மனித இனத்தின் வரலாறு முழுவதும் ரத்தக்கறை புரண்டது. அன்றும் இன்றும் எங்கும் அநியாயங்களும் அக்கிரமங்களும் தலைவிரித்து பேயாட்டம் ஆடுகின்றன. எங்கு பார்த்தாலும் மரண ஓலம், திரும்பிய திசையெல்லாம் யுத்தங்களும் கூட்டுக்கொலைகளும் சர்வ சாதாரனமாக நடக்கின்றன. மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாமல் போய் விட்டது. நீதியின் குரல் வளையை நெரிக்கும் அதிகாரமும் பணமும் ஒரு பக்கம் விபச்சாரம் செய்யும் கூட்டு மனசாட்சி. கண்டும் காணாமல் நடிக்கும் பொது ஜனம். அநீதிக்கு இரையாகும் மானுடம்.அப்பாவி ஏழைகள்.பெண்கள் ,குழந்தைகள் மீது நடத்தப்படும் வன் கொடுமைகள் என காட்டு விலங்குகள் கூட செய்ய துணியாத பயங்கர வாதத்தை மனிதன் தன் இனத்தின் மீது உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு நொடியிலும் அரங்கேற்றிக் கொண்டேயிருக்கிறான்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? எந்த உணர்ச்சி மனிதனை இவ்வாறு செய்ய தூண்டுகிறது? வயிற்றுப்பசி காரணமா? என்றால் இல்லை. எந்த மிருகமும் உணவுக்காக அன்றி இன்னொரு உயிரை கொல்லாது. .ஆனால் மனிதனை காரணமேயின்றி கொல்கிறான். நாடு ,மதம், மொழி, இனத்தின் பேரால், விஞ்ஞானத்தின் பேரால்,மூடக் கொள்கைகள் பேரால், முட்டாள் தலைவர்கள் பேரால், காமத்தின்
பேரால் கொன்று குவிக்கப்படும் உயிர்களுக்கு கணக்கில்லை.ஆனால் இவை அத்தனைக்கும் அடிப்படையான காரணமாக விளங்குவது எது? ஈகோ என்ற தன் முனைப்புதான். தன்னை முன்னிறுத்தி மற்ற உயிர்களை சிறுமைப்படுத்தி தனக்கானதே உலகம் மற்றவர்கள் யாரும் எனக்கு சமமானவர்கள் இல்லை,என கருதும் பாசிஸ மனோபாவம் தான் உலகின் சகல தீமைக்கும் காரணம். என் இனமே உயர்ந்தது, மற்றவர்கள் தாழ்ந்தவர்கள், ஈனர்கள் அருவருப்பானவர்கள் மனித குலத்தின் நோய், அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள், அறிவற்றவர்கள், அவர்கள் நமக்கு சமமானவர்கள் இல்லை , நமக்கு பணி செய்யவே அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்ற எண்ணத்தால் நிரம்பி வழியும் வலிமை மிக்கவர்கள் , அதிகாரங்களை பலவந்தமாக எடுத்துக் கொண்டவர்கள். அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் புரட்சியாளர்களை, அல்லது சிறு பான்மையோரை அழித்தொழிக்க அரங்கேற்றுவது தான் இந்த வன்முறை. தலை முறை தலைமுறையாக இந்த சீழ் பிடித்த சிந்தனையை தன் இனத்தில் போதித்தும் கேட்டும் தலை வீங்கியவர்கள் தான் இத்தகைய கயவர்கள்..இந்த மனோபாவம் ஒரு சிலந்தி வலை போல உலகம் முழுவதும் பின்னியிருக்கிறது.இவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சமூகத்திலும் ஊடுருவி மக்களை ரகசியமாய் ஆட்டுவிக்கிறார்கள்.உலகம் முழுவதும் அதன் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டி்ருக்கிறது. இதன் ஆணி வேர் சாத்தானிய சக்தி .
