இன்னும் ஆழமாக என்னை தேடுகிறேன் .என் உடல் செல்களால் ஆனது. செல்கள் தன் உணர்வுகளை, தேவைகளை ரசாயன,மின்சார தகவலாக்கி நரம்புகளூடாக மூளைக்கு பரிமாறுகிறது. மூளை அனைத்தையும் ஒருங்கிணைத்து என் உணர்வாக வெளிப்படுத்துகிறது. இது போல புலன்கள் வழி நான் பெறும் அனுபவங்களும், சிந்தனைகளும் கூட
இந்த செல்களுக்கு பகிரப்படுகிறது.
இந்த incoming ,outgoing தகவல் பரிமாற்றம் அக தரிசனத்தில் உணரலாம். குண்டலினியின் இரு பாம்புகள் போல உணரப்படுவது. DNAவின் வடிவமும் ஒப்பு நோக்குக.
செல்களின் உணர்விலா நான் இருக்கிறேன்? அதுவும் இல்லை அதன் நியூக்கிளியஸில், குரோம சோம்களில், அதன் டி என் ஏக்களில் அதன் மூலக்கூறுகளில், அணுக்களில் என என் உணர்வின் மூலம் பிரிந்து கொண்டே போகிறது. நம் உடலைப்பற்றிய அதனை இயங்க வைக்கும் தூண்டுதலை பற்றிய அத்தனை தகவலும் நம் DNAக்களில் புளூ ப்ரிண்டாக இருக்கிறது.
சரி நம் உடல் முழுக்க அணுக்களால் ஆனது தான், அணுக்களை தவிர நான் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை.
இந்த அணு நிலையில் நான் எப்படி இருக்கிறேன், ஒவ்வொரு அணுவும் 99% வெற்றிடமாகத்தான் இருக்கிறது ஒரு சதவீதம் தான் எலகட்ரானும் புரோட்டானும் இருக்கிறது, என்றால் நான் உணரும் 99% ல் நான் இல்லை, அந்த ஒரு சதவீதம் எலக்ட்ரானும் புரோட்டானுமாகவாவது இருக்கிறேனா என்று பார்த்தால் அதுவும் பல உட் துகள்களால் ஆனது. அவை நாம் கவனிக்கும் போது துகளாகவும் அல்லாத போது அலையாகவும் இருக்கிறது. இதை கண்டுபிடித்தது புகழ்பெற்ற குவாண்டம் விஞ்ஞானி ஹைசன் பர்க் அவர்களின் ஒரு பரிசோதனை.
அதாவது நம் உணர்தல் தான் அனைத்தையும் பவுதிகமாக்குகிறது. பிரபஞ்ச அணுக்களாக மூலக்கூறுகளாக செல்களாக திசுக்களாக உறுப்புகளாக உடலாக வடிவமாக்குகிறது இல்லாவிட்டால் அது ஒரு குவாண்டம் அதிர்வு.
இதிலிருந்து நாம் அடையும் விஷயம். நம் அனுபவத்தின் ஒரு நிலையில் நீங்கள் நான் இடம் காலம் என்ற பேதம் உணர்கிறோம்
மற்றொரு நிலையில் எல்லாமே அலைகளாக எங்கும் பரவியிருக்கிறோம்.
மற்றொரு நிலையில் அறிவுத் துடிப்புகளாய் அறியா நிலையிலிருந்து ( unknown dimension)
அணு மையங்கள் வழி அறி நிலைக்கு உரு எடுக்கிறோம். அணுமையங்கள் அணுவுருவாகி,மூலக்கூறுருவாகி, செல்லாகி, திசுவாகி , உடலாகி புலன்களாகி , மூளையாகி, மூளையின் அனுபவமாகி, பூமியாகி பூமியின் சகல உயிராகி அசைந்து உயிரற்றதாகி பிரபஞ்சமாகி அனுபவத்தில் வெளிப்படுகிறது.
இது மாயை. நாம் கவனிப்பதை நிறுத்தினால் நாம் நம்மை பவுதீக தன்மையான இடம் பொருள் காலம் என்ற அனைத்தும் கடந்த ஒன்றாகி விடுவோம்.
எனவே பார்க்கப்படும் நாம் என்பது உண்மையானது அல்ல, பார்க்கும் நான் மட்டுமே உண்மையான நான் ,மற்றபடி நான் என்னைப் பற்றி உருவாக்கும் அனைத்தும் அவ்வாறான தோற்ற அனுபவமே.
அப்படியானால் நாம் வேறு நிலையிலும் நம் அனுபவம் இங்கே பூமியில் உடலிலும் இருக்கிறோமா? இந்த துடிப்புகளா நாம் அதிலுள்ள தகவல்களா நாம்... அந்த தகவல் ஏது? ஏன்?
இந்த கேள்வியோடு முடிப்போமா? தொடர்வோமா?
(தொடரும்)
நான் யார்? மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்