எதைப் பத்தி கொஞ்ச நேரம் யோசித்தாலும் விளங்கிப்போகும் ஆனா காலத்தை பத்தி யோசிக்கும் போது மட்டும் நான் காணாமல் போய் விடுகிறேன். பூமி இன்னும் தட்டையாத்தான் இருக்குன்னு அன்றாட அறிவில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அப்படியே இருங்கள்.மேலே வாசிக்காதீங்க.
மெய்ப் பொருள் காண விரும்புறவங்க மேலே படிங்க
நாம இடம் காலத்தால் ஆன முப்பரிமாண உலகத்தில வாழுறோம். அதாவது நமக்கு இடமும் வலமும் முன்னும் பின்னும் இடம் என்பது இருக்கிறது. அந்த இடத்தில நாம ஒரு பொருளா இருக்கிறோம். அது போல நேற்று, இன்று, நாளை போன வருஷம் அடுத்த நூற்றாண்டு எல்லாமுமான காலத்திலும் வாழ்கிறோம்.
என் கேள்வி என்னன்னா நாம இடமும் காலமுமா இருக்கிற பிரபஞ்சத்தில வாழ்கிறோமா? இல்ல நம்ம மூளைக்குள்ளே தான் இந்த இடமும் காலமும் உருவாகிறதா? ---அப்படி பாக்காதீங்க பொறுமையா யோசிச்சு பாருங்க
காலம்னு நாம் எதை சொல்றோம். கடிகாரம் காலண்டர் இதெல்லாம் காலமில்லை. இவைகள் காலத்தை அளவிட நாம் பயன்படுத்துற கருவிங்க தான் மணி பார்க்கத் தெரியாத ..சின்ன வயசுல எனக்கு சூரியன் உதிச்சு மேக்கால மறையிறது தான் காலம். .
அப்ப இந்த சூரியனும் பூமியும் சுத்துறது தான் காலமா? .பூமியோ சூரியனோ அது பாட்டுக்கு நகர்ந்து விட்டு போகட்டும் அதனால காலம் எப்படி தோன்றுகிறது? பூமி நின்னா காலம் நிக்குமா? ஒரு கடிகாரத்தின் ஊசல் முன்னும் பின்னும் நகர்வது, சூரியன், பூமி சுற்றுவது எல்லாம் வெறும் இயக்கங்கள். இவை காலத்தை அளக்கிறதுக்கு தான் உதவும் அல்லாது காலம் ஆவதில்லை
பொருட்கள் உண்மையில் நகர்வது என்பது ஒரு இடத்தில் தோன்றி பின் மறைந்து வேறு இடத்தில் தோன்றுவது என்பதாகும். பொருட்களை நுணுக்கி நுணுக்கி பார்த்தால் கடைசியில் எலெக்ட்ரான் புரோட்டான் போன்ற அணுத் துகளையும் கடந்து பொருள் அலை என்ற இரு நிலைக்கு போய்விடும். அதாவது ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையும் இழந்து விடுகிறது மீண்டும் அது பொருளாகும் போது இடம் , பொருளை பற்றிய அறிவிற்கு ஏற்ப தன் மையத்தையும் எல்லையயும் நிர்ணயித்துக்கொள்கிறது. பொருளும் அலையும் பரஸ்பரம் நிலை மாறுவது தான் இயக்கம். அந்நிலையில் அதன் இயக்கம் உண்டு இல்லை அல்லது பொருள் அலை அல்லது தோன்றி மறைதல் என்பதாகத்தான் இருக்கும் அதாவது ஒரு எலெக்ட்ரானின் இயக்கம் ஒரு பழத்தை சுற்றும் ஈ போல இருக்காது ஒரு சீரியல் செட்டில் வரிசையாக தனித்தனி பல்புகள் அணைந்து எரியும் போது வெளிச்சப்புள்ளி ஓடுகிறது அல்லவா இது போல தான் அதன் நகர்வு இருக்கிறது எனவே இத்தைகைய அணுக்களால் ஆன அத்தனை பொருட்களின் இயக்கமும் அடிப்படையில் இந்த தோன்றி மறைதல் பைனரி தான்.
