தவத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. தியான முயற்சிகளுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது .. காரணம் இவை இயல்பில்லை. ஏனெனில் ஆனமா தன் இயல்பிலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக மனித உணர்வில் இருக்கிறது. அந்த நோக்கம் நிறைவேறி விட்டால் தானாக அது தன் நிலைக்கு திரும்பி விடும்.. இங்கு தியானம் தவம் என வலிந்து எடுக்கும் முயற்சிகளில் கற்பனையான நோக்கம் இருக்கிறது. ஏன் கற்பனை என சொல்கிறேன் என்றால்.. நமக்கு ஒரு நோக்கம் அல்லது இலட்சியம் ஒன்று நம் பார்வையில் இருந்தாலே நாம் அதை அடைய முடியும். உதாரணம் எவரெஸ்ட் உச்சியை அடைவது ., அமெரிக்காவின் அதிபர் ஆவது,உலக அழகியை திருமணம் செய்வது , ஒரு கோடி மரம் நடுவது என எந்த நோக்கம் இருந்தாலும் அந்த நோக்கத்தை பற்றிய தெளிவான ஒரு விஷன் , நான் அடைய வேண்டியது இது தான் என சுட்டிகாட்டுமபடியான ஒன்று தூரத்தில் இருப்பதை மனக்கண்ணாலாவது பார்க்க வேண்டும். அதை எப்படி அடையவேண்டும் என்ற மிஷன் வேண்டும். அப்போது தான் மனம் அந்நிகழ்வை உருவாக்கும். ,நாம் இன்னதென்று தெரியாத ஒரு லட்சியத்தை அடையவே முடியாது. நம் லட்சியம் எது பரம் பொருளாக மாறி விடுவதா? சுயத்தை இழப்பதா? அனுபூதி அடைவதா? இவை மூன்றும் எதுவென தெரியாத நிலையில் எப்படி அதை லட்சியமாக வைக்க முடியும்.?
கடவுளை ,அடைவது நம் லட்சியமென்று தவம் செய்தாலும் கடவுளை அடைய முடியாது.. ஏனெனில் கடவுள் என்ற வார்த்தையை அல்லாது கடவுளை பற்றி எதுவும் நமக்கு தெரியாது..தெரிந்து கொள்ளவும் முடியாது .தெரிந்தது கடவுளும் அல்ல. எனவே கடவுளை அடைவது எப்படி? அடைவது கடவுள் தான் என அறிவது எப்படி? நாம் கடவுள் என்று அறிந்தது அத்தனையும் கற்பனை..நாம் அறிவுக்கு அப்பால் உள்ள உண்மையே கடவுள் நம் உணர்வுக்கு அப்பால் உள்ளது. அந்த உண்மை. அறிவால் அறிய முடியாது சரி உணர்வால் உணர முடியுமா? கடவுள் இருப்பதை தான் உணர முடியும். கடவுள் தன்மை வெளிப்படுவதை உணர முடியும். பரம் பொருளை உணர முடியாது . காரணம் ஒன்று உணரப்படுவதற்கு பேதம் தேவைப்படுகிறது. உணரப்படுவது, உணர்வது, உணர்வு என்ற பேதங்கள் தேவைப்படுகிறது. பரம் பொருள் அவ்வாறான பேதமற்றது. எதை அடைய முயல்கிறோம்? நம் ரியாலிடியிலிருந்து வெளியேற விரும்புகிறோமா? புதிய ஆற்றல்களை பெற உத்தேசமா?
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
--தேடல் தொடரும்.
தவ நோக்கம் : மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்