தவ நோக்கம்- பகுதி 3

 

தியானம், தவம், யோகம் என எந்த பெயரில் இருந்தாலும் அதன் முதல் நோக்கம் விழிப்படைவது தான் .இந்த விழிப்பிற்கான விதை பிறப்பிலேயே இருக்கிறது. ஒரு விதை எப்படி ஒரு விருட்சத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கிறதோ அது போல கர்மாவுடன் தொடங்கி விடுகிறது விழிப்பதற்கான முயற்சியும்.
நாம் பிறக்கும் போது அதிக விழிப்புணர்வுடன் தான் இருந்தோம் அப்போது நாம் உணர்வு மையமாக இருந்தோம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பிலிருந்தோம். இதய சக்கரம் திறந்திருந்தது (இதயம் என்ற உறுப்பை குறிக்கவில்லை...இது உணர்வு மையம்.). நம் பீனியல் சுரப்பி சுரந்து ஆன்ம தளத்தின் அலைகளை நம் மத்திய நரம்பு மணடலம் வழி உணர்ந்து கொண்டிருந்தோம். ஆனால் இந்த உலகில் ஐந்தறிவு மனிதர்கள் தாங்கள் அறிந்த உலகை நமக்குள் திணித்து அந்த நம்பிக்கைகளை உள்வாங்கி நாம் வளரத்தொடங்கியதால் புதிய உலகில் சிக்கிக்கொண்டோம். நாம் இதயத்திலிருந்து மூளைக்கு மாறிவிட்டோம். உணர்வு தளத்திலிருந்து அறிவு தளத்திற்கு மாறி விட்டோம். நம் தெய்வீக தொடர்புகளை, நாம் வளர, நம் பகுத்தறிவு வளர இழக்கத் தொடங்கினோம். பீனியல் சுரப்பு ஓய்ந்து ஆன்ம தளத்துடன் தொடர்பறுந்தோம். நாம் மயக்கத்தில் ஆழ்ந்தோம்.
இனி எப்படி இதிலிருந்து விழிப்பது?..எப்படி நம் ஆன்ம தளத்துடன் தொடர்பு கொள்வது? வேறு வழியில்லை..நாம் மீண்டும் குழந்தையாக வேண்டும். எப்படி நம்மை சுற்றியுள்ள ஆறறிவு மனிதர்கள் நம்மை ஹை ஜாக் செய்து நாம் ஆன்ம தள தொடர்பறுத்து ஐந்தறிவில் தள்ளினார்களோ அதே போல் ஆன்ம தளத்திலிருக்கும் ஆறறிவு தெய்வீகம் நம்மை தொடர்பு கொண்டு ஹை ஜாக் செய்து நம்மை புதிய பரிமாணத்துக்குள் உயர்த்த வேண்டும். ஆனால் அவர்கள் தொடர்பு கொள்ள பகுத்தறிவு தடையாக இருக்கிறது. நாம் அறிவு மையத்திலிருந்து உணர்வு மையத்துக்கு வந்தாக வேண்டும்.
யார் இதை எப்படி துவங்குவது? .மிக சிக்கலான ஒன்று இது?
இரவில் தூங்கும் போது அறை சூடாக இருக்கும் வியர்த்து வழியும்,..ஃபேனை அல்லது ஏசியை போடுகிறோம்.. அறை குளிர்கிறது நிம்மதியாக் தூங்குகிறோம் சற்று நேரத்தில் ஓவரா குளிர்ந்து நடுங்கி ஏசியை அணைத்து விடுகிறோம். அப்பாடா நிம்மதியாயிருக்கிறது .. கொஞ்ச நேரம் கழித்து . மீண்டும் வியர்கிறது..மீண்டும் சுவிட்ச் போடவேண்டும். இது போல காரணம் சுவிடசை போட தேவை படுகிறது.
வாழ்வில் ஏற்படும் மிகுதியான உடல் மற்றும் மனத் துயரம், வலி அந்த சுவிட்சை போட்டு விடுகிறது.
மரணம் அந்த சுவிட்சை போடுகிறது.
கையறு நிலைகளில் நாம் கரைந்துருகி கேட்கும் உணர்வு பூர்வமான பிரார்தனைகளில் அந்த சுவிட்சு போடப்படுகிறது.
சரணாகதி ,தன்முனைப்பற்ற நிலை ,பக்தி ,ஞானம் அந்த சுவிட்சை போடுகிறது.
அறிந்தவை எல்லாம் கேள்வி எழுப்பி ,.அனைத்து பொய்யான நம்பிக்கைகளையும் தகர்த்து உண்மையை தேடி அனுபவங்கள் தேர்ந்து ஞானமடைதல் . பகுத்தறிவையும் அதனால் உண்டான அனைத்து அடையாளங்களையும் இழக்க செய்து விடும். உலகை ஒரு குழந்தையை போல உள்ளத்தால் காணும் நிலை தரும். நம் மையம் மூளையை விட்டு இதயத்துக்கு வந்து விடும். இதயம் அந்த சுவிட்ச்சை போடும்.
இப்படி பல காரணங்கள் வழி ஒருவரது கர்மா அந்த சுவிட்சை போடுகிறது. அந்நிகழ்வு மூளையிலிருந்து இதயத்துக்கு திரும்புதல்.
தியானம் என்பது மூளையை விட்டும் உணர்வு மையத்தை கவனிப்பதற்கான பயிற்சி. நாம் உணர்வு மயமாகும் போது நம் குரோமசோம்களில் இதுவரை மயக்கத்திலிருந்த சில ஜீன்கள் விழித்துக் கொண்டு மூளைக்கு தகவல் அனுப்பும். மூளை அதற்கான ரசாயன வேலை செய்து பீனியல் சுரப்பியை சுரக்க செய்யும். இதனால் நம் புலனுணர்வு ஆன்ம தளத்தை தொடர்பு கொள்கிறது.. மூன்றாவது கண் திறக்கிறது .. சைக்கிக் ஆற்றல் கிடைக்கிறது.. ஆன்ம தரிசனம் கிடைக்கிறது .ஞானத்தின் வாசல்கள் திறக்கிறது. கருணை மேலோங்குகிறது. வேறு பரிமாணங்களின் படைப்புகள், மற்றும் எல்லா உயிர்களுடன் ஆன்ம தகவல் பரிமாற்றங்கள் சாத்தியமாகிறது. மரணத்தின் உண்மை அறிகிறீர்கள். பல்வேறு திரைகளை உணர்கிறீர்கள். உங்களை யார் என உணர்கிறீர்கள்,நீங்கள் அக விழிப்பு பெற்று விடுதலையாகிறீர்கள்.பேரின்பம் Ectacy அடைகிறீர்கள் மனம் அமைதி அடைகிறீர்கள்.
இதில் சொல்லாததும் நிறைய உண்டு. மற்ற நோக்கங்களும் உண்டு...
விழிப்பு அடைவதற்கு தகுதியாக உங்கள் நிலையும் , இறை அருளும் வேண்டும் . பல படிகள் பல அனுபவங்கள் இதற்கிடையே உண்டு..சிலருக்கு இது வரமாய் கிடைக்கும் சிலர் எவ்வளவு முயன்றாலும் கடினமாக இருக்கும்..காரணம் அவர்கள் மூளையிலிருந்து இதயத்துக்கு நகர்வதில்லை.. ஈகோ , வெறுப்புணர்வு, உண்மையிலிருந்து விலகிய நம்பிக்கைகள், குறை அறிவு இதயத்தை அடைவதிலிருந்து தடுக்கிறது. 

தவ நோக்கம் : மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்