வானத்திலா உள்ளத்திலா?

 

இறைவா என்று பலரும் வானத்தை நோக்கி கையேந்துவதை பார்க்கிறோம். இந்த பழக்கத்திற்கும் இறைவன் வானத்தில் இருக்கிறான் என்ற உணர்வுக்கும் என்ன ஆதி காரணம் இருக்க முடியும். ஆனால் ஆன்மீக வாதிகள் உள்ளத்தில் தேடுகிறார்கள் ஏன்?

இறைவன் என்றால் நம்மை படைத்து பரிபாலிப்பவன்.நமக்கான உணவை வழங்குபவன் பாதுகாப்பவன் என பொருள். நம் உடல் உருவாகி வளர்வதற்கு ஆதாரமாக் இருப்பது சூரியன் வழியாக வெளிப்படும் சக்தி இதுவே தாவரங்கள வளர செய்து நமக்கு உணவாகிறது. நாம் உண்ணும் புலால் உணவு கூட செரிக்கப்பட்ட தாவர உணவே.நம் பரிணாமத்தில் ஆரம்ப கட்டமுதல் நம் சக்தியின் ஆதாரம் வானத்திலிருந்து கிடைக்கும் சூரிய சக்தியே…ஒரு தாவரம் சூரியனை நோக்கியே வளர்கிறது. கடலில் முதலில் தோன்றிய உயிருக்கும் சக்தி ஆதாரம் சூரிய ஒளியே . வானத்திலிருந்து மழையை பொழிய வைப்பதும் சூரிய சக்தியே . இதனால் சூரியன் கடவுள் என்பதல்ல பொருள்.சூரியனுக்கும் ஆதாரமாக பல சக்தி மண்டலங்கள் பிரபஞ்சத்தில் இருக்கிறது. அனைத்தும் வானத்திலிருந்து வருவதாலும் வானம் உயிர்களுக்கு ஒரு சக்தி வழங்கியாக இருக்கிறது . வானம் உயிர்களை பாது காக்கிறது ,வானம் பிரம்மாண்டமானது . வானம் மர்மங்கள் நிறந்த்து. வானம் காலமாக இருக்கிறது.

இந்த ஆதி ஜீன்கள் கூட வானத்திலிருந்து பூமிக்கு வந்ததாக இருக்கலாம் . எனவே தங்களை படைத்து பாதுகாத்து பரிபாலிக்கும் சக்தி வானத்திலிருப்பதாக உயிர்களின் ஜீன் பதிவுகள் நம்புகிறது..

ஆனால் காண முடியா உணர முடியா அந்த சக்தியூற்றுக்கு ஒரு கற்பனையை உள்ளத்தில் கொடுத்து கண்ணை மூடி உள்ளத்தில் தேடுகிறது பக்தி .அல்லது வெளியே ஒரு பிம்பத்துக்குள் அந்த கற்பனையை வைத்துவிடுகிறது.

ஆனால் ஆன்மீகம் என்பது கடவுளை தேடுவதல்ல. தன்னை ஆராய்ந்து தன் மூலத்தை தேடுவது. உள்ளென்பதும் புறமென்பதும் தான் என்பதும் தன் அறிவு மயக்கத்தால் உண்டாகும் தோற்றமே. நம் இருப்பிற்கு காரணமான அந்த ஆதார காரணிதான் புறத்தே சக்தியாய் இடமாய் காலமாய் அறிவாய் பொருளாய் பவுதீகமாக் Projection ஆவதும் உள்ளே மனமாய் எண்ணமாய் உணர்வாய் சூட்சும்மாக Projection ஆவதும். எண்ணிலா தோற்றங்களாய் காண்பவை ,அறிபவை எதுவும் அவனில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் காரணியாக இருக்கிறது அந்த பேரறிவு. நீங்கள் வானத்தில் தேடினாலும் உள்ளத்தில் தேடினாலும் காதலியிடம் தேடினாலும் குழந்தையிடம் தேடினாலும் பூக்களில் தேடினாலும்,அன்பில் தேடினாலும் நீங்கள் அறியும் எதில் தேடினாலும் அதன் ஆதார புள்ளி ஒன்றே.

கருத்துகள்