ஆனால் இன்று அதிகமாக காணப்படும் சில நோய்களின் மூல வேரை அது பற்றிய சில அறிவுகளை மருத்துவ உலகின் அறிவு கடலில் முக்குளித்து தேடி அதை என் பார்வையில் புரிந்து கொள்ள முயன்ற போது சில உண்மைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நோய் உண்மையில் எங்கே இருக்கிறது?
நம் உடல் என்பது நாம் காண்பது போல் இல்லை. அது ஒரு மாயை.(virtual). நாம் யாராக உணர்கிறோமோ அதுவே நம் பரு உடலாக நம் அனுபவத்தில் மட்டுமே Manifest ஆகிறது. நம் நோய்கள் என்பது நம் சுக நிலையில் உண்டாகும் ஈனம், அதாவது சுகவீனம், நம் உடலின் சிக்கலான இயக்கம், அமைப்பு பாதிக்கப்படும் போது நம்மை எச்சரிக்க உடல் உருவாக்கும் வலி அனுபவம் தான் நோய்.. இது நம் physical உடலில் காயங்களாக , குறைகளாக வெளிப்பட்டாலும் உண்மையில் நோய் என்பது நம் நினைவகத்தில் (Memory) தான் உள்ளது. இக்கணம் மட்டும் தான் நாம், இக்கணத்தின் நமக்கு உடல் இல்லை. எனவே உடல் நலக் குறைவும் இல்லை..நாம் என்னும் உணர்வு அனுபவம் நம் நினைவுகளை இக்கணத்தில் மீட்டு அனுபவிப்பதால் உண்டாவது. அப்படி மீட்கும் போது நினைவுகளில் பதிந்து வளர்ந்து கொண்டிருக்கும் நோய்க் குறிகளையும் மீட்டு உணர்கிறோம். அதுவே physical ஆக உடலில் குறை பாடுகளாய் உணர்கிறோம்.
நம் உடலின் பேரறிவு முழுமையாக நம் மருத்துவ உலகம் புரிந்து கொள்ளவில்லை. உடலை இன்னும் ஒரு எந்திரமாகவே மருத்துவ அறிவு பார்க்கிறது. உண்மையில் உடல் அங்கு இல்லை அது விர்ச்சுவல். நம் உயிர் சக்தி தான் அதை இன்னொரு தளத்தில் இயக்குகிறது. தலை வலிக்கும் கால்வலிக்கும் ஒரே மருந்து தான் .ஆனால் அந்த மருந்து தலையிலோ காலிலோ செலுத்தப்படுவதில்லை. மாத்திரையாக சாப்பிட்டு குடலால் உறிஞ்சி குருதியில் கலக்கிறது அல்லது நேரடியாக ஊசி மூலம் குருதியில் செலுத்தப்படுகிறது. பின் அது உடலின் எல்லா பாகத்துக்கும் எல்லா செல்களுக்கும் செல்கிறது .நோயுற்ற ,நோயற்ற பாகம் எல்லாம் மருந்து செலுத்தப்படுகிது உடல் முழுதும் அந்த மருந்து செல்கிறது. எனில் மருத்துவம் உண்மையில் எங்கே நடக்கிறது. நாம் பல செல்களால பல உறுப்புகளாக பிரிந்து தோன்றுவது நம் நினைவிலிருந்து இடம் காலம் பொருள் என்ற முப்பரிமாண உணர்வில் நம் உடலை நாம் அனுபவித்து உணர்வதால்.தான். நம் நினைவின் எல்லா frame களையும் அழித்து அனுபவித்தால் இக்கணத்தில் நாம் உடல் இல்லாமல் இருக்கிறோம், உடலும் இல்லை மருந்தும் இல்லை, நோயும் இல்லை.வாழ்வும் இல்லை. எல்லாம் நினைவின் தோற்றம். எங்கிருந்தோ வரும் நம் கர்ம நினைவுகள் தகவல்கள் அதிர்வுகளால் நாம் இருக்கிறோம். விர்சுவலான கால உணர்வில் இடம் உடல் எல்லாம் உணர்ந்து வாழ்கிறோம்.
ஆழ்மனம் என்பது?
இந்த நினைவுகள் என்பது நாம் மூளையில் இருப்பதாக நியூரான்கள் எனும் நரம்பு செல்களில் இருப்பதாக நாம் கருதினாலும் உண்மையில் அவை நம் ஜீன்களில் அதற்கும் அப்பால் மூலக்கூறு, அணு நுண் நிலைகளில், அலைகளில் நம் பவுதீகத்துக்கு அப்பாலான பரிமாணத்திலிருந்து நம் பவூதீக பரிமாணத்துக்கு ஒரு தகவல் போல போய் வந்து கொண்டிருக்கிறது. மேல்கண்ட நுட்பங்களை உங்களுக்கு புரிந்து கொள்ள சிரமாயிருந்தால் அந்த நினைவகத்தை நம் ஆழ்மனது என வைத்துகொள்வோம், நம் ஆழ்மனதில் அல்லது அறிவியல் பூர்வமாய் சொல்ல வேண்டுமெனில் ஜீன்களில் இருந்து வரும் தகவல்கள் தான் உங்கள் உடலின் அறிவாகவும் இருக்கிறது. நம் எண்ணங்களின் ஊற்றாகவும் இருக்கிறது இந்த உலகை உடலை நாம் எப்படி உணரவேண்டும் என்று தீர்மானிப்பதாகவும் இருக்கிறது. நம் வாழ்வு அனுபவங்கள் கூட அதன் சாறு நம் ஜீன்களுக்குள் இறங்கி நம் ஆழமனப் பதிவாக மாறுகிறது. இதனால் நாம் நம் உடல் எல்லாம் நம் அனுபவத்தை ஒட்டி கணந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. மனம் ஒரு அமேசான் காடு அதில் என்ன மிருகம், எங்கே ஒளிந்து கொண்டு, எப்போது வெளிப்படும் என சொல்ல முடியாது. ஒருவர் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம், கேடு இரண்டும் ஆழ்மன பதிவுகளால் ஏற்படுகிறது. அது நம் ரியாலிடியை உருவாக்குகிறது. வாழ்வை வழி நடத்துகிறது. வாழ்வின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் என எதை மனதில் போடுகிறீர்களோ அவை தான் ஆழ்மனதில் போய் தங்குகிறது.அது தொடர்பானதை மற்ற எல்லா பரிமாணங்களில் இருந்தும் ஈர்க்கிறது. அதுவே உங்கள் எதிர்காலத்தையும் அதன் அடிப்படையில் கட்டி எழுப்புகிறது.
(தொடரும்....)
கருத்துகள்