கபடம் (Deception) பகுதி 5

 

  தற்கால கல்வி முறை ஏற்கனவே மாணவர்களை ஒரு கார்பரேட் அடிமை வேலைக்காக தயார்படுத்தும் பயிற்சி முகாமாகத்தான் இருக்கிறது. அதனோடு நம் நாட்டு கல்வி முறையிலே மற்றொரு கபடமும் புகுந்துள்ளது.அது ஏழைகள் ,நடுத்தர மக்கள் , தாழ்தத்தபட்ட ,பிற்படுத்த பட்ட மக்களின் கல்வி உரிமையை மறை முகமாக நிராகரிப்பது.
பாடத்திட்டங்கள் வழி மிகைபடுத்தப்பட்ட ,இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் , ஜாதிய நச்சு கருத்துகளை திணிப்பது. மதச் சாயம் பூசுவது .உணமையான வரலாறுகளை வரும் தலைமுறைக்கு மறைப்பது திரிப்பது. இப்படியான தக்குதல்கள் நடக்கிறது. லோக்கல் கலாச்சாரத்தை அழிப்பது .தேசிய கலாச்சாரத்தை திணிப்பது.குலக்கல்வி முறைய மறை முகமாக கொண்டுவர முயல்வது. வட மொழிகளை திணிப்பது என ஆதிக்க சக்திகள் பல அழுகுணி ஆட்டம் ஆடுகிறது.
             அடிப்படை கல்விகளை அரசு இலவசமாக வழங்கினாலும் முதலில் அந்த அரசு கல்வி துறையை தரமற்றதாக ஆக்குவது. அல்லது அரசு கல்வி தரமற்றது என்ற எண்ணத்தை பொது புத்தியில் விதைப்பது. இதனால பெரும் நன்கொடை , கட்டணம் கொடுக்க வசதிஉள்ளவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க செய்வது. இதனால் ஏழைகள் நல்ல கல்விக்கான வாய்ப்பை இழக்கிறார்கள். அடுத்து உயர் கல்வியிலும் இதே நிலை தான் .ஹாஸ்டல் பீஸ் , வாகன பீஸ் கட்டணம் என அதிக பணம் கொடுப்பவர்களுக்கே உயர் கல்வி.
 
       பலவகையான தகுதி தேர்வுகள் ,நுழைவு தேர்வுகள் என்ற பெயரில் பிற்படுத்தப் பட்ட மக்கள் ஏழைகள் ,கல்வியில் பின் தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர்க்கு மறைமுகமாக மேற்கல்விக்கு தகுதியிழப்புக்கு ஆளாகிகிறார்கள். கல்வி பணம் உள்ள மேல்தட்டுமக்களுக்கு எளிதாக விரும்பிய வண்ணம் கிடைக்கும் கல்வி கீழ்தட்டு மக்களுக்கு எட்டாக்கனியாக திட்டம் வகுக்கிறார்கள். பிள்ளைகளை ஆரம்ப வகுப்பில் சேர்க்கும் போதே இது ஆரம்பித்து விடுகிறது.இதனால் ஏழை எப்போது ஏழையாகவும் .தாழ்த்தப்பட்டவன் எப்போதும் தாழ்த்தப்பட்டவனாகவும் வைத்திருக்கும் பல தந்திரங்களை அரசியல் வாதிகள் மூலம் மேல் தட்டு வர்க்கம் கல்வியில் புகுத்தியிருக்கிறது.
           படித்தவர்களே அதிகார நாற்காலிகளை நிரப்புகிறார்கள் எனவே அதிகாரம் எப்போதும் மேல் தட்டிலே இருக்க வேண்டும் என்ற மேலெண்ணமும் இதற்கு காரணம்.எழைகள் நடுத்தர மக்கள் உயர் கல்வியை பெற தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிட நிர்பந்திக்கபடுகிறார்கள். மீளாக் கடனில் மூழ்குகிறார்கள். பணக்காரர்களுக்கு அது வெறும் ஒரு சுற்றுலா செலவு.
        கல்வித்துறையில் அரசியல் புகுந்து ஊழல்கள் மோசடிகள் மலிந்து காசு கொடுத்தால் மதிப்பெண். கற்பு இழந்தால் மதிப்பெண், ஜாதி பார்த்து மதிப்பெண் என எல்லா அசிங்கங்களும் சம காலத்தில் நிகழத்தொடங்கி விட்டது. கல்வி நிறுவனங்கள் தன் மதிப்பை இழக்கத்தொடங்கி விட்டது. கல்வித்துறை என்பது அரசியல் கூடம். கல்வி என்பது ஒரு மாபெரும் வியாபாரம்.

(தொடரும்) 

கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்