நாம் யார் என்று நிர்ணையிப்பது நம் நினைவு. இந்த நினைவின் இருப்பிடம் நம் மூளையா? நான் அறியும் இந்த மூளை மாயை எனில் நம் நினைவு உண்மையில் எங்கு தான் இருக்கிறது?
உங்கள் கணினியின் மொத்த ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பார்க்க வேண்டுமானால் ஸ்க்ரினில் மெமரி ஸடோரேஜ் என்று ஒரு ஹார்ட் டிஸ்க் ஐகான் இருக்கும் . அதை க்ளிக் செய்ய வேண்டும். ஆனால் உண்மையிலேயே நம் ஃபைல்கள் கணினிக்குள்ளே நிஜ ஹார்ட் ட்ரைவில் காந்த சிக்னலாக இருக்கும் .அதை நாம் பார்க்க முடியாது . அதில் தான் இந்த தகவல்களை எப்படி கையாள வேண்டும் என்ற ஆப்பரேட்டிங் மென்பொருளும் கூட பைனரி சிக்னலாக அங்கு தான் இருக்கும் . இது போல் தான் நாம் என்பது யார் ? நம்மால் தொடர்பு கொள்ள முடிகிற நினைவுகள் எவை ? அதை எப்படி மெடிரியலாக உணர்வது என்ற தகவல் எல்லாம் இடம் காலம் பொருளற்ற வேறு பரிமாணத்தில் இருக்கிறது. அது தன் உணர்வில் மாயையை உருவாக்கி வெளிப்படுத்திக் கொள்ளும் போது அனைத்தும் அணு , செல் , நரம்பு, மூளை, உடல், உலகம் என மெட்டீரியல் ஆக ப்ரொஜெக்ட் செய்கிறது. அன்பு ,கோபம் , அமைதி , காதல் மகிழ்ச்சி என நம் உணர்வுகளும் கூட அப்படிப்பட்ட விர்சுவல் அனுபவம் தான்.
அந்த பிம்பத்தில் நாம் நம்மை அடையாளப் படுத்துகிறோம்.
நம் அனுபவங்கள் சிந்தனைகள் எல்லாம் தோன்றும் போதே அதற்குரிய நரம்புத் தொடர்புகளை Synaptic plasticity என்ற முறையில் விர்சுவலாக மூளையில் உருவாக்கி விடும். ஹார்ட் டிஸ்கில் ஒரு ஃபைலை காப்பி பண்ணி போட்டால் ஸ்க்ரீனில் ஸ்டோரேஜ் ட்ரைவில் அது காட்டும். ஒரு ஃபைலை இங்கு டிலீட் கொடுத்தால் உண்மையான ட்ரைவில் அது அழிக்கப் பட்டதாய் மார்க் செய்யப்படும்.
இந்த நினைவின் தோற்றுவாய் எங்கிருக்கிறது என தோண்டினால் ஆச்சரியமான சிக்கலான ஒரு அமைப்புக்குள் மாட்டிக் கொளவீர்கள். அது பற்றி விளக்க ஆயிரம் பதிவு இட வேண்டும். மூளை என்பது ஒரு மாயபிம்பம் உண்மையான நினைவு வேறு Unknown தளத்தில் இருந்து தன்னுணர்வில் ஸ்ட்ரிங் அதிர்வுகளாக, அணுத்துகளகளாக ,அணுக்களாக ,மூலக்கூறுகளாக , தனிமங்களாக ,ரசயனங்களாக , RNA,DNA, ஜீன்கள் , செல்கள்.மற்றும் புலனுறுப்புகள் என்றெல்லாம் பவுதீகமாக மெட்டிரியலைஸ் ஆகி நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் எனும் ரசாயன மின்சார தொடர்புகள் மூலம் நரம்புகள் வழி மூளையை அடைகிறது. மூளையில் நம் நினைவுகள் எங்கிருக்கிறது என குறிப்பிட்டு ஒரு இடத்தை சொல்ல முடியாது . ஒரு நினைவு என்பது பல்வேறு நினைவுகளோடு பின்னிப் பிணைந்து அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். ஒரு விஷயத்தை நினைத்ததும் வகுப்பில் ஆசியர் கேள்வி கேட்டதும் நிறைய மாணவர்கள் கை தூக்குவது போல அது தொடர்பான அத்தனை நினைவுகளும் நினைவகத்திலிந்து ஆஜராக ஒட்டு மொத்த அனுபவம் தரும்.
புலள்கள் வழி பெறும் தகவல்கள் மூளையின் ஹிப்போ கேம்பஸ் பகுதியில் அனுபவமாக தற்காலிக நினைவாக உணரப்படுகிறது. நாம் தூங்கும் போது அந்த நினைவுகள் பரிசீலிக்கப்பட்டு முக்கியமானதை எடுத்து மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் அலமாரியில் அடுக்குவது போல ஒழுங்கு படுத்தி இன்னும் ஸ்ட்ராங் நினைவாக அடுக்கப்படுகிறது. மூளையில் "கார்டடெக்ஸ்" பகுதியை ஒட்டி "அமிக்டலா" என்ற பகுதி இருக்கிறது இவ்ற்றின் இடையே உள்ள நரம்பு இணைப்புகள்,நெருக்கம் காரணமாக நம் நினைவுகள் "அமிக்டலா"வில் உணர்வு தூண்டுதல்களை உருவாக்குகிறது , மகிழ்ச்சி அச்சம், சோகம் ,போன்ற உணர்வுகள் அதற்குரிய ரசாயனங்களை சுரக்க செய்து ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுக்க பரவி சூழலை எதிர்கொள்ள உடலை தயார் படுத்துகிறது. மூளையின் இந்த பகுதிகள் தண்டுவடத்தோடு இணைந்து நரம்புத் தொடர்பு ஏற்படுத்தி அதன் ஒவ்வொரு டிஸ்க்குகள் வழி நரம்புகள் உடல் முழுதும் நரம்பு மண்டலமாக வியாபித்து சல்லி நரம்புகளாக வேர்விட்டு உடலின் ஒவ்வொரு செல்களோடும் மின், ரசாயன தகவல் பரிமாறிக் கொள்கிறது.
