கால காலமாக மனிதன் விலங்காக இருந்த போது ஆபத்தான சூழலிலிருந்து தற்காக்க உடல் உருவாக்கியது தான் நோயெதிர்ப்பு மண்டலம், ஆனால் தற்போது மிக குறுகிய காலத்தில் மனித சிந்தனையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களால் சூழ் நிலையை விட அவன் சிந்தனையே அவனை அதீத அச்சத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. பங்கு சந்தை சரிந்தால், வேலை இழந்தால் பூனைக்கு ஹார்ட அட்டாக் வராது ஆனால் மனிதனுக்கு வரும். நம் தவறான உணவு பழக்கம் நம் உடலை எளிதில் நோய் எனும் தீப்பிடிக்கும் வஸ்துவாக மாற்றி வைத்திருக்கும் போது அதீதமான மன அழுத்தம் ஆழ்மனதில் சென்று ட்ரிக்கரை அழுத்த நம் நோயெதிர்ப்பு சக்தி நம் உடல் மீதே நெருப்பை கக்கிவிடுகிறது. இதை தான் ஆட்டோ இம்யூன் நோய் என்கிறோம்.
இது நம் உடலில் நூறு விதமான நோயாக வெளிப்படுகிறது. பிரச்சனை இதில் தான் இருக்கிறது. நோயாளிகள் இதன் நோய் குறிகளை தனித்தனி நோய்களாக கருதி ஒவ்வொன்றுக்கும் தனி தனி சிகிட்சை தேடுகிறார்கள். இது ஆட்டோ இம்மூன் நோய் என்று அறிய, சிகிட்சை அளிக்க எல்லா நிபுணர்களின் ஒருங்கிணைந்த அறிவும் தேவை. அது பொதுவாக சாத்தியமில்லை. இதனால் நோயாளிகள் நோய்முதல் நாடி அறிந்து சிகிட்சை பெறாமால் தற்காலிக நிவாரணத்திற்காக ஒவ்வொரு மருத்துவ மனையாக ஏறி இறங்குகிறார்கள். ஒரு போதும் அவர்கள் நோய்க்கான தற்காலிக நிவாரணம் அன்றி முழுமையான தீர்வை அடைவதில்லை, இது தற்கால மருத்துவ அறிவியலின் மிகப்பெரிய பிரச்சனை.
எதோ ஒரு சத்துக் குறைவால் ஒரு உறுப்பில் நோய் வந்தால் அதே சத்துக் குறைவு உடலின் எல்லா செல்களிலும் அனுபவப்படும், அவையும் அதே காரணத்தால் மெல்ல நோயுறும். ஆனால் டாக்டர் மட்டும் ஒரு துறையில் மட்டும் நிபுணராக இருக்கிறார். ஒரு உணவியல் நிபுணர் உணவை கொண்டு நோயை குணமாக்க முயல்கிறார், ஆனால் அறுவை சிகிட்சை நிபுணர் வெட்டி மாற்றுவதில் குறியாய் இருக்கிறார்.ஒரு வலியும் வீக்கமும் கண்ணில் வந்தால் கண்வலி, காலில் வந்தால் கால் வலி, இதயத்தில் வந்தால் ஹார்ட் அட்டாக், கிட்னியில் வந்தால் கிட்னி ஃபெய்லியர்.இவ்வளவு தனி தனி நோய் பெயர்கள் தனிதனி மருத்துவ நிபுணர்கள்.
பொதுவாக 80 சதவீதம் பெண்களையே ஆட்டோ இம்யூன் நோய் தாக்குகிறது. காரணம் ஆண்களை விட பெண்கள் அதிக உணர்ச்சிகரமானவர்கள். பெண்கள் பல பிரச்சனைகளை மண்டைக்குள் போட்டு அங்கலாய்ப்பவர்கள், இப்போது பல பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டதால் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
வேலைப் பழு, மன அழுத்தம், பரபரப்பு, தூக்கமின்மை, செரிமான பிரச்சனை, பசியின்மை, சமைக்க நேரமின்மை, துரித உனவு, ஜங்க் ஃபுட் , குடல் பழுது, ஊட்ட சத்துக்குறைவு, இரத்தக்குறைவு, கடைசியில் நோயெதிர்ப்பு போலீஸ் கெட்ட உடலை கைது செய்து லாடம் கட்டுகிறது.
அது அலர்ஜி, சளி , பீனிசம், தலைவலி, மைக்ரேன் , கை,கால் உடல் வீக்கம், வயிறு உப்புசம் , குடலிறக்கம், அனீமியா, கர்ப்பப் பை கோளாறு, குடல் புண், நெஞ்செரிச்சல், நுரையீரல் பிரச்சினை, வாந்தி, கை, கால் உளைச்சல், தசைப் பிடிப்பு , வாதம், முடக்கு வாதம், தோல் நோய், தைராய்டு பிரச்சினை, உடல் சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை, மயக்கம், இதய நோய் , கிட்னி நோய், ஈரல் நோய், சர்க்கரை நோய்,இன்னும் இன்னதென்று சொல்லத் தெரியாத அறிகுறிகள், டாக்டர்கள் பார்த்து ஒரு பிரச்சினையும் இல்லையே என்று சொல்லும் பிரச்சனைகள் வரை இந்த நோயின் அறிகுறிகள் நீளூம்.
கவனிக்கப்படாத எல்லா நோயும் கடைசியில் கொண்டு நிறுத்துமிடம் கான்சர்.
கருத்துகள்