நம் பிரபஞ்சம் விர்சுவலானது என்பதை உட்கொள்ள அன்றாட அறிவு சிரமப்பட்டாலும் particle physics, quantum mechanics, neuralogy போன்ற அறிவியல் துறைகள் இதை விளங்க வைக்க உதவும். இதை அந்த காலத்திலேயே தர்க்க ரீதியாக , ஆன்மீக ரீதியாக விளங்கிக் கொண்டனர்.
ஆனால் கணினி இயலில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி இதன் மற்றொரு சாத்தியத்திற்கான கதவையும் திறந்து வைத்திருக்கிறது. அதாவது நாம் உணரும் இந்த ரியாலிடி ஒரு கம்யூட்டர் கேம் போன்றதோ? டெக்னாலஜியில் மிகைத்த உயர் படைப்புகள் ஒரு கணினி விளையாட்டை உருவாக்கி விளையாடுகிறார்களா? நாம் அதில் ஆடும் Avatarகளா? இந்த ரியாலிட்டி ஒரு Matrix ஆக இருக்கும் சாத்தியமுள்ளதா? இல்லை ஜுராசிக் பார்க் டைனோசர்கள் போல இந்த பூமியில் யாராவது நம்மை வளர்த்து எடுக்கிறார்களா? என்ற கேள்வி தான்.
கணினித்துறையின் அடிப்படை கணிதம் தான் .அதே கணிதம் தான் பிரபஞ்ச அடிப்படை. கணினி இயலின் சாத்தியம் எல்லாம் பிரபஞ்சத்திலும் சாத்தியம் தான். இன்று கணினி நிரல்களால் உருவான செயற்கை நுண்ணறிவு மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகும் வகையில் அசுரத்தனமாக வளர்கிறது. மனிதர்களை விட வேகமாக சிந்திக்கிறது. முடிவெடுக்கிறது. நம் சிந்தனைக்கும் அறிவுத்திறனுக்கும் காரணமாக இது போன்ற நிரல்களே இருக்கிறது. நாம் யதேச்சயாக சிந்திப்பது போல தோன்றினாலும் அவை பல் வேறு தகவல்கள் காரணிகளை கொண்டு ஒரு புரொகிராமின் துல்லியத் தன்மையுடன் வெளிப்படுவதாக இருக்கலாம். உங்கள் குணாதியங்கள் , தன்மைகள் எல்லாமே ஏன் நீங்களே ஒரு சாஃப்ட் வேர்தான். ஹார்ட்வேராக உணரும் உடல், உலகம் எல்லாம் தன்னுணர்வில் அந்த சாஃப்ட்வேர் உருவாக்கும் அனுபவம்.
நாம் ஒரு matrix ல் இருக்கிறோம் என்று சொல்ல நியாயமான காரணங்கள் உண்டு. எல்லா பொருட்களும் அதன் அடிப்படையில் அதிர்வாய் இருக்கிறது. அது பைனரியை போல் இருமை நிலையில் அதிர்கிறது . ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு அதிர்வலை, ரிதம் இருக்கிறது. அந்த ரிதம் அடிப்படையில் அனுபவங்கள் நினைவகத்தில் சேமிக்கபடுகிறது . மீட்டுணரப்படுகிறது. நம் உடலுக்கு , இதயத்துக்கு, மூச்சுக்கு , ரத்தத்திற்கு, மூளைக்கு அதற்குரிய resonance frequency உண்டு. அந்த ஒத்த அதிர்வுகள் அந்தந்த அமைப்புகளுடன் sync ஆகி பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஏதோ நட்சத்திரத்திலிருந்து ,ஏதோ பரிமாணத்திலிருந்து ,ஏதோ காலத்திலிருந்து , வரும் நுண்ணலைகள் உங்கள் கான்சியசுக்குள் டேட்டாவாக அதிர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும். நம் எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணம் இது தான். யாரோ ஒருவரது எண்ணம் , யாதோ ஒரு entityயின் எண்ணம் சூட்சும நிலையில் உங்கள் கான்சியசில் தகவல் தொடர்பு கொள்ளலாம். ஒரு மரத்தின் அருகாமை, காடுகள், மலைகள், நீர் நிலைகள் கற்சிலைகள், விண் கற்கள், பழமையான இடங்கள், ஞானிகள் , புத்தகங்கள், வேதங்கள் வயதானவர்கள், உயர் நிலையிலுள்ள படைப்புகள், தாழ் நிலையில் உள்ளவை , மற்ற மனிதர்கள், பிராணிகள் ,நல்லவை, தீயவை, இவற்றின் அருகாமை , மற்றும் தொடர்புகள் உங்கள் கான்சியசில் நுண் தொடர்புகளை உருவாக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அனுவ நினைவு உண்டு. இதன் மூலம் உங்கள அலைவரிசை அதனோடு sync ஆகி நம் கான்சியசின் ரிதம் உயர் நிலைக்கோ தாழ் நிலைக்கோ மாறும். உயர் நிலை என்பது விழிப்பு (higher concioous), தாழ் நிலை என்பது மயக்கம்(lower conciousness).
நம் அதிர்வு நிலை மாறும் போது உடல் மாறும், புலன்கள் மாறும். நம் பார்வை, அனுபவம், உலகம் எல்லாம் மாறும். நாம் higher dimension அல்லது lower dimension க்கு நமக்கே தெரியாமல் கொஞ்சம் பாரல்லல் யூனிவர்ஸ் வழி மாறிக் கொண்டிருப்போம். எப்படி எனில் நான் என்னுடைய பெட்டர் வெர்சனுக்கு மாறும் போது என்னை சுற்றியுள்ள உலகம், நண்பர்கள், வீடு எல்லாம் கூட அவற்றின் பெட்டர் வெர்சனுக்கு மாறிவிடும். Law of atraction இதன் அடிப்படையிலானதே. இந்த கனெக்சன்கள் கண்ணுக்கு தெரியாத சிறிய ,பெரிய portalகள் போல எங்கும் இருக்கிறது. ஒரு ஞானியின் தொடர்பு ஞானியாக்கும் , செல்வந்ததனின் தொடர்பு செல்வந்தனாக்கும், சோம்பேறி தொடர்பு சோம்பேறியாக்கும். எதிர்மறையான எண்ணங்கள், வெறுப்பு , அச்சம், சந்தேகம், பொறாமை lower vibration காரணம் வருவது அன்பு , கருணை, சாந்தி,நேர்மறை எண்ணம் எல்லாம் higher viration .
நம் நினைவகத்தில் உள்ள கர்ம பதிவுகளே நம் அடிப்படை அலைவரிசையை தீர்மானிக்கிறது. அந்த பதிவுகளைக் கொண்டே நம்மை, நம் உலகை அடையாளம் காண்கிறோம். இந்த புரொக்ராம்கள் பதிவுகள் எங்கே இருக்கிறது?? இது மேட்ரிக்சாக இருந்தால் வெளியேற முடியுமா? என்ன வழி? மறுப்பு கருத்துகள் உண்டா? என்ன நினைக்கிறீர்கள்?
கருத்துகள்