உங்கள் நம்பிக்கையில் அடிப்படை தவறிருந்தால் ஒரு போதும் உண்மையை அடையவே மாட்டீர்கள். கற்பனை சித்தாந்தங்களில் மாட்டிக்கொண்டு வெளிச்சத்தை இருளில் தேடிக்கொண்டிருப்பீர்கள்.
உண்மையை உண்மையாகவே உணர வேண்டும் என்றால் .உங்கள் நம்பிக்கைகளை சரிதானா? உங்கள் நம்பிக்கைகள் உள்ளிருந்து பெற்றதா? யாரோ உங்களிடம் திணித்ததா ? என கேள்வி கேளுங்கள். உங்கள் அறிவை கேள்வி கேளுங்கள். அது நீங்கள் அறிந்ததா? உங்களுக்கு கற்பிக்கப்பட்டதா என? உங்கள் புலன்களை ஆராயுங்கள் அது உங்களுக்கு உண்மையை சொல்கிறதா? என . உண்மையை தேடும் உங்களை கேள்வி கேளுங்கள் நீங்கள் யார் என? எல்லாம் உங்களுக்கு தெளிவாகி விட்டால் நீங்கள் உண்மையை மட்டுமே காண்பீர்கள். மற்ற அத்தனை கற்பிதங்களும் கலைந்து போய்விடும்..
கருத்துகள்