நான் யார்? ( பகுதி 9)

 

நம் பிரபஞ்சத்தை ஆராயும்போது சில கேள்விகள் எழுகிறது இத்தனை பிரம்மாண்ட பிரபஞ்சம் மனிதனுக்காவா படைக்கப்பட்டிருக்கிறது? நமக்கு தெரிந்தவரை மனிதனே உயர்ந்த படைப்பாக இருக்கிறான். பூமியில் நாம் அறியும் எல்லாமே மனிதனுக்கு கீழ் நிலையில் தானே இருக்கிறது? மனிதன் அல்லாத படைப்புகள் வேறு கிரங்களில் இருக்கிறதா? அவை ஏன் அறியப்படவில்லை மனிதனை விட உயர்ந்த நிலையில் உள்ளவை உண்டா ? அவை எங்கே ?

பிரபஞ்ச உணர்வு என்பது மனம் அனுபவப்படுவது. ஒவ்வொருவரும் அனுபவப்படும் பிரபஞ்சம் அவரவர்குரியது. நம் அறிவு ஆழ் நிலைகளில் இணைந்திருப்பதால் அதை பொதுவாக உணர்கிறோம். நீங்கள் காணும் நிலவை நான் காண்கிறேன். நீங்கள் சுவைக்கும் உணவை நான் சுவைக்கவில்லை.
இந்த பிரபஞ்சம் இவ்வளவு பிரம்மாண்டமாய் உணரக்காரணம் நம் பூர்வ அறிவின் பிரம்மாண்டம் தான். நான் ஒரு மரத்தின் இலை என்றால் நான் உணரும் பிரபஞ்சமென்பது அதன் கிளை தண்டு என அறிவது. அந்த மரம் விதையிலிருந்து வெடித்து துளிர் விட்டது தான் பிங் பாங்..எனவே ஓர் இலையாகிய என் கானஷியசின் மையம் நான் தான் .நான் பூமி கிளையில் இருக்கிறேன் பூமி சூரிய கிளையில் .சூரியன் மில்கி வே கிளையில் இருக்கிறது.
மனித அறிவு ஒன்றை கொண்டு தான் ஒன்றை அறிகிறது. அது புலன்களால் அறிவதை கொண்டு தான் அதன் பவுதீக உலகம் தரிப்படுகிறது. புலனறிவுக்கு எட்டாதது சூட்சும நிலையில் உள்ளது. ஒரு இலை தன்அருகிருக்கும் மற்றொரு இலையை பவுதீகமாய் அறிகிறது. இப்படித்தான் நாம் பூமியில் மற்ற மனிதர்களை இயற்கையை பறவை விலங்கை உணர்கிறோம். இனி இதில் ஒரு பூ பூக்கிறது .இது ஒருவர் உயர் கானஷியஸ் நிலை அடைவது. அது கனியாகிறது அடுத்த நிலை அடுத்த பரிமாணங்களில் பரிணமிப்பதாகும். ஒர் இலை ஒரு சக இலையை அறியும். ஒரு பூவின் அழகு வண்ணம் மணம் இலையின் கானஷியசுக்கு பரிச்சயமில்லாதது. இலை அதை அறியாது. இலைக்கு அது சூட்சுமம். அது போல ஒரு கனியின் சுவை பூ அறியாது. சுவை என்பது பூவின் உலகில் இல்லை.
நம் பூமி இப்பிரபஞ்சத்தின் மையமாக இல்லை. எங்கோ ஒரு காலக்சியில் ஏதோ ஒரு புள்ளியாக இருப்பதை பார்க்கிறோம். எனவே நாம் கோடிக்கணக்கான கிளையில் ஏதோ ஒன்றில் ஒரு இலை.ஆனால் மற்ற கிளைகளும் இலைகளும் நம் அறிவால் உணரமுடியா சூட்சுமத்தில் இருக்கிறது.
மனிதன் என்ற நம் கானஷியசை மற்ற நிலைகளை நோக்கி நகர்த்தி உணர்வதன் மூலம் நம் அறிவு அவற்றை அடையாளம் கண்டு சூட்சுமமாயிருக்கும் அவை பவுதீகமாகும். இப்போது இருக்கும் பவுதீக உடலும் உலகும் மாறிவிடும்.