ஒரு பிலிம் ரீலை பார்த்தால் ஒரு திரைப்படம் எப்படி இயங்குகிறது எனப் புரியும் நம் மொத்த உலகமும் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் அந்த இயக்கங்களை எப்போது நாம் காலமாக உணர்கிறோம்? பொருட்கள் இப்படி இடம் மாறி தோன்றுவதை உற்று நோக்கி நம் மூளையில் பதிய வைக்கிறோமே.அந்த பதிவுகளை நமது மூளை தான் தொடர்பு படுத்தி பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதாக உணர்கிறது. உதாரணத்திற்கு..நம் நினைவுகள் என்பது ஒரு கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்கில் ஒரு இடத்தில் பதிவு செய்து வைக்கப்பட்ட ஒரு மூவி ஃபைல் எனக் கொள்வோம் இதை ஒரு மீடியா பிளேயர் என்ற மென்பொருள் மூலம் இயக்கும் போது தான் அது இரண்டு மணி நேரம் திரைப்படமாக ஓடுகிறது. இது போல மூளையில் உள்ள ஒரு புரோகிராம் தான் நினவுகளை அது காலத்தில் நிகழ்வதாக காட்டுகிறது. காலம் என்பது வெறும் கருதலே. காலம் என்பதை உருவாக்குவது மூளையும் அதன் பயாலஜியும் தான்.
அப்படீன்னா காலம் என்பது தனியாக இல்லையா? ஆனா நான் சிறுவனாயிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என் ஞாபகத்தில் இருக்கிறதே காலம் இருப்பதை தானே இது காட்டுகிறது. கொஞ்சம் நிதாதானமாக யோசித்தால் ஒன்று புரியும்,
இக்கணத்தில் இருப்பது மட்டும் நீங்கள். உங்கள் ஞாபகத்திலிருக்கும் சிறுவன் நீங்கள் அல்ல.அந்த நிகழ்வுகளும் உங்களுக்கு உரியது அல்ல.உங்கள் மூளையில் ஏதோ ஒர் இடத்தில் ஞாபகமாக பதிந்திருக்கும் விஷயங்களை உங்கள் மூளை காலம் என்ற உணர்வில் தொடர்ச்சியாக காட்டுகிறது.அந்த சிறுவன் தான் வளர்ந்து இப்பொது இருக்கும் நீங்கள் என்று நம்பச்சொல்கிறது,
ஒரு திரைப்படக்காட்சியில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அடுத்து 15 வருடங்களுக்கு பிறகு என்று ஸ்லைடு போட்டு விட்டு அடுத்த வினாடி ஒரு காதல் ஜோடியை காட்டினால் அந்த சிறுவன் சிறுமி வளர்ந்து பெரியவர்களானதாக நினைத்துக்கொள்வோம். இதே போல் தான் நிழ வாழ்க்கையிலும் அந்த ஸ்லைடுக்கு பதில் 15 வருட காலத்தை உணர்த்தும் வேறு சம்பவங்களின் பதிவு இருந்தால் தான் மனம் அந்த சிறுவன் தான் வாலிபனாக இருக்கிறான் என் ஏற்றுக்கொள்ளும்.
30 வருடம் கோமாவில் கிடந்து எழுந்தவருக்கு பக்கத்தில் இருப்பது மாமியார் அல்ல மனைவிதான் என்று புரியவைக்க சற்று சிரப்படவேண்டியிருக்கும்.
