பிக் ப்ளாங்க் 20

 


நான் ஒரு செயலை செய்தேன் என்கிறோம். உண்மையில் நான் என்ற உணர்வு தான் அந்த செயலை செய்ததா? இல்லை அந்த செயலுக்கு ஏதோ ஒன்று காரணமாயிருக்க நான் என்ற உணர்வு அதற்கு சொந்தம் கொண்டாடுகிறதா?

ஒரு செயல் எப்படி நடைபெறுகிறது. தானாக ஒரு செயல் உருவாக வழியில்லை என்று தான் பவுதீகத்தின் இயக்க விதிகள் கூறுகிறது. பிரபஞ்சத்தில் எதுவும் ஓய்வில் இல்லை. அனைத்தும் அதன் சூட்சும நிலையில் கூட இயங்கிக் கொண்டு அதிர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு  இயக்கம் மற்றதை பாதித்துக் கொண்டும், அந்த இயக்கங்களுடன் ஒத்தும், எதிர்விளைவாற்றிக் கொண்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் என்ற தன்னுணர்வும் அனுபவத்தினூடாக மாறிக் கொண்டிருக்கும் இயக்கத்தில் தான் இருக்கிறது. தன்னுணர்வின் இயக்கம் தான் பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கமாக வெளிப்படுகிறது. ஆனால் இங்கு நான் என்று உணர்வது நம் தன்னுணர்வையல்ல. நாம் யாரென்று அறிவில் உருவாக்கி வைத்திருக்கும் ஈகோவை. இந்த ஈகோ ஒரு போலியான phantom self  உணர்வு. இது எந்த செயலையும் செய்வதில்லை. ஆனால்  வெளியாகும் செயல்களுக்கு உரிமை கொண்டாடுகிறது.  

என் இதயத்துடிப்பும், மூச்சும் ,உடலில் நிகழும் அத்தனை இயக்களையும் நானே செய்கிறேன் என சொல்ல முடியது. எனில் அதை செய்வது யார்? ஆனால் நான் சாப்பிட்டேன், நான் கார் ஓட்டினேன். நான் எழுதினேன் என சில செயல்களுக்கு இந்த ஈகோ தைரியமாக உரிமை கொண்டாடுகிறது.
ஆனால் ஒரு அறிவியல் ஆய்வு கூறுகிறது ஒரு செயல் செய்யப்பட்ட பின் தான் மூளை அதை உணர்கிறது என்று. நாம் செய்வதாக நினைக்கும் செயல்கள் எதுவும் action அல்ல reaction. சூழலுக்கு நம் சப் கான்சியஸ் ரியாக்ட் செய்கிறது. பிறகு தான் அந்த சம்பவம் மூளைக்கு வருகிறது. இது பல சோதனைகளில் நிரூபணமாகியுள்ளது. நீங்கள் ஒரு கவிதை எழுதுவதென்றாலும் அது சப் கானசியஸ் தான் செய்கிறது. ஒரு பந்து வேகமாகமாக உங்களை நோக்கி வருகிறது. அது பற்றிய அனைத்து விளைவுகளையும் கணக்கிட்டு அதன் consequation ஆக உங்கள் கை தசைகள் தூண்டப்பட்டு அதை காட்ச் பிடிக்கிறது.  பின்னர் தான் அது மூளையில் உறைத்து தான் காட்ச் பிடித்ததாக பெருமிதப் படுகிறது.  ஒரு கார் மோதிய பின் தான் அந்த காட்சி நம் மூளையில் மோதுவதாக அனுபவப்படுகிறது. நாம் உணரும் எல்லா விஷயமும் கடந்த கண நினைவு. ஒரு தண்ணீரை தரையில் கொட்டினால் அது எப்படி தரையின் இயல்புக்கேற்ப தன் பாதையை கண்டுபிடித்து வழியுமோ அது போலத்தான் நம்மிலும் வெளிப்படும்  செயல்கள் ஒரு  ரியாக்சன். பின்னர் அதை நாம் உணர்ந்து நம் செயலாக அனுபவப் படுகிறோம்.

செயல்கள் எப்போது வெறும் ரியாக்சன் என்ற நிலையிலிருந்து நம் இச்சைக்கு வந்தது?

இயக்கம் எங்கிருந்து தொடங்குகிறது ? எலக்ட்ரான்களை சுற்ற வைப்பதும் அதன் திசையை தீர்மானிப்பதும் கான்சியஸ்னஸ். பின் அதுவே பல சக்தி வேறுபாடுகள், பல்வேறு நிலைகளில் இயக்கங்களாக வெளிப்படுகிறது. 
எல்லா பொருட்களிலும் இந்த இயக்கங்கள் தான் ஈர்ப்பு விசையை உருவாக்குகிறது. மைய நோக்கு விசை மைய விலக்கு விசை, காந்த துருவங்களின் ஈர்ப்பு விலக்கு என விசைகள் உண்டானது . விசைகள் காரணம் செயல்கள் உருவானது.