நாம் ஜின்கள் தேவர்கள் மலக்குகள் தேவதைகள் தெய்வங்கள், எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் ,வேற்றுலக வாசிகள்,என பேசுவது எல்லாமே மற்ற கிளைகளின் இலைகள். அவை நம் புலன்அறிவில் புலப்படாதவை. ஆனால் சூட்சுமமாக நம் அக உணர்வில் அலை உண்டாக்குகிறது. நம் கான்ஷியசின் உயர் மற்றும் கீழ் எல்லைகளில் அவற்றின் எல்லைகள் இருக்கிறது. இந்த கானஷியஸ் மேல் நோக்கி கீழ் நோக்கி நகரும் தன்மை உடையதால் சிலவேளை ஒன்றுடன் ஒன்று ஊடுருவுகிறது. அறியப்படுகிறது. கானஷியசின் இந்த எல்லைகள் தான் நம்மை ஒரு கர்ப்ப பை போல தனிப்படுத்தி பாதுகாக்கிறது. அதனால் தான் இந்த பிரபஞ்சத்தில் புலன்களால் நாம் அடையும் எதிலும் மற்ற பரிமாண படைப்புகளை அறிய முடியாதது. அவ்வாறு அறிய வேண்டுமானால் நம் கானஷியஸ் பக்குவம் பெற்று இந்த உடலும் புலனும் மாற வேண்டும்.
இத்தகுதி இல்லாமல் பிற பரிமாணங்களை சில வழிபாடுகள் rituals மூலம் ஊடுவ முயல்வது மிக ஆபத்தானது. நம் ரியாலிட்டியில் இயற்கை சீற்றம் உண்டாகி அழித்து விடும. இது இறை கோபம் என அறியப்படுகிறது. சில ஏலியன் தொடர்பு முயன்ற சமுதாயங்கள் பல இதற்கு முன் அழிக்கப்பட்டுள்ளன.என்பதற்கு ஏராளம் சான்று உண்டு. பல சமுதாயங்கள் பல கிளைகள்வேறு ரியாலிட்டில் மறைந்தும் விட்டது. உதாரணம் ஒரு காலத்தில் ஜின்கள் தேவர்கள் மனிதர்களோடு வாழ்ந்தார்கள். இப்போது மனிதர்கள் பகுத்தறிவால் தனி கிளையாக அவர்களிடமிருந்து பிரிந்து விட்டார்கள். இரு பரிமாணங்களாக இரு கிளையாக பிரிந்து விட்டது. ஒன்றுக்கு மற்றது சூட்சுமமாகி விட்டது. ஆனாலும் சூட்சும தொடர்பு இருக்கிறது. அதை அறி நிலையில் தக்க வைக்க முயன்ற லெமுரியா மாயன் ஈஸ்டர் தீவு மொகஞசதாரோ ஹரப்பா துவாரகா பாபிலோன் கலாச்சாரங்களின் அழிவில் அல்லது மறைவில் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. ஒரு விமான பயணம் விமான நிலையத்தை அடைந்தாலே வெளியேறுவது பாது காப்பு பயணத்தில் இருக்கும் போது ஜன்னலை திறப்பதுஅதன் வழி குதிப்பது ஆபத்தானது. வெளியே உள்ள ரியாலிட்டி எப்படி வேண்டுமானாலும் இருக்கக்கூடும்.
இங்கு நாம் தனியாக இல்லை நம்மை விட உயர் நிலையிலும் தாழ் நிலையிலும் படைப்புகள் நம்மை சுற்றி நிறைந்திருக்கிறது. நம் பகுத்தறிவு அதை உணரும் வாசலை மூடி நம்மை தனிப்படுத்தி வைத்திருக்கிறது. அவ்வாறு உணரும்படி நம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். குழந்தைகள் பெரியவர் துணையின்றி கேட்டை கடந்து சாலைக்கு செல்வது ஆபத்து .
நாம் நம்மை மரமாக உணரும் கானஷியசில் இந்த பேதங்கள் எல்லைகள் எல்லாம் அழிந்து விடும். அது இறை நிலை. எல்லா கிளைகளும் இலைகளும் சூட்சுமத்தில் உணரும் ஆதி உணர்வு
 
 
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்