வயிற்றில் வாழும் 60% புழுக்களும் ,பாக்டீரியாக்களும் , பூஞ்சைகளும் ஒட்டுண்ணிகளும் நம் நரம்பு மண்டலத்தோடு இணைந்து மூளையில் ,நம் எண்ணங்களில் , சிந்தனைகளில், தேவைகளில், நம் அடையாளங்களில் நம் சொந்த செல்களோடு சேர்ந்து பங்களிக்கின்றன. நாம் வைரஸ் , பாக்டீரியா என எளிதில் கடந்து போவது ஒவ்வொன்றும் பல எண்ணிக்கையில் தோன்றும் ,ஒரே entity கள். அவைகளுக்கு ஒரு சோர்ஸ், ஒரு பரிணாமம்,ஒரு நிலை,நோக்கம் இருக்கும். நாம் எனும் ஒன்றிய உணர்வுக்கும், நினைவுக்கும் வேர்கள் எங்கெங்கோ,யார் யாரிடமோ இருக்கிறது. நாம் என்றும் தனியல்ல.
நாம் என்பது 40% தான்.
நம் உடலில் உள்ள செல்கள்,அணுக்கள் , மூலக்கூறுகள், தனிமங்கள் கூட தன் நினைவை நம்முடன் பங்கு வைக்கின்றன. நம் உடலில் பெரும்பாலும் நீர் தான் இருக்கிறது. நீரின் நினைவு நம்மில் இருக்கிறது. நம் உடலின் முக்கிய கட்டுமான தனிமம் கார்பனின் நினைவு இருக்கிறது. பூமியின் ,சூரியனின் ,மில்கி வேயின் நினைவு இருக்கிறது. நாம் இருக்கும் இடம் சூழல், கலாச்சாரம். நாடு ,தொடர்பு கொள்ளும் அத்தனையும், வாசிக்கும் புத்தகங்கள் , பார்ப்பவை ,கேட்பவை மட்டுமல்ல , நமக்குள் இருக்கும் அறியப்படாத புலன்கள் வழியும் பவுதீகமான பொருட்கள் அதன் சூட்சும நிலையில் நம்முடன் நினைவுகளை பங்கு வைக்கிறது. அதனால் தான் அவற்றை அறியவே முடிகிறது. அவற்றை எப்படி அறிய வேண்டும் என்ற பூர்வ அறிவும் நாம் யார் என்ற நினைவும் ஜீன்களின் பதிவுகளில் இருக்கிறது. நம் அடையாளம் பற்றிய அபவுதீக நினைவின் பவுதீக வடிவம் தான் ஜீன்களில் குறிப்புகளாக இருக்கிறது. அதுவே நம் உடலின் பிசியாலஜியை, நம் குணாதிசயங்களை ,உடல் அமைப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே வேளை நம் அனுவங்கள் உணர்வுகள் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் எனும் ரசாயான சுரப்பு மூலம் செல்களில் ஜீன்களை அடைந்து அதில் புதிய தகவலை அப்டேட் செய்கிறது. ஜீன்கள் மற்றும் மூளைக்கிடையே நடக்கும் இந்த உணர்வு போக்குவரத்து தான் சக்ரா , குண்டலினி ,ஆன்மீக அனுபவம் எல்லாவற்றுக்கும் அடிப்படை. நம் தன்னுணர்வின் பரிணாமத்துக்கு ஏற்ப நம் ஜீன்கள் இருக்கிறது நம் உணர்வின் அதிர்வு நிலைக்கு ஏற்ப பல ஜீன்கள் ஆக்டிவேட் ஆகி அல்லது டீ ஆக்டிவேட் நிலையில் இருக்கும் .நம் ஆன்ம வளர்சிக்கேற்ப அது ஆக்வேட் ஆகி உடல் சரசாயன சுரப்புகளை தூன்டி புதிய புலன்களை புதிய பார்வையை புதிய உடல் மாற்றத்தை , புதிய பரிமாணத்தை,புதிய நினைவுகளை உணரச் செய்யும். வேறு புதிய entity தொடர்பு ஏற்பட்டு நம் தன்னுணர்வில் தலையிட்டு வழி காட்டும், அல்லது வழி கெடுக்கும். வழி காட்டும் சக்திகள் உயர் நிலைக்கு அழைத்து செல்லும். தீய சக்திகள் நம்மை மயக்கி மற்றுமொரு மாயையில் ஆழத்தி நம் ஆன்மீக பாதையை ஹை ஜாக் செய்து கர்ம சுழலில் தள்ளி விடும்.
நம் நினைவகம்,தன்னுணர்வின் வரலாறு மறைவான தளத்தில் இருந்தாலும் விர்சுவலாக அவை பல நிலைகளிள் வெளிப்பட்டே இருக்கிறது . நம் ஒவ்வொரு அனுபவங்களும் பாதைகளும் மறைவான தளத்தில் சதா பதிவாகிக் கொண்டே இருக்கிறது. அவை விர்சுவலாக நம் உடலாக வளர்கிறது , பூமியாக ,பிரபஞ்ச நிலைகளாக காலத் தொடர்புடன் கண் முன் ஒரு மேப் போல விரிந்து இருக்கிறது.
கருத்துகள்