இன்றுள்ள பெரும்பாலான நோய்களுக்கு காரணம் ஏழைகள் நடுத்தரமக்கள் சத்தான உணவு உண்ண முடியாத உணவு அரசியலும் பொருளாதார சுமைகளும் தான்.
ஆரோக்கியம் பற்றி அறிவதை விட மக்கள் நோய்களை பற்றிய அறிவை அதிகம் தேடுகிறார்கள்.
ஏழை மனிதர்கள் புதிய மருந்துகளை பரிசோதிக்கும் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
நோயாளிகளை நிரந்தர கஸ்டமர்கள் ஆக்க நோய் காரணியை வேண்டுமென்றே விட்டு நோய்குறிகளுக்கு மருந்துகள் கொடுக்கிறார்கள்.
இந்த துறையே இப்படித்தான் கட்டமைக்கபட்டிருக்கிறது.. மருந்து கம்பனிகளின் வியாபாரம் தான் மருத்துவ துறைக்கு மூலதனம். மருத்துவத்துறையின் அநேக ஆய்வுகளுக்கு மருந்து கம்பனிகள் தான் ஸ்பான்சர்கள். அவர்களுக்கான வியாபார சாதகம் தான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்கள் தான் உங்கள் நோய்களை நீங்கள் எப்படி அறிய வேண்டும் எப்படி பயப்படவேண்டும் என்றெல்லாம் உங்களுக்கு கற்று தருவது..
எத்தனையோ அதி நவீன கண்டுபிடிப்புகள் சாதனைகளை மருத்துவ உலகம் நிகழ்த்தினாலும் அவை மேல் தட்டு மக்களுக்கானதாகவே இருக்கிறது .பெரும் வணிக நோக்கமாகவே இருக்கிறது. மருத்துவத்துறையின் கொள்கைகள் கோட்பாடுகள் கன்டுபிடிப்புகளை ஏதோ ஒர் கட்டத்தில் வணிகம் கையகப்படுத்திவிட்டது. அதை மறு சீரமைப்பு செய்து மீட்கவேண்டும்.
உடல் மனம் எல்லாம் ஒருங்கிணைந்த ஒன்று . மனதில் ஏற்படும் அச்சம் ,வாழ்க்கை நெருக்கடி டென்சன் உணவு முறை வாழ்வு முறை எல்லாம் தான் உங்கள் உடலில் நோய்க்கான ஆதிகாரணம். அதை கண்டறிந்து சரிசெய்தால் மட்டுமே நோய் மாறும் .அது உங்களிடமே உள்ளது. உங்கள் உடலின் எல்லா பிரச்சனையும் குணமாக்கும் சக்தியும் உங்கள் உடலிலேயே உள்ளது. இதை எடுத்து சொன்னால் மருத்துவதுறையால் காசு பார்க்க முடியாது. எனவே அவர்கள் மருத்துவம் என்பதற்கு காசு பார்க்கும் வேறொரு வியாபார புரோட்டொ காலை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள் . அதன் படி அவர்களுக்கு உங்கள் சேமிப்பை கொடுப்பது மட்டுமே உங்கள் வேலை.. உங்கள் உடல் பிரச்சனைக்கு ஒரு தற்கால ரெடிமேட் தீர்வை உங்களுக்கு தருவார்கள்..உங்கள் காலில் பிரச்ச்சனையென்றால் காலை வெட்டி எடுத்தாவது பிசச்சனையை தீர்ப்பார்கள்..பெரும்பாலும் அவர்கள் தருவது placebo மருந்துகள் .அவற்றில் மருந்துகள் இல்லை. அவை மருந்துகள் என்ற உங்கள் நம்பிக்கை குணமளிக்கிறது.
உடலை ஆங்கில மருத்துவம் ஒரு எந்திரமாக மட்டுமே பார்க்கிறது.. ஒரு TV ஐ பழுது பார்ப்பது போல .ஆனால் உடல் என்பதும் நோய் என்பதும் அனுபவம், கோடிக்கணக்கான செல்களாய் இருப்பதும் உறுப்புகளாய் இருப்பது ஒரே ஆன்மாவின் அனுபவம். கை வலிக்கு ஒரு மருந்து தலைவலிக்கு ஒரு மருந்தில்லை. வலி ஒன்றுதான், மருந்தும் ஒன்றாக தான் இருக்க வேண்டும். ஏதோ சத்துகள் இன்றி ஒரு உறுப்பு மட்டும் கெடுவதில்லை உடல் முழுதும் அந்த பாதிப்பு இருக்கும். ஆங்கில மருத்துவத்தில் அடிப்படையில் பெரிய தவறு இருக்கிறது..
மாற்று மருத்துவமும் நெடுங்காலமாக மக்கள் அனுபவத்திலிருந்து அறிந்து கால காலமாக பயன்படுத்தி வந்த அறிவையும் நவீன மருத்துவம் ஏறெடுத்தும் பார்க்காமல் புறங்காலால் எட்டி உதைக்கிறது. அதை குற்றமாக வரையறுக்கிறது .எளிய மருத்துவங்கள் மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது. அழிக்கப்படுகிறது. ஏனெனில் அந்த மருந்துகள் இலவசமாக இயற்கையில் கிடைக்கும் எளியவைகளாக இருப்பதால். உண்மையை உலக்கு சொல்லும் மருத்துவர்கள் தண்டிக்கப் படுகிறார்கள் . மாற்று மருத்துவத்தால் குணமான எத்தனையோ நோய்கள் இன்று குணப்படுத்த முடியாத நோய்களாக ஆங்கில மருத்துவத்தால் மாற்றப்பட்டு மக்களை மருத்துவ கைதிகளாக வைத்திருக்கிறது.குறைந்த விலையில் கிடக்கும் மருந்துக்கு பதிலாக அதிக விலை பிராண்டட் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். உங்கள் நிதி நிலவரம் பயம் ஆகியவற்றை கணித்து அதற்கேற்ப மருத்துவம் , ஒரு காய்ச்சலுக்கு பரசிட்டமால் கொடுத்தும் விடலாம் பத்து பரிசோதனைகளுக்கும் பரிந்துரைத்து கமிசன் பார்க்கலாம் ,அட்மிட் செய்து பத்து நாள் ரூம வாடகை இத்தியாதி என எவ்வளவு முடியுமோ அவ்வளவு உறிஞ்சவும் செய்யலாம்.
மருந்து கம்பனிகளின் ஆசையை தூண்டும் ஆஃபர்களுக்காக விலைஉயர்ந்த அல்லது தரமற்ற மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களின் பேராசையால் பலியாகும் ஏழைகள். , நாக்கை பார்த்து கண்ணை பார்த்து ஸ்டெத் வைத்து பார்த்து கண்டுபிடிக்கும் எளிய பரிசோதனைகள் எல்லாம் வழக்கொழிந்து தேவையில்லாத காஸ்ட்லி டெஸ்டுகள், ஸ்கேன்கள் என ஜெக ஜோதியாய் மருத்துவ வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.மக்கள் தங்கள் உடலை உயிரை பற்றிய பீதியில் எப்போதும். மருத்துவ உலகம் உலக பெரும் வணிகர்கள் கையில். உலக அரசாங்கங்கள் எல்லாம் மருத்துவத்துறையின் பிடியில். இப்போது சொல்லுங்கள் உலகாள்வது யார்?
கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்