சாத்தானிய பின்னணி
சாத்தான்
அல்லது சைத்தான் என்ற வார்த்தையில் இங்கு மனித குலத்தின் உள்ளங்களை ஊடுருவி அதில் தீமையை
விதைத்து அடிமைப்படுத்தும் ஒரு படைப்பு பற்றியே இவ்வாறு கூறுகிறேன். அப்படி ஒரு படைப்பு
உண்மையில் இருக்கிறதா என்றால் அதற்கு பதில் ஆம். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த
தீய சக்தி மற்றொரு பரிணாமத்தில் உள்ளது ஆனால் தனக்கு அடிமையான மனிதர்களை கொண்டு உலகைப்
பாதிக்கிறது. இவர்கள் இல்லுமினாட்டி எனும் சாத்தான் வழிபாடு செய்யும் கூட்டம். இதுபற்றி
பின்னர் விளக்குகிறேன் அல்லது இணையத்தில் தேடுங்கள் உண்மைகள் ஆதாரங்களுடன் கொட்டிக் கிடக்கிறது. இதற்கு பணிந்தவர்களுக்கு பலமும் பணமும் அதிகாரமும் கிடைக்கிறது. எதிராக இருப்பவர்களை தடையாக இருப்பவர்களை கருவறுப்பது இது தான் சாத்தானின் செயல் திட்டம்.
குர்
ஆன் மற்றும் பைபிளில் சபிக்கப்பட்டதாக கூறப்படும் சைத்தான் அதற்கு காரணமான சம்பவமும்
விவரிக்கப்படுகிறது. இறைவன் ஆதமை மண்ணால் படைத்து ஆதமுக்கு சிரவணக்கம் செய்ய இறைவன்
பணித்த போது ஏற்கனவே ஒளியால் படைக்கப்பட்ட தேவதைகள் அல்லது மலக்குகள் இறைக் கட்டளை
ஏற்று பணிந்தன, ஆனால் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் மண்ணால்
படைக்கப்பட்ட இந்த மனிதனையா என்னை வணங்க சொல்கிறாய்? அவனை விட நானே உயர்ந்தவன் என்று
மறுத்து விட்டான் அதன் மூலம் இறை சாபம் பெற்று மனித குலத்தை வழிகெடுக்கும் அதிகாரமும்
பெற்றான் எனக்கூறுகிறது, இது மனிதர்கள் புரிந்து கொள்ள இவ்வாறு விவரிக்கப்பட்டாலும்.
இதில் ஆழமான உண்மைகள் உள்ளன.இறைவன், ஜின்கள் மலக்குகள் தேவதைகள் இவை என்ன ? இவற்றின்
உண்மை என்ன? இந்த தகவல்கள் எங்கிருந்து வெளிப்பட்டது? பகுத்தறிவைக் கொண்டு இதை விளங்குவது
எப்படி என்பதை பின்னர் ஆராயலாம். இப்போதைக்கு. சைத்தான் என்ற படைப்பின் மனம் மனிதர்களை
தன்னைவிட இழிவான ஒன்றாய் பார்க்கிறது என்ற உண்மையும் அவ்வாறு மனிதர்களை இழிவாய் அடிமையாய்
காணும் மனோபாவத்தின் விளைவுகளே உலகில் நடக்கும் கொடுமைகளுக்கும் காரணம் என்பதையும்
கவனித்தால் அனைத்திலும் சைத்தானின் பின்புலம் இருப்பது தெளிவு.
சைத்தானின் அடையாளம்
மனித குல எதிரிகள் . சாத்தானிய கூட்டங்களை அடையாளம்
காண சில வழிகள் உண்டு, இவர்கள் சாதி, இன வெறி
பிடித்தவர்கள்.தங்கள் இனத்தில் மற்ற இனத்தவர்களை கலக்க விட மாட்டார்கள்.சமத்துவத்திற்கு
எதிரானவர்கள் அதற்காக பிற இனத்தை தந்திர உபாயங்கள் துரோகங்கள் மூலம் ஆட்கொண்டு அழித்து ஒழிப்பார்கள். சைத்தான் என்ற வார்த்தையை தீய சக்தி என்றும் வைத்துக் கொள்ளுங்கள். பணம் சாத்தானின் ஆயுதம், பணம் என்பது உண்மையான ஒன்றல்ல அது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று, அதை உண்மையானதென நம்ப வைத்து அதன் மூலம் உலகை கட்டுப்படுத்துவது .