ஆதி உயிர்கள் எல்லாம் தன் இருப்பை தக்க வைக்கும் உணர்வு நிலைக்கு வந்தவுடன் தூண்டலுக்கு இசைந்து அல்லது எதிர் வினையாற்றின. அப்போது சிந்தனையோ, தன்னைபற்றிய அறிவோ, மூளையோ இல்லாத நிலை.
மரங்கள் சூரிய திசை நோக்கி செயலாற்றியது. வேர்கள் பூமிக்குள் விரைந்தன.  பின் தற்காப்புக்கான மெக்கானிசம் உருவாகி செயல்களுக்கு காரணமாகின. தொட்டால் வாடி செடியை தொட்டால் சுருங்கி விட காரணம் அது சிந்தித்து எடுக்கும் தீர்மானமல்ல. அதன் பயோ மெக்கானிசம் அப்படி டெவலப் ஆகி இருக்கிறது. கிரகங்கள் , பறவைகள் விலங்குகள், எல்லாம் இப்படி உள்ளார்ந்த ஒரு  சாப்ட்வேர் பேட்டர்ன்  தான் இயக்குகிறது. மனிதர்களிலும் இப்படித்தான் அனைத்தும் நடக்கிறது. ஒரு கொசு கடித்தால்  மூளையிடம் அனுமதி கேட்குமுன்னே கை தானாக அதை அடிக்கும்.

தினமும் செய்யும் செயல்கள், பல் தேய்ப்பது , உணவை மெல்லுவது, காரோட்டுவது ,மொபைல் நோண்டுவது என எல்லாமே அநிச்சையாய் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு கண்டிப்பாக எழ வேண்டும் என  அலாரம் வைத்து படுத்தால் அலாரம் அடித்ததும்  நமக்கு முன்னே உள்ளிருந்து வேறு யாரோ முழித்து அலாரத்தை ஆப் செய்து இன்னும் கொஞ்சம் தூங்கடா என அதட்டிவிட்டு படுக்க வைக்கிறார்கள். இனி  முகநூல் பக்கம் போகக்கூடாது வேலையை பார்ப்போம் என்று முடிவெடுத்தால் இடைக்கிடை எவனோ உள்ளிருந்து  வந்து கோர்த்து விடுகிறான்.
நம் எண்ணங்கள் எங்கிருந்தோ வருவது போல நம் செயல்களும் ஏதேதோ சிக்கலான இயக்கங்களின் விளைவாக, எதிர் வினையாக அனிச்சையாய் நடக்கிறது.  நம்மில் வெளியாகும் எல்லா செயல்களையும் கண்ணுக்கு தெரியாத சூட்சும கயிறு இயக்குகிறது . அது நடந்த பின்  மின்சார, ரசாயன மாற்றங்களை கடந்து அது நம் பார்வையில் கவனத்தில் மூளையில் புரஜெக்ட் ஆகிறது. கடந்து விட்ட அந்த நிகழ்வை எப்படி எடுத்துக்கொள்வது? என்று அதன் பின் ஒரு ரியாலிட்டியை கட்டமைக்கிறது.  ஒரு செயலை தன் விருப்பபடி செய்ததாக உணர்ந்து. அந்த செயலின் விளைவுகளில்  இன்ப துன்பம், நன்மை, தீமை உணர்கிறது. செயல்கள் மோனாலிசா புன்னகை போன்றது ஆளைப் பொறுத்து அர்த்தம் மாறும்.

மேதைகள், ஞானிகளில் செயல்கள் சூட்சும சக்தியே வெளிப்படுத்துகிறது
படைப்புகள் , அறிவியல் கண்டுபிப்புகள் எல்லாம்  ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள். கணித மேதை ராமானுஜன் காளி சொல்லிக் கொடுத்ததாக உணர்ந்தார். இளையராவுக்கு இசை இன்ஸ்டன்டாக வரும். செஸ் மாஸ்டர்களுக்கு அதன் மூவ்மென்டஸ் சிந்திக்காமலேயே மூளை கணக்கிட்டு காய் நகர்த்தும்.

ஒரு செயற்கை நுண்ணறிவு காரில் நாம் போக வேண்டிய இடத்தை சொன்னால் அந்த இலக்கை புரிந்து கொண்டு அதற்கு தேவையான அனைத்து செயல்களையும் சூழலுக்கேற்ப திறம்பட செய்து இலக்கை அடைகிறது. இதில் அந்த கார் தான் செய்தேன் என்று சொல்ல முடியுமா? அதன் மென்பொருள் அத்தனை சாத்தியக்கூறுகளையும் ஆய்ந்து சூழலுக்கு  எவ்வாறு எதிர் வினையாற்றி  கையாள வேண்டும் என்ற இன்ஸ்ட்ரக்சன், கோடிங் தான் சூட்சுமாய் அதை செய்கிறது.

அப்படி எனில் நாம் செய்யும் செயல்களுக்கு நாம் பொறுப்பில்லையா?  கர்மா யாருக்கு, தண்டனை யாருக்கு?

சரி எந்த செயலும் நம் ஈகோவால் செய்படவில்லை எனில் சப் கான்சியஸ் எனும் ஆழ்மனதால் நமக்கு விருப்பமான ரியாலிட்டியை உருவாக்க முடியுமா? அதாவது நமக்கு தேவையான பாரல்லல் ரியாலிட்டிக்கு நாம் நகர முடியுமா? இந்த சப் கான்சியஸ் யார்? ..stay tuned.

கருத்துகள்