அச்சம் தவிர்

      நீங்கள் என்பதும் உங்கள் உடல் என்பது கோடிக்கணக்கான செல்கள் எனும்
நுண்ணுயிர்களின் கூட்டு உணர்வு.. நீங்கள் பாதுகாப்பாக உணரும் வரை அமைதியாக இருக்கும்வரை அவற்றை ஒரே உயிர் தொகுப்பாக நிர்வகிக்க முடியும்.. நீங்கள் அதீத அச்சமுறும் போது .. அந்த தொகுப்புணர்வு கலைந்து விடும் . அது தான் மரணம். . செல்களுக்கிடையே நிகழும் தகவல் தொடர்பை அச்சம் அழித்துவிடும். ..ஒரு தேசத்தின் நிர்வாகம் நெருக்கடிக்குள்ளாகும் போது... என் நாடு எனும் உணர்வு போய் என் வீடு என் உயிர் என சுருங்கி சோவியத் ரஷ்யா உடைந்தது போல் உடைவது தான் மரணம். எனவே அச்சம் ஒரு மனித உயிரை ஷட்டவுண் நிலைக்கு எளிதில் கொண்டு சென்றுவிடும்..

         இனி ஒரு மனிதன் அச்சத்தின் உச்சத்துக்கு கொண்டு போவது எது என்றால் போதுமான பிராணவாயு கிட்டாத நிலை தான். ரத்தத்தில் கரியமிலவாயு அதிகரிக்கும் போது அச்சம் உச்சம் ஆகி உயிரின் மெயின் சுவிட்ச் அணைக்கப்பட்டுவிடும் ...அச்சம் ஒரு மனிதனை எதற்கும் அடிமைப்படுத்திவிடும்... அச்சம் ஏற்பட்டால் தான் உயிர்வாழ மற்றவர்களை அழிக்கவும் தயங்காத வெறி உணர்வை உண்டாக்கி விடும் ... எனவே அச்சத்தை பரப்பாதீர்கள் ..அச்மூட்டதீர்கள்... அச்சப்படாதீர்கள்... சில நேரங்களில் அச்சம் உயிர் காக்கும் முயர்சிகளை விரைந்து எடுக்க உதவும் ... ஆனால் ..அதீத அச்சம் அறிவையும் ஆஃப் செய்து... உடலையும் ஆஃப் செய்துவிடும்.....
கொரானா வைரஸ் நுரையீரலை பாதித்து பிராணவாயு கிடைக்காமல் போவதால் உண்டாகும் அச்ச உணரவே மரணம் ஏற்படுத்த முக்கிய காரணம் இது பற்றி மூளையில் ஏற்றிய பய உணர்வும் கூட அந்த வேலையை துரிதப்படுத்தும் . எனவே நிறைய பிராண வாயு எடுத்துக்கொள்ளுங்கள் ..உடலையும் மூளையும் ஓய்வில் வைத்துக்கொள்ளுங்கள்... பரிணாமத்தின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் ஒரு வைரசை மனிதனாக பரிணமித்துபலகோடி ஆண்டுகள் இந்த பூமியில் கோலோச்சும் இந்த உடல் எப்படி கையள்வது என கற்றுக்கொள்ளும் .அதற்கான பேரறிவு உடலுக்கு உண்டு ..
இயற்கை தன்னை அப்டேட் செய்யும் ஒர் முயற்சி இது... மனிதனை இன்னும் பலமானதாக்க முயலும் பரிணாம முயற்சி இது...
இந்த நிலை நீங்கள் உங்களுக்கு வேண்டி தொடங்கியது தான். ..உங்கள் உடலும் இந்த வைரசும் வெறும் விர்சுவல் டேட்டாதான்... அதை பயங்கர அனுபவமாக அனுபவிப்பதும்.. அநாயசமாக கடந்து போவதும்... நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள். இந்த பவுதீக உலகம்... அதன் அனுபவங்கள்... எல்லாம் உங்கள் மூளையில் ...நினைவகளில் சேமிக்கப்பட்ட அறிவினால் உண்டாவது...
கொரானா.... என்று தினம் அதுபற்றிய பயங்கர அறிவை மூளையில் சேமித்துக்கொண்டே உங்கள் கற்பனை அச்சத்தை வளர்த்து கொண்டிருக்காதீர்கள் எந்த வைரசையும் கொல்லும் மருந்து எப்போதும் கண்டுபிடிக்கப்படவில்லை...கண்பிடிக்கப்பட போவதுமில்லை.. ஏனெனில் வைரஸ் கொல்ல முடிகிற உயிரே அல்ல. உங்கள் உடல் தான் தன்னை தானே. காப்பாற்றிக்கொள்கிறது ..அதற்கு உங்கள் உடலின் நோயெதிற்ப்பு அறிவு வேலை செய்ய வேண்டும்... உடலின் அறிவு வேலை செய்ய உங்கள் அறிவு அமைதியாக வேண்டும். உடல் தேவையான ரசாயனங்களை உற்பத்தி செய்து தேவையான மருந்து தயாரிக்கும்...அதற்கு தேவையான ஊட்டச்சத்து உங்கள் உடலுக்கு வழங்குங்கள்.. மற்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க அறிவார்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் .. ..

        நாம் போலியாக உருவாக்கிய ஓர் உலகத்தை தான் கொரானா உடைத்தெறிந்திருக்கிறது ..இனி வரும் உலகம் நாம் முன்பு வாழ்ந்த உலகம்.. அதில் வாழ தயார்படுத்திக்கொள்ளுங்கள்... திட்டமிடுங்கள்...உண்மையாக வாழுங்கள்...வாழ்வின் புதிய அர்த்தங்களை தேடுங்கள்.. கொரானா ஒரு நிகழ்வு அவ்வளவுதான்..அது ஒரு விளைவு.. மட்டும் தான்..அது நல்லது கெட்டது எல்லாம் நாம் அதை எடுத்துக்கொள்வதை பொறுத்தது.
              முன்பு சொன்னதை போலவே மத ரீதியான அச்சத்தையும் பரப்பாதீர்கள்.. அச்சம் எவ்வாறு செல்களின் ஒருங்கிணைப்பை குலைத்து மரணத்தை ஏற்படுத்துமோ அது மத துவேசம் மத பயங்கரவாதம் வெறுப்புணர்வு... மக்களிடையே உள்ள ஒருங்கிணைப்பை துண்டித்து.. அச்சத்தால் தேசம் இறந்துவிடும்.... பின் இங்கு இந்தியா இருக்காது... தனி தனி குழுக்கள் ஜாதி இனம் மொழி சிதறுண்டு போகும்.. பின் தனித்தனி மனிதர்கள் என சுருங்கிவிடுவோம். வேற்றுமைகள் இருக்கலாம்... கை கால் இதயம் நரம்பு ரத்தம் என வேறபட்டாலும் எல்லாமே அடிப்படையில் செல்கள் தான்... ஆனால் அவை ஒன்றை மனிதனின் செல்கள் என்ற உணர்வில் இருக்கும் வரை தான். அவற்றுக்கும் வாழ்வு. ..கண்ணீரை துடைக்க கை வரவேண்டும்... கையில் அடிபட்டால் கண்ணீர் வரவேண்டும். மத வெறுப்பு ...உருவாக்கும் அச்சம் தேசத்தை கொன்றுவிடும்..

கருத்துகள்