பிக் ப்ளாங்க் - part 2

 



சென்ற பதிவின் தொடர்ச்சியாக...

ஒரு விஷயத்தை பற்றி  கூறப்படும் பலவேறு கருத்துக்களை அலசும் போது அந்த கருத்துகளில் உண்மை எது ? பொய் எது என தர்க்க ரீதியாய் ஆய்ந்து கண்டு பிடிக்க வேண்டும். அதோடு முரண்பாடாக தோன்றும் சில கருத்துகள் ஒரே உண்மையை வெவ்வேறு பார்வை கோணங்களில் பார்க்கப்பட்டதாகவும் இருக்கும். அவை ரெண்டுமே உண்மையாக இருக்கக்கூடும்,
அறிவியலின்  ஆங்கிளில் பிரபஞ்சம் தோற்றம் Big Bang ல் தொடங்கியது என்றால் அது உண்மை தான். விண்வெளியை தொலை நோக்கிகள் மூலம் ஆய்ந்து அதில் நடக்கும் மாற்றங்களை  கணித்து அப்படி ஒரு முடிவுக்கு வருகிறார்கள். உதாரணமா ஒரு நார்க்காலியை தெர்மல் காமிரா மூலம் படம் எடுத்தால் அதில் சற்று முன் யாரவது மனிதர் அமர்ந்து விட்டு எழுந்து போயிருப்பார் என்றால் அதன் பிறகும் அவர் உடலின் வெப்பம் சிறிது நேரம் அந்த நாற்காலியுடன்  ஒட்டிக் கொண்டிருக்கும். அதை வைத்து அதில் சற்று  முன் ஒருவர் உட்கார்ந்திருந்தார் என யூகிக்கலாம். இப்படித்தான்  பிரபஞ்சத்தில் பரவலாக  காணப்படும் சக்தி மாற்றங்கள் ஒரு பெரு வெடிப்பின் சாத்தியத்தை ஊகிக்க வைக்கிறது. எனவே பெரு வெடிப்பு  நடந்திருக்கிலாம். உண்மையாக இருக்கலாம்

ஆனால் இதில்  பிளாங்  ஆக இருக்கும் என்ன வென்றால் .. பெரு வெடிப்பு என்பதில் பெரு என்பதை எப்படி நிர்ணயிப்பது இது  பெரிதாக வெடித்தது , இது சிறு வெடிப்பு என நிர்ணயம் செய்ய அந்த நிகழ்வுக்குள் வாழும் நம்மைக் கொண்டு மட்டுமே தான் கம்பேர் செய்ய முடியும். அதாவது இது நம்மை சார்ந்து ஆக பெரும் வெடிப்பு ... நமக்கு வெளியே இது சிறு அல்லது பெரு என்ற அளவுக்குள் அளக்க முடியாத நிகழ்வு ....

நிகழ்வு என்றா சொன்னேன்... எப்போது நிகழ்ந்தது ..நிகழும் போது தானே  காலம் தோன்றியது ..காலத்தை,நிகழ்வை உணர்வது யார்?  இப்போதும் நமக்குள்ள பிரச்சனை நிகழ்வு ,காலம் கூட   அந்த நிகழ்வில் சிக்கிக்கொண்ட நம்மை  கொண்டே அளக்கப்படுகிறது . அதாவது அப்படி ஒரு விஷயம் நம்மை பொறுத்து மட்டும் நடந்த உண்மை..நாம் இல்லா நிலையில் நிகழ்வில்லை,காலமில்லை..

அது என்ன நிகழ்வு ..வெடித்தல் அதுவும் பெரிதாக வெடித்தல் . வெடித்தல் என்றால் எதிர் பாராமல் குறுகிய காலத்தில் நடப்பது.. ஆனால் இங்கு காலம் கூட வெடித்தது என்றால் வெடித்த அந்த காலம்  நாம் உணரும் காலம் என்பதே உண்மை. அந்த வெடித்த கணத்தில் நாம் யுகம் யுகமாய் வாழ்கிறோம் என்றால் அதை வெடிப்பு என்று சொல்ல முடியாது .. தோன்றி மறைகிறது  என்றே பொருள் . எங்கே  தோன்றி மறைகிறது ? என்ன தோன்றி மறைகிறது ?  யார் அதை உணர்கிறார்களோ அவர்கள் அனுபவத்தில் தோன்றி மறைகிறது. அவர்களுக்கு என்ன தோன்ற வேண்டுமென்று  முன் நினைவே   முடிவு செய்கிறது.

பெரு வெடிப்பு விஷயம் இன்னும் சிக்கலாகி விடுகிறது ..யார் இந்த நாம்... யார் இந்த அனுபவிப்பவன்.. அவன் அனுபவத்தை தீர்மானிப்பது எது ? இந்த அனுபவம் எங்கே நடக்கிறது ? பெருவெடிப்பு உண்மையில் எங்கே நிகழ்கிறது? அதை இறைவன் நிகழ்த்தினானா? ஆகுக என்ற கணத்தில் நிகழ்ந்ததா? அறிவியலின் பெருவெடிப்பு ஆண்டவனின் கிரியேசனை மறுக்கிறதா? ஏன் இது இரு வேறு பார்வை கோணமாக இருக்கக்கூடாது?

இறைவன் படைத்தான் என்று கூறும் போது நம் புரிதலில் மிகப்பெரிய பிழை இருக்கிறது.அப்போதும்  இறைவனை நம்மைப் போன்ற குணாதிசியங்களுடன் கற்பனை செய்து நாம் தோசை சுடுவது போல இறைவன் இந்த படைப்பை செய்தான் என்ற புரிதலில் சிக்கி விடுகிறோம். இதனால்  நம் கேள்விகளை  ஆன்டவனிடம் ஒப்படைத்து விடுகிறோம். ஆள் தான் மாறுகிறதே தவிர கேள்விகள் அப்படியே தான் இருக்கிறது ?ஆண்டவன் ஏன் படைத்தான் ? அதற்கு அவனை நிர்பந்த்தித்தது எது ? ஆண்டவனை படைத்த்து யார்? என ஓயாத கேள்விகள். இதில் பிரச்சனை இறைவனின் குணாதிசயம் இறைவனின் நிலை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் நம் இயல்பு இருப்பு ,குணாதிசயம்  என்று நம்மை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வது தான் உண்மைகளை அடைய நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ..

இப்படி நாம் உணரும் எல்லா உண்மைகளும் நம்மை சார்ந்தே இருப்பதாலும் அதற்கு வெளியே என்ன இருக்கிறது என அறிய முடியாத நிலையில் நாம் ஒரு உண்மையை உணர வேண்டும்,
 
we are in a illutional trap. நாம் புலன் மயக்கத்தில் இருக்கிறோம். 

வெளி வருவது எப்படி ? question everything we know? எல்லாவற்றையும்  கேள்வி கேட்க வேண்டும் .நம் அறிவை ,நம் நம்பிக்கைகளை, நம் அனுபவங்களின் உண்மை தன்மையை ...கேட்போமா? நாம் அறியாத எதையும் மறுக்க வேண்டாம். எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.இறைவனை மறுக்கக் கூட நாம் இறைவனை பற்றி  தெரிந்திருக்க வேண்டும்.


கருத்துகள்