நம் வாழ்வின் எல்லா
பிரச்சினைகளையும் எல்லா தேவைகளையும் பணத்தால் சரி செய்துவிடலாம் என நம்புகிறோம். அதற்காக நம் வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொளகிறோம். ஆனால் ஏன் வாழ்கிறோம் என்ற முக்கிய கேள்வியை முற்றிலும் மறக்கடிக்கப்பட்டோம்.
ஆனால் இந்த உலகும் அதன் அமைப்புகளும் சட்ட திட்டங்களும் வியாபாரம் செய்யும் அதிகார வர்க்கத்தால் அமைக்கப்பட்டது. தாங்கள் எந்த உழைப்புமின்றி சுக போகிகளாக வாழ மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சிக் குடிக்கும் விதமாக இந்த உலகை அமைத்திருக்கிறார்கள். மற்ற மக்கள் அவர்களுக்காக கடுமையாய் உழைக்கிறார்கள்.
கல்வி என்பது மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் படி அமைக்கப் பட்டுள்ளது. ஏழைககளுக்கு கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாக்ப்படுகிறார்கள் .நடுத்தரர்கள் போராடி காரப்பரேட் அடிமைகள் ஆகும் கல்வித்தகுதி பெறுகிறார்கள். அதிகார வர்க்கம் வாணிபம் செய்து உலகை ஆளுகிறார்கள் .
அரசியல் வாதிகள் கார்பரேட்ணடுகளின்ம் கையாளாகி பணம் நக்கி வாழ்கிறார்கள் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்காக இல்லை. தாங்கள் பதவி பெற உதவும் ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து அவர்களது பிச்சை பெற்று அவர்ளுக்காக அரசியல் செய்கிறார்கள்.
மருத்துவம் என்பது வியாபாரமாகி விட்டது. நம் நோய்கள் எனபது தவறாக கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறைகளாலும் தவறாக விளம்பரப்படுத்தப்படும் உணவு முறைகளை கண்முடி பின்பற்றுவதாலும் தவறான மருத்து முறைகளாலும் தான். நோய்க்கு மருத்துவம் செய்யப்படுவதில்லை .நோய்குறிகளை மறைக்கவே மருத்துவம். உங்கள் பணம் தான் மருத்துவத்தின் குறிக்கோள் அதை கைப்பற்ற அத்தனை பொறிகளையும் திட்டங்களையும் கட்டமைத்து வைத்துள்ளார்கள். நோய்கள் பற்றிய கருத்துக்கள் உங்கள் மூளையில் திணிக்கபட்டு வியாபாரமாக்கப்படுகிறது. நோய் என்பது உங்கள் நம்பிக்கை.
நாம் எதை உண்ண வேண்டும் என்று வியாபார நிறுவனங்கள் நிர்பந்திக்கின்றன. இயற்கையாய் பூமியில் விளையும் அனைத்தையும் நாம் உண்ண முடியாதவாறு செய்து அதை உருமாற்றி ரசயனம் சேர்த்து விஷமாய் மாற்றி நம்மை உண்ணச் செய்கிறார்கள். நம் உணவை, நம் தண்ணீரை நம் காற்றை நாம் விலை கொடுத்து வாங்க செய்கிறார்கள்.
விஞ்ஞானம் எதை கண்டுபிடிக்க வேண்டும் எதை கண்டுபிடிப்பதை தடுக்க வேண்டும் என்ற முன் முடிவோடு இயங்குகிறது.எது உண்மை எனபதை விட எதில் வியாபார ஆதாயம் உள்ளதோ அதை முன்னெடுக்கவே விஞ்ஞானிகள் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள்.
மதங்கள் மத பீடங்களாக மாறி பெரும் காரப்பரேட்டுகளாகவும் அரசாங்கத்தை இயக்கும் சக்தியாகவும் இருக்கிறது. இவர்கள் தங்களை நிலை நிறுத்த மத துவேசங்களை மக்களிடையே பரப்பி மக்களை பாது காப்பற்ற உணர்வுடன் பீதியிலே வைத்திருக்கவும் அதனை வெறுப்புணர்வை ஓட்டுக்களாக மாற்றி அதிகாரத்தை கைப்பற்றவும் பயனபடுத்துகிறார்கள். சாதாரண மக்களுக்கு அவர்களால் எந்த நன்மையும் இல்வை. சாதாரண மக்களையே சாதாரண மக்களுக்கு எதிராக திருப்பி அவ அடித்து சாகவைத்து அதில் தங்கள் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ளும் உத்தேசமின்றி எதுவுமில்லை.
காரப்பரேட் கொள்ளை போக அரசாங்கமும் பல வகையில் கொடும் வரி விதித்து சாதாரண மக்களை மேலும் மேலும் பிழிந்து உழைப்பெடுத்து. தங்கள் உரிமை பறிக்கபட்டதை அறியவோ எதிர்த்து போராடவோ முடியாத சூழ்நிலையில் அமுக்கி வைத்திருக்கிறார்கள்.
போர்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்படுகின்றன. அதன் பின்னால் பெரும் வியாபாரம் இருக்கிறது. பெரும் கொள்ளை இருக்கிறது. பெரும் இன அழிப்பு இருக்கிறது.
சினிமா இசை கிரிக்கெட் செக்ஸ், மதம் என்று மக்களின் முளையை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் கார்பரேட்டுகளின் வியாபார உத்திகள். இதன் பின்னால் வணிகம் இருக்கிறது
இந்த உலகம் வணிகர்களுக்கானது வணிகர்களுக்காக மிக தந்திரமாக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அனுபவிக்கும் எந்த கஷ்டங்களும் வரிகளும் துயரங்களும் அந்த அதிகார வர்கத்தினரை தீண்டாது.
சாதாரண மக்கள் இதிலிருந்து விடுபட முடியாத மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் அதிகார வர்க்கத்தின் அத்தனை பொறிகளையும் அறிந்து அவர்கள் தரும் வாக்குறுதிகளில் உங்கள் பேராசை வீழ்ந்து விடாமல் சுதாரித்துக் கொகொள்ளுங்கள்.
தற்சார்பு பொருளாதாரத்திற்கு மாறுங்கள். பொய்களிலும் மாயைகளிலும் வீழாமல் உண்மையாய் உங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழுங்கள். அடிமைத்தளையிலிருந்து விடுவித்தால் உங்கள் வாழ்வு எளிது வாழ்வு சுகமாகும். வாழ்வு ஏன் என்று உணர்ந்து வாழுங்கள்.

கருத்துகள்