யாரிடமெல்லாம் எந்த அமைப்புகளிடமெல்லாம் பணம் அதிகம் புழங்குகிறதோ அவர்கள் சாத்தானின் அடிமைகள். அதிகாரம் என்பதும் இது போல சாத்தானால் போலியாய் உருவாக்கப்பட்ட ஒன்று. உலகில் யாரிடமெல்லாம் அதிகாரம் குவிந்து கிடக்கிறதோ அவர்கள் சாத்தானின் அடிமைகள். ,எங்கெல்லாம் போகத்திற்கும் வியாபாரத்திற்கும் பெண்கள் உடல்கள் அதிகம் பயன் படுத்தப் படுகிறார்களோ அதுவும் சாத்தானிய அடிமைகள் .எந்த மதங்களில் எல்லாம் சமத்துவம் இல்லையோ எந்த மதங்களில் இறைவனுக்கு இணை வைப்பு இருக்கிறதோ எந்த மதங்களில் இறைவனுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையே இடைத்தரகர்களாக புரோகிதர்கள் இருக்கிறார்களோ அம்மதங்கள் அதன் வேதங்களை எல்லாம் சாத்தானிய சக்திகள் ஊடுருவி திரித்துவிட்டன. அம்மதங்களின் உண்மையான கொள்கைகள் மறக்கடிக்கப்பட்டு போலியான சாத்தானிய கருத்துக்கள் திணிக்கப்பட்டு அதை பின்பற்றும் மக்களை சிந்தனையற்ற சோம்பிகளாக மாற்றி விடுகின்றன. இவர்களை கொண்டுதான் தர்மத்திற்கு எதிரான அத்தனை அநீதிகளையும் நடத்துகிறார்கள். இவர்கள்
உருவங்கள், சிலைகள் நெருப்பு ,சூரியன்,பாம்பு போன்ற சாத்தானிய அடையாளங்களை வழிபடு்வார்கள்,
சைத்தானின் சூழ்ச்சி
மனிதன் விழிப்படைய முடியாமல் சைத்தான் பல வழிகளில் தடுத்துக்கொண்டிருப்பான்.எப்படி?
உலக வாழ்க்கைய பிசியாக்கி போதையாக்கி வைக்க என்ன வெல்லாம் முடியுமொ அதெல்லாம் செய்வான்.வாழ்கையின் அர்த்தம் பணத்தைக் கொண்டுதான் என நம்பவைத்து போலியான பணத்தை சம்பாதிக்க ஆயுள் பூராவும் மனிதனை யாருக்கோ வேலை செய்து கொண்டிருக்கும்
படி பிசியாக வைத்திருப்பது. அதனால் வாழ்வின் அர்த்தங்களை அவன் அடைய முடியாமல் தடுப்பது, அவன் அப்படி சம்பாதிக்கும் பணத்தை திரும்ப அவனிடமிருந்து அவனே அறியாமல் பல வழிகளில் எடுத்துக்கொள்வது, கல்வி, மருத்துவம், உணவு, அரசாங்கம் பொழுது போக்கு, யுத்தம் இது எல்லாம் நம் பணத்தை பிடுங்கி நம்மை எப்போது வேலை செய்து கொண்டே யிருக்கும் எந்திரமாய் மாற்றும் சாத்தானின் தந்திரம், மது ,போதை,விபசாரம்,சினிமா, பாட்டு, நடனம் என மக்களை மதியிழக்க செய்வது. தரமற்ற கல்வி முறை மூலம் மனிதர்களை கார்பரேட் அடிமைகளாக்குவது மருத்துவம் என்ற பெயரில் மக்களை என்றும் அவர்கள் தயவில் வாழும் நிரந்தர நோயாளியாக்குவது.இயற்கை உணவை இயற்கை வளங்களை மாசுபடுத்தி செயற்கையான பொருட்களால் மனிதர்கள் பொருளாதாரத்தை சுரண்டி அடிமைப் படுத்துவது. என பட்டியல் நீளும். இந்த நச்சு சுழற்சியில் பலியானவர்கள் நிரத்தர அடிமைகளாக சாத்தானுக்கு சேவை செய்பவர்களாகி விடுகின்றனர் .உலகத்தின் எல்லா|”சரி”களின் போர்வையில் நடக்கும் பெரும் தவறுகளும் குற்றங்களும் விழித்துக்கொன்டவர் கண்களுக்கே தெரியும், தூங்குபவர்களுக்கு எல்லாம் இயல்பாய் இருப்பது போல் தெரியும்.
இனி இதன் கொடிய கரங்களின் பிடியிலிருந்து நாமும் நம் தலைமுறைகளும் தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என அடுத்த பதிவில் பார்ப்போம்.
(தொடரும்)
அநீதிகளின் ஆணிவேர்: மற்ற பகுதிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
கருத்துகள்