நாம் என்பது மற்றொரு பரிமாணத்தின் அறியா நிலையிலிருந்து இப்பரிமாணத்தின் அறி நிலைக்கு வெளிப்படுகிறோம் என முந்தய பதிவுகளில் பார்த்தோம். ஒரு இன்டெலிஜென்ட் அதிர்வு எல்லாமாய் வெளிப்படுகிறது எனவும் பார்த்தோம். இது அணு மையங்களில் தோன்றி மறையும் அதிர்வு .
இந்த தோன்றுதல் மறைதல் தான் இருமை நிலை duality க்கு காரணம். வேறு ஒரு அலை இயக்கம் தன் பயணத்தில் இந்த பரிமாணத்த்துக்கும் வேறு பரிமாணத்துக்கும் இடையே பயணிக்கும் போது தான் இங்கே தோன்றி அங்கே மறைகிறது. அங்கே தோன்றி இங்கே மறைகிறது.
நம் ரியாலிட்டியில்
தோன்றுவது உண்மை நிலை
மறைவது மாயை என நிலை மாறுகிறது.
1,0 என்ற பைனரி.
Adam ,awwa (eve)
சிவம் ,சக்தி
Yin ,yang
சூட்சுமம், ஸ்தூலம்
பொருள் ,சக்தி
என்று படைப்பின் ஆதி நிலையான duality எனும் இருமை இருக்கிறது.
இந்த இருமை நிலை படைப்பின் எல்லா நிலைகளிலும் தொடர்கிறது .
ஆண் ,பெண்; பகல் ,இரவு;
இடம் வலம் ; மேல் கீழ்; நன்மை, தீமை ; சொர்கம்,நரகம் .
நமது தன்னுணரவு (concious) ஆனது இருமை அனுபவத்தில் மாறி மாறி பயணிப்பதால் அதில் ஒரு சுழல் அனுபவப்படுகிறது.
இந்த சுழல் விரிந்து செல்வதால் பாம்பின் தோற்றத்தில் கற்பனை செய்யப்படுகிறது. ஆதாம் ஏவாள் கதையில் மரத்தை சுற்றும் பாம்பும் இது தான. பரமசிவன் கழுத்து பாம்பும் இது தான் என்று கருதுகிறேன்.
இந்த சுழலின் வடிவப் பின்னணியில் தோன்றியது தான் கணிதம் வடிவ கணிதம்.
fibunachi numbers ,prime number., golden ratio. Chaos theory , flower of life
எல்லாவற்றின் வேர்களும் இங்கு தான்.
இந்த சுழல் இயக்கம் செல் பிரிதலில், கரு வளர்ச்சியில் ,தலை முடியில் வரை இருக்கிறது .
தாவரங்கள் சூரியனை நோக்கி சுழன்றே வளர்கின்றன.
பூவிதழ்களில் இந்த சுழல் இருக்கிறது.
பூமியில் சூரியனில் காலகசி நட்சத்திர பயணங்களில் எல்லாம் இந்த சுழல் தான்.
உங்கள் வீட்டு வாஷ் பேசினில் கூட தண்ணீர் விரிவிலிருந்து சுருங்கிய பாதையில் சுழன்று செல்கிறது
Concious விரிவடைதலோ சுருங்குவதால் தான் அனைத்தும் சுழல்கின்றன.
இந்த சுழலால் அணுக்கள் பவுதீகமாய் உணரப்படுகிறது. சக்தி உணரப்படுகிறது ,பொருட்கள் உணரப்படுகிறது. இடம் காலம் எல்லாம் உணரப்படுகிறது.
அக தரிசனத்திலும் இந்த சுழலை காணலாம்.
அகக் காட்சியின் முப்பரிமாண சுழல்தான் சிவ தாண்டவமாக சிவ நடனமாக ஓம் எனும் குறியீடாக காட்சிப்படுத்தப்படுகிறது.
(தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்