25 December 2009

பதிவுத் திருட்டு பரவி வரும் அநாகரீகம்


கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இந்த வலைப்பதிவை துவங்கி ஒரு வருடத்தில் இது வரை 95 பதிவுகளும் இட்டு விட்டேன். தமிழிஷில் 45 பதிவுகள் பிரமலமானது . பல பதிவுகள் யூத்ஃபுல் விகடனில் தேர்வு பெற்றது. உங்கள் ஒரு வரி பின்னூட்டம் தரும் உற்சாகம் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைப்பது. எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.

நேற்று இணையவலம் வந்த போது எனது பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஈகரை தமிழ் கழஞ்சியம் என்ற தளத்தில் இட்டிருப்பதை கண்டு அதிர்சியுற்றேன். பிறனில் விழையாமை சொன்ன வள்ளுவரை வேறு அங்கே அநியாயத்துக்கு சாட்சியாக்கி வைத்திருக்கிறார்கள். என் பதிவிலிருந்த படம் கூட ஹாட் லிங் செய்திருக்கிறார்கள். ஆனால் என்பெயரையோ இணைய முகவரியோ இல்லாமல் கவனமாக அழித்து விட்டு வேறு பெயரில் இட்டு கொண்டாடியிருக்கிறார்கள்.
" இப்படி எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க? "என்ற அதிர்ச்சியுடன் கூகிள் சல்லடையால் தமிழ் பதிவுலகை சலித்தபோது ஏகப்பட்ட புழுக்களும் வண்டுகளும் கண்டு ஆச்சரியம். ஒன்றிரண்டல்ல நூற்றுக்கு மேல் என் பதிவுகளின் காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட பதிவுகள் இணையத்தில் உலவுகிறது. என் தளத்தில் கூட அத்தனை பதிவுகள் இல்லை. எனது பிரபலமான பதிவுகள் எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டாய் மேற்கண்ட தளத்திலேயே நகலெடுத்து தொங்க விட்டுள்ளார்கள்.

என் பதிவுகளை பாக்கட்டிலா வைத்திருக்கிறேன்.பிக் பாக்கட் அடிக்க? எல்லோரும் பார்க்க இணையவீதியில் தானே விட்டிருகிறேன்? நான் மாய்ந்து மாய்ந்து எழுதுவதை நானே படித்து முடிக்குமுன் காபி பேஸ்ட் செய்து அவர்கள் தளங்களில் அவர்கள் பெயரில் போட்டுவிடுகிறர்கள். தங்களுடைய புகைப்படத்தையும் இட்டு பின்னூட்டங்களில் வரும் உண்மையான பாராட்டுகளை தனக்கு கிடைத்ததாக கருதி மகிழும் திரு பதிவர்களை என்ன சொல்வது? இவர்கள் நோக்கம் தான் என்ன? இதனால் அவர்கள் உலகப்புகழ் , கோடிபணம் சம்பாதிக்க போகிறார்களா? அடுத்தவன் செருப்பைத் திருடிக் காலில் போட்டுக்கொண்டு நடப்பவனுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம். திருடர்களுக்காவது ஆதாயம் இருக்கும். இப்படி காப்பி பேஸ்ட் செய்வதை விடுத்து என் பதிவுகளுக்கு இணைப்பு கொடுக்கலாமே ஏன் என் பதிவின் சாரத்தையோ கொடுத்து இணைப்பு கொடுத்தால் கூட என் எழுத்துக்கு கிடைத்த மரியாதை என நன்றியோடு இருப்பேன். பிறரது உண்மையான படைப்புகளுக்கு மதிப்பு கொடுக்கதெரியாத இவர்கள் தங்கள் போலிப்பதிவு புகழ் தருமென நம்புவதேன்.

எனக்கு இதில் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை என் பதிவுகள் வெளியானதும் கூகிழும் தமிழிஷும் என் பக்கத்திலே எப்போதும் உட்கார்ந்திருக்கும் நண்பர்களும் பத்திரப்படுத்திக் கொள்ளுவார்கள். ஒருவகையில் என் பதிவுகள் பிடித்துப் போனதனாலே தானே பாசக்காரங்க அவர்கள் தளத்தில் என் பதிவை பத்திரப்படுத்துகிறார்கள் என்று அவர்கள் மேல் கோபத்திற்கு பதில் அனுதாபமும் வருகிறது. ஆனாலும் அந்த செயலை அங்கீகரிக்க முடியவில்லை.இந்த கேவலத்துக்கு பதில் நன்றி என்ற ஓர் வார்த்தையுடன் ஒரு இணைப்பு கொடுத்தால் கவுரமான பதிவராக இருக்கலாமே.

