நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 4

மனித வரலாற்றின் சமீப காலத்தில் மனிதனின் உணவுபழக்கம் வெகுவாக மாறி விட்டது. அதிக தேவையும் வியாபாரமும் உணவின் தரத்தை கேள்விக் குறியாக்கி விட்டது.
வேட்டையாடி வாழ்ந்த மனிதன் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொன்டிருக்க வில்லை. கிடைத்தால் தரமான, சத்துக்கள் நிறைந்த் மாமிச உணவு, கிடைக்காவிட்டால் பட்டினி. பல காலமாக அவன் ஜீரண மணடலம் இத்தகைய பேலியோ உணவிற்கு தான் தகவமைந்திருந்தது.
பின் அவன் தானியங்கள் பயிரிட்டு விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டபின் மாவு சத்து அதிகமான உணவு முறைக்கு மாறி விட்டான். உணவும் தேவைக்கு அதிகம் கிடைத்தது,ஆனால் இந்த அதிகபடியான மாவு சத்தை எப்படி கையாள்வது என உடலின் அறிவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. எனவே அதை கிளைகோஜனாக ஈரலில் சேமித்து பட்டினி காலத்தில் செலவளிக்கும் புதிய ஜீரண முறைக்கு மாறி விட்டது. அதிக கலோரி தரும் மாவு , இனிப்பு , கொழுப்பு உணவுகள் முக்கிய உணவாகி மற்ற சத்துக்கள் எல்லாம் மனித உணவு பழக்கத்தில் பின்னும் தள்ளப்பட்டது. அதிக கலோரி உணவுகள் தான் சுவையான உணவு என அவன் மூளை வரையறுத்துக் கொண்டது. அதை புரிந்து கொண்ட வியாபார உலகம் அதிக கலோரி தரும் சுவை உணவுளையே தயாரித்து சந்தைப்படுத்தி மனிதன் வயிற்றில் கொட்டியது.
தற்காலத்தில் மனித உடல் உழைப்பு குறைந்ததால் சேமித்த சக்தி செலவழிக்கவும் முடியாமல் ஒரு கட்டத்தில் இனியும் சேமிக்க இடமில்லை அதிக சர்கரையை கிளைகொஜனாக மாற்ற முடியாது, அல்லது தேவையில்லை உடல் முடிவடுக்கும் போது உடலில் இன்சுலின் சுரப்பு நின்று .அதிகமான சர்கரையை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டு விடுகிறது. இது சர்க்கரை நோயாக மாறி இரத்தத்தில் சுற்றும். அதிக சர்க்கரை உடலின் எல்லா திசுக்களுக்கும்,செல்களுக்கும் போய் அதை பாதிக்கிறது. அதனால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்கிறது.
அதிக இரத்த சர்க்கரை உடல் திசுக்களில் காயங்கள் ஆறுவதை தாமதப் படுத்துகிறது. நீண்ட காலம் ஆறாத காயங்கள் புற்று நோயாக மாறுகிறது. சர்க்கரை இரத்தத்தில் ஏற்படுத்தும் பசை தன்மை நுண்ணிய ரத்த குழாய்களில் எளிதாக இரத்தம் பாய்ந்து செல்வதை தடுக்கிறது. இதனால் கண், இதயம், சிறு நீரகம் மூளை பாதிப்படைகிறது. தேவைக்கதிகமான இரத்த சர்கரையை அதிக சிறு நீர் வழியாக வெளியேற்ற முயல்வதால் கிட்னி பழுதடைய நேரிடுகிறது. இரத்தத்தை உடலின் எல்லா மூலைக்கும் பம்ப் செய்ய இதயம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு சுமை அதிகரிக்கிறது.
மாவு சத்து நிறைந்த உணவுகள் அதிக பசியை தூண்டுகிறது அதனால் அதிக உணவு ,அதை செரிக்க அதிக அமில சுரப்பு .தொடர்ந்து குடல் சுவர் அரிப்பு, குடல் புண் நெஞ்செரிச்சல், குடலில் கெட்ட பாக்டீரியாகளுக்கு இவை நல்ல உணவாகி அவை அதிகம் வளர்கிறது.
 
உடல் உழைப்பு குறைவானவர்கள் உணவில் கார்போ ஹைட்ரேட் எனும் மாவு சத்தை குறைத்து கொள்ள வேண்டும், நமது ஆழ் மனதில் உள்ள நமது அன்றாட உணவு தேவையைப் பற்றிய தவறான கணக்குகளும், முந்தய பசி அனுபவங்களும் ருசி அனுபவங்களும், ஆரோக்கியம் பற்றிய கவலையும் தேவைக்கு அதிக உணவை உட்கொள்ளத்  தூண்டுகிறது. இவ்வளவு  உணவு  தான் தேவை, இது போதும் என்ற திருப்தி உணர்வை மூளைக்கு ட்ரைன் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறையாது நோன்பு இருப்பது நல்லது, இரத்த சர்கரையும் எரித்து சேமித்த கிளைக்கொஜனையும் செலவளிக்க வேண்டும்.  உணவை உணர்ந்து நிதானமாக மென்று ருசித்து உண்பதால் தேவையான இன்சுலின் சுரக்கும்.

கருத்துகள்