புற்று நோய் மற்றும் இதயநோய்களை தேநீர் நன்கு தடுக்கும்.

உலகம் முழுவதிலிருந்து பிரதிநிதிகள் தேநீர் அருந்துவதால் ஏற்படும் நலம் பயக்கும் நன்மைகளை அறிய வாஷிங்டன் டி.சி.யில் 1999இல் கூடினார்க்ள.

இரண்டாவது சர்வதேச விஞ்ஞானிகள் கருத்தரங்கு இங்கே நடைபெற்றது.

அதிகமாகப் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதைவிட ஒரு கப் தேநீரில் இருந்து கிடைக்கும் சக்தி மாபெரும் நோய்த்தடுப்புச் சக்தியாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

காய்கறி சாலட் ஒரு கப்போ, பழச்சாறு ஒரு கப்போ சாப்பிட முடியாத நிலையில் ஒரு கப் தேநீர் சாப்பிடுங்கள்.

பிரிட்டனில் தேநீர் அருந்துபவர்கள் அதிகம். இதைப் பார்த்து அமெரிக்கர்கள் தேநீர்ப் பிரச்சாரம் தாங்க முடியாமல் அதற்கு மாறினார்கள். காபியிலிருந்து தேநீருக்கு மாறியதும் செலவு மட்டுமல்லை, புற்றுநோய், இதயநோய் அபாயம் பிரிட்டனில் உள்ளது போலவே குறைந்து போய்விட்டது.

பீஜிங் நகரில் உள்ள சீன மருந்து கழகம், ‘தேநீர், மருந்துபோல இருந்து புற்றுநோய் செல்களை மனித உடலில் முற்றிலும் அழிப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. எலிக்கும் சுண்டெலிக்கும் புற்றுநோய் செல்களை செலுத்தினார்கள். தேநீரையும் செலுத்தினார்கள். புற்றுநோயை வளரவிடாமல் தேநீர் தடுத்துவிட்டது. பெருங்குடலிலும் நுரையீரலிலும் தேநீர் அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது.

‘உலகம் முழுவதும் மாபெரும் நோயாக இதயநோய் முதலிடத்தை வகிக்கிறது. தேநீர் அதிகம் பருகும் பழக்கத்தால் வாழ்க்கை முறை மாறும். இதய நோய்களையும் பச்சை மற்றும் கறுப்பு தேநீர் முற்றிலும் தடுத்து நிறுத்துவதால் நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள் உடனுக்குடன் பிழைப்பார்கள். ஆயிரக்கணக்கான இதய நோயாளிகளின் வாழ்நாளும் அதிகரிக்கும். கோடிக்கணக்கான டாலர்களும் சேமிக்கப்படும்’ என்கிறார் இந்தக் கருத்தரங்களின் தலைவரும் அமெரிக்க சுகாதாரக் கழகத்தின் மூத்த உறுப்பினருமான டாக்டரான ஜான்வெய்ஸ்பர்கர்.

எனவே, சீனர்களைப் போல கறுப்புத் தேநீரோ அல்லது இந்தியர்களைப் போல பால் கலந்த தேநீரோ, ஜப்பானியர்களைப் போல கிரீன் டீயோ தினமும் ஒரு கோப்பையேனும் அருந்துங்கள். மருந்துபோல, இதுவரை பழக்கமில்லாவிட்டாலும் இனியாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

-----------வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி--------

Download As PDF

2 comments:

Several tips said...

மிகவும் நன்று

Sathik Ali said...

நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ’ தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே… சூடான லவங்கபட்டை டீ, பெண்களுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத் தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது. ஜலதோஷத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு `மசாலா டீ’யும், `சிலோன் டீ’யும் இதமளிக்கும்.
`கிரீன் டீ’யில் உள்ள `பாலிபினால்கள்’ அல்லது `பிளேவனாய்டுகள்’ ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்’ உதவுகின்றன. ` முலிகை டீ’யில் `டேனின்’ இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது முலிகை டீ அருந்த லாம். முலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி. `இஞ்சி டீ’ கொஞ்சம் காரசாரமாக இருந்தாலும், இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாக புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாக பெண்களுக்கு. `அஸ்வகந்தா டீ’ மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். டீயுடன் `ஸ்வீட் ருட்’ அல்லது `லீகோரைஸை’ சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டை புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும். ஏலக்காய் டீயை எவர் விரும்ப மாட்டார்? அது இதமளிக்கும், வாநதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்கு புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்ல சுவையாகவும் இருக்கும்.