நன்றி என்பது நாம் கேட்டுப் பெறுவதல்ல. நன்றி காட்ட விரும்பாதவர்களுடைய நன்றி யாருக்கு வேண்டும். என் பதிவை தனதாக காட்டிக்கொண்டால் தனக்கு மதிப்பு கிட்டும் என கருதுபவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். அதுவும் என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரம் தான். ஆனால் அவர்கள் செயல் சுயமரியாதை கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு எல்லாம் பேசிவரும் தமிழர்கள் கலாச்சாரமாகி விடக்கூடாது என்ற கவலை தான்.

இந்தப் பதிவையும் அவர்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் பார்த்துவிட்டு தவறை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கிறேன். என் தளத்துக்கு முறையாக இணைப்பு கொடுத்தால் போதும். தவறுதலாக செய்த மனசாட்சியுடைய பதிவர்கள் திருத்திக்கொள்வார்கள்.

என் பதிவை திருடி விட்டார்கள் என்று புலம்புவதற்காக இதை எழுதவில்லை. என்னை விட அருமையாக எழுதும் ஒவ்வொரு பதிவரும் தங்கள் கடின உழைப்பு இப்படிப்பட்ட திருவாளர்களால் திருடப்படுகிறதா என தங்கள் சிறந்த பதிவுகளை கூகிளிலும் http://www.copyscape.com/ தளத்திலும் போட்டு அலசிப்பாருங்கள். இணையத்தில் உலவும் பல களைகள் அதை தன் பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டிருப்பதை காண்பீர்கள்.

இப்படிப்பட்ட களைகளை,கொசுக்களை என்ன செய்யலாம் என தங்கள் அரிய நேரத்தையும் சிந்தனையும் செலவு செய்து பதிவெழுதும் என் நண்பர்களின் கருத்தை கேட்க விரும்புகிறேன். அவர்கள் அனுபவத்தையும் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் இது என் பிரச்சனை மட்டுமல்ல நம் எல்லோரது பிரச்சினை. மறக்காமல் உங்கள் கருத்தை பின்னூட்டமிடுங்கள்.

Download As PDF

14 comments:

ரமேஷ் said...

copy பண்ண முடியாத மாதிறி சில codeஇருக்கிறது.அதை உங்கள் தலத்தில் இடுங்கள்

jothi said...

கோடி கோடியாய் கொட்டி உருவாக்கப்படும் விண்டோஸ் OS வெளிவந்த ரெண்டு மணி நேரத்தில் திருட்டு CDக்கள் வந்துவிடுகின்றன. யாரால் என்ன பண்ணமுடிகிறது?

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. வகுப்பில் பிட் அடிப்பவன் ஒரு பரிட்சையில் தேறலாம். எல்லா பரிட்சையிலும் தேற முடியாது.

மனம் தளரமால் தொடர்ந்து எழுதுங்கள்.காப்பி எவ்வள்வு வேண்டாலும் இருக்கலாம். ஒரிஜினல் ஒன்று மட்டுமே.

நட்புடன் ஜமால் said...

நிறைய நடக்குது நண்பரே இப்படி.

அப்படி என்னதான் நிறைவோ திருடரதுல

சாதிக் அலி said...

நன்றி ரமேஷ்,copy பண்ண முடியாத java code இருப்பது தெரியும்.முதலில் இணையத்தில் நம் பதிவுகள் இடுவதே நம் கருத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு பயன் பெறத்தான் .அது நல்லதாக இருந்தால் அவர்களும் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தவறென்ன.அதற்கு ஒரு தடை செய்வது நல்ல நோக்கத்தில் பகிர்ந்து கொள்ள நினைப்பவருக்கும் தங்கள் கனினியில் சேமித்து கொள்ள நினைப்பவர்களுக்கும் எரிச்சலூட்டுவது தேவையா? மேலும் அது சாதாரண வாசகர்களையே தடுக்கும். அத்தைகைய code களை Disable செய்வதும் எளிது.இணையம் என்பதை அறிவை பகிர்ந்து கொள்ளத்தான் அதை அதன் பயனைபெறுவதில் தடை தேவையற்றது என்பது என் கருத்து.ஆனால் பிறரது பதிவை தனது பதிவாக வெளியிட்டு அற்ப சந்தோசம் பெறுபவர்கள் செயலை நியாயப்படுத்த முடியவில்லை.இந்த கொசுக்களுக்காக கவச உடையிலே திரிய வேண்டுமா?

The Rebel said...

If you earn from your blog send a dmca notice.
This link could be helpful

http://www.google.com/blogger_dmca.html

வளாகம் said...

யாரோ பெத்ததை தன்ட என்டு சொல்லுங்கள் போல...

யாநிலாவின் தந்தை said...

என்னுடைய கவிதைகளை எடுத்து வேறு தளத்தில் தன்னுடையது என்று சொல்லி அதற்காக பாராட்டும் பெட்ருகொந்டிருப்பதை பார்த்து நானும் உங்களை போன்றே அதிர்ந்தேன்.........என்ன செய்ய.....

