பன்றிக் காய்ச்சல்(Swine flue) தெரிந்துகொள்ளுங்கள்

பத்திரிக்கைகளை திறந்தாலே "பன்றிக் காய்ச்சல்" என்று நல்லாவே பீதிய கிளப்புறாங்கய்யா. மனுசன் மனுசனையே கூட்டங் கூட்டமா கொன்னு குவிச்சாலும் அதெல்லாம் சகஜமப்பா என்று கண்டுக்காமல் விட்டு விடுகிறார்கள். Swine Influenza எனப்படும் பன்றிக் காய்ச்சல் பற்றிய பீதியை விட விழிப்புணர்வு தான் இன்றைக்கு தேவை. ஆனால் பெரும்பாலான பத்தி்ரிக்கைகள் மக்ளை கலவரப்டுத்தியே காசு பார்க்கிறார்ள். எனவே எனக்கு தெரிஞ்சதை உங்களோடு பகிர்ந்துக்கிறேன். தலைப்ப பார்த்துட்டு ஓடாதீங்க. பிளாக் மூலமா ஒன்ணும் பரவாது. தைரியமா படிங்க.

பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன?
Type A influenza viruses(H1N1 subtype) என்ற வைரசுகளால் பன்றிகளுக்கிடையே அவ்வப்போது ஏற்படும் ஜலதோசம் தான். அப்புறம் பன்றியோடு அதிகம் தொடர்பு வச்சுக்கிட்ட மனுசங்களுக்கும், அந்த மனுசங்களோட தொடர்பு வச்சுக் கிட்டவங்களுக்கும் சில வேளைகளில் பரவும்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன?
சாதாரண ஜலதோசக் காய்ச்சல் போலத்தான் அறிகுறிகள் இருக்கும்.( அ..ஆச் ப்ர்ர்ர்ர்ர் ..க்கும் ..)
ஆனால் சாதா ஜலதோசம் , காய்ச்சல் எல்லாம் பன்றிக்காய்ச்சலும் அல்ல.
  • காய்ச்சல் 100°F அல்லது 37.8°C க்கும் அதிகமாக இருக்கும்.
  • தொண்டை வலி ,உடல் வலி ,தலை வலி,குளிர்,அசதி இருக்கும்.
  • இருமல், மூக்கு ஒழுகுதல் இருக்கும்
  • சிலருக்கு வயிற்றோட்டம் .வாந்தி கூட இருக்கலாம்.
சில குறிப்பிட்ட சோதனைகள் மூலம் இது சாதார காய்ச்சலா அல்லது பன்றிக் காய்ச்சலா என அறிய முடியும்.

ஆபத்தான அறிகுறிகள்:
குழந்தைகள் மேற்கண்ட அறிகுறிகளுடன் வேகமா சுவாசித்தாலோ, மூச்சு விட கஸ்டப்பட்டாலோ,தோல் நிறம் நீலமாக மாறினாலோ,போதுமான தண்ணீர் அருந்த முடியாவிட்டாலோ,கண்ணு முழிக்க முடியாமல் சோர்ந்து போய்
கிடந்தாலோ,உடலில் சின்ன சின்ன கொப்புளங்கள் வெளிப்பட்டாலோ உடனே மருத்துவ உதவி நாடவும்.
பெரியவர்களுக்கு சுவாசிக