நாம் காலத்தில் வாழ்வதில்லை.இந்தக் கணத்தில் வாழ்வது தான் நாம்.. பொருள் அலையின் ஒவ்வொரு நிலை மாற்றத்தின் போதும் மூளையின் நியூரான்கள் ஃபயர் ஆகி அந்த கணத்தின் நம்மை ஞாபகத்தில்பதிவு செய்கிறது கணம் தோறும் இந்தப் பதிவுகள் மூளையில் ஓர் இடமாக இருக்கிறது, கஜினி சூர்யா மாதிரி நிகழ்கால காட்சிகளை மூளையில் எழுதி வைத்து கொள்வதால் தான் நமது இருப்பை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.
இது போல் பல விஷயங்கள் அதன் உண்மை ஒன்றாகவும் நாம் உணர்வது ஒன்றாகவும் இருக்கிறது. இங்கே ஞாபகங்கள் என்பது மூளையில் நியூரான் இணைப்புகளாக உருவாகி மூளையின் ஒரு பாகமாக இருக்கிறது இதை காலமாக நம்மை உணரச்செய்வது மனம், இந்த மனம் கூட மூளையின் நீயுரான் இணைப்புகளின் ஒரு விளைவு தான். பிறகு நமது தன்னுணர்வு. இவையல்லாது காலம் என்று ஒன்று எங்கே இருக்கிறது. ஞாபகங்கள் வேறு காலம் என்பது வேறு.இதை நாம் பிரித்து அறிய முடியாததற்கு காரணம் நம் மனதால் நாம் கணம்தோறும் உருவாக்கும் முப்பரிமாண உலகில் நம்மையும் ஒரு பொருளாக கருதி மயங்கிக் கிடப்பதால் தான்
காலம் என்பது அனைவருக்கும் ஒன்றுபோல இல்லை காலம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கருதல்களுக்கு தக்கபடி அனுபவப்படுகிறது. காலத்தைப் பற்றிய அறிவு அதை நாம் கவனிப்பதை பொறுத்தே அமைகிறது. நகர வாசிக்கு வேகமாய் நகரும் காலம் ஒரு கிராமத்தில் மெதுவாக நகர்கிறது. இன்றைக்கு உள்ள அவசரம் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களிடம் இல்லை அதாவது முக்கியமான சம்பவங்களின் பதிவுகள் மூளையில் அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது அதனால் அதிக காலம் அனுபவப் படுகிறது குறைவான அல்லது முக்கியமில்லாத சம்பவங்களை பற்றிய காலமும் குறைவாகவே கருதப்படுகிறது. காதலிக்காக காத்திருக்கும் போது ஐந்து நிமிடம் என்பது ஐந்து நாள் போல தோன்றும். அதே போல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு எவ்வளவு காலமாச்சு என்று ஒரு பையனின் கால அளவீடும் ஒரு முதியவரின் கால அனுபமும் வேறு வேறாக இருக்கும். பத்து வருடமே பள்ளியில் படித்தாலும் ஏதோ ரொம்ப காலமாகவே ஸ்கூலுக்கு போன அனுபவம், ஆனா பின்னாளில் முப்பது வருஷம் ஒரே ஆபீசில் குப்பை கொட்டிகிட்டிருந்தாலும் அது அவ்வளவு கால உணர்வு தராது..காலத்தை நாம் இவ்வாறு உணர்ந்து கொள்ளக் காரணம் நமது மனம் தான்
. கடிகாரமும் காலண்டரும் இல்லாவிட்டாலும் கூட காலம் என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் அப்படி காலமாக கருதுவது இடத்தையே தாம்