சாதிக் அலி said...

உங்கள் கருத்துக்கு நன்றி ஜோதி.உண்மைதான். சாஃட்வேர் திருடுபவர்கள் அதன் பயனைத்தான் திருடுகிறார்கள்.பெயரை திருடுவதில்லையே.ஒரு திரைப்படத்தை திருட்டு டீவிடி யில் படம் வெளியாகும் முன்பே வெளியிடுவது ஒரு வகை திருட்டு.ஒரு படத்தின் கதையை ரீ மேக் செய்வது் இன்னொரு. ஆனால் ஏற்கனவே வெளியான ஒரு படத்தை டைரகடர் பெயர் மட்டும் மாற்றி மீண்டும் வேறொருவர் வெளியிடுவதை திருட்டு என சொல்வதா அறிவீனம் என சொல்வதா?

சாதிக் அலி said...

நன்றி ஜமால் உங்கள் கருத்துக்கு.உங்களை போன்ற நல்ல நண்பர்களை பதிவுலகம் தானே தருகிறது.எப்போதும் நல்லதை நினைப்போம்.தவறு செய்தவர்களை குற்றவாளிகளாக்க தேவையில்லை. தவறை சுட்டிக்காட்டுவோம். திருத்திகொள்ள விரும்பினால் திருந்தட்டும். தமிழால் இணைந்த எல்லோரும் நம் நண்பர்கள் தான் சரி தானே?

Jaleela said...

நிறைய நடக்குது நண்பரே இப்படி.

அப்படி என்னதான் நிறைவோ திருடரதுல

சரியா சொன்னிங்க சகோ. ஜமால்..யாரோ பெத்ததை தன்ட என்டு சொல்லுங்கள் போல... அதானே


சாதிக் அலி உங்கள் வருத்தம் புரியுது. காப்பியில் என்ன திருப்தியோ தெரியல.

நான் முன்பு ரொம்பவே ஆதங்க பட்டு இருக்கேன். நான் நெட்டில் கொடுத்த என் குறிப்பு க‌ளை நிறைய‌ பேர் காப்பி பேஸ்ட்.


இதே போல் தான் ஒரு நாள் உட்கார்ந்து உலாவும் போது தெரிய வந்தது, சம்பந்த பட்டவர்களுக்கெல்லாம் மெயிலில் திட்டினேன், சில பேரை திட்டவும் முடியல .....

சங்கர் said...

உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

இருமேனிமுபாரக் said...

அன்பர் ஸாதிக்! பதிவுத் திருட்டைப் பற்றிய தங்களின் பதிவு கண்டேன். ஜன22-09 அன்று தாங்கள் இட்ட பதிவை (குடல் புண்-அல்ஸர்) சற்றும் மாற்றமின்றி Dr.அம்புஜவல்லி, தஞ்சாவூர்

'அல்சர்' - சில உண்மைகள் என்ற தலைப்பில் http://attur.in/health/ulser.html எனும் வலைப்பதிவில் படித்தேன். இரண்டு பதிவுகளும் ஒரே மருத்துவரின் கட்டுரைதான். இதில் யார் யாரைப் பார்த்து காப்பி அடித்தார்கள் எங்கிருந்து அடித்தார்கள் எனும் விபரத்தையும் தாங்கள் வலை உலகத்திற்கு தெரிவிப்பது நலம். தங்களின் இந்த பதிவிற்கு கூடுதல் பலத்தைத் தரும் என்று நம்புகின்றேன்.

Sathik Ali said...

நன்றி இருமேனி முபாரக். குடல் புண் பற்றிய அந்த கட்டுரைக்கான கிரெடிட் Dr அம்புஜவல்லி, தஞ்சாவூர்-க்கு சொந்தமானது. இ-மெயிலில் படித்தது. பலரும் பயன்பெற கட்டுரை ஆசிரியர் பெயரிலேயே பதிவிட்டுள்ளேன்.
நீங்கள் குறிப்பிட்ட தளத்திலும் அதே கட்டுரை கண்டேன்.பதிவிடப்பட்ட தேதி அதில் அறிய முடியவில்லை, தகவல் ஒன்று ஆனாலும் கட்டுரை அமைப்பில் வித்தியாசம் உள்ளதால் என் தளத்தில் இருந்து எடுத்தார்களா? என்பதும் தெரியவில்லை.ஆனாலும் கட்டுரை ஆசிரியரின் பெயரை மாற்றாமல் மறக்காமல் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளதால் தவறில்லை என நினைக்கிறேன்.

DR Abdul Muniem said...


“We are urgently in need of A , B , O blood group (kidnney) 0RGANS, Contact For more
details.
Whats-App: 917204167030
No : 917204167030
Help Line: 917204167030”