இரவில் கொஞ்சம் வெளியே போய் வானத்தை உற்று நோக்குங்கள். எல்லையில்லாமல் எல்ல இடத்திலும் வின்மீன்கள் வாரி இறைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள். கண்ணுக்கு முன்னே இடமும் தெரிகிறது அங்கே பொருளாக நட்சத்திரங்களும் மின்னிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை என்ன இப்போது நாம் இருப்பதாக காணும் அனேக நட்சத்திரங்கள் பல்லாயிரம் ஒளி வருஷ தூரத்தில் இருக்கிறது அதாவது ஒரு நட்சத்திரம் இப்போது இருப்பதாக காணும் காட்சி பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தயது. வானில் இப்போது நாம் பார்க்கும் இடமும் காட்சியும் தொன்னூறு சதவீதம் இப்போது அங்கே இருக்காது. நாம் அவற்றின் பழைய காலங்களை தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இடம் இங்கே காலத்தில் புதைந்து கிடக்கிறது இதையே கொஞ்சம் மாத்தி சொன்னா சூரியன் அல்லாத ஒரு நட்சத்திரத்தில் இருந்து ஒரு பவர்புல் டெலஸ் கோப் மூலம் நமது பூமியை இப்போது உற்றுப்பார்த்தால் புர்ஜ் அல் அராபும் ,திருவள்ளுவர் சிலையும் தெரியாது ஆனால் பக்றுளி ஆறும் மறைந்த லெமூரியா கண்டத்தில் மக்கள் வாழ்வதும் தெரியலாம் .பார்க்கும் தூரத்திற்கு தக்கபடி பல வரலாற்று நிகழ்வுகளையும் லைவ் வாக காணலாம் எகிப்தில் பிரமிடுகள் கட்டிக் கொண்டிருப்பதை நேரில் பார்க்கலாம். காலத்துக்கும் இடத்துக்கும் அப்படி ஒரு கனெக்சன் இருக்கிறது.
ஒரு கற்பனை விமான பயணத்தில் என் அருகிலிருந்த நண்பர் கேட்டார். என்ன இது நாம் கடந்த ஒரு மணி நேரமாக பக்கத்தில் இருந்து பயணம் செய்கிறோம் இது உண்மை தானே இந்த காலம் வெறும் கற்பனை தான் அப்படி ஒன்று இல்லை என்றா சொல்கிறீர்கள்.?
. காலம் என்பது கற்பனை அல்ல நாம் கருதுவது அவ்வளவே ..நாம் அறிவால் அறிந்துணரும் இடம் பொருள் காலம் ,தூரம் இயக்கம் எல்லாம் அவ்வாறு கருதுவது தான். ஒரு கணினியில் வெறும் on/off லாஜிக்கில் எப்படி பலவகையான சாப்ட்வேர்கள் உருவாக்குகிறோமோ அது போல தான்.
உண்மை என்பதும் அப்படி கருதுவது தான். இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீகள்? அமைதியான என் அருகில் உட்கார்ந்து காபி குடித்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.இது நமது உண்மை. ஆனால் இந்த விமானத்தையும் சேர்த்த நமது உண்மை என்னவென்றால் 30,000 அடி உயர்த்திற்கு மேலே விண்ணில் படு பயங்கர வேகத்தில் நேராக ஓடிக் கொண்டிருக்கிறோம் சரிதானே இன்னும் இந்த பூமியோடு சேர்ந்த நமது உண்மை என்ன? அதை விட வேகத்தில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறோம் அதுவும் உண்மை தானே அதை கொஞ்சமும் அறியா வண்ணம் சிறிது கூட சிந்திக்கொள்ளாமல் காபி குடிக்கிறோம் சாய்ந்து தூங்குகிறோம் காலமும் அப்படித்தான் நம் அறிவுக்கு மட்டும் தான் உண்மை அதற்கு வெளியே ????
விமான நிலையத்தில் வைத்து என் சிறிய மகன் கேட்டான் அது சரி அப்பா இவ்வளவு பெரிய விமானம் மேலே செல்லும் போது எப்படி சிறிதாகி ஏன் மெதுவாக செல்கிறது? -

கருத்துகள்
The Great Pyramid was built cerca 2560 BC, while Cleopatra lived around 30 BC. The first Pizza Hut opened in 1958, which is about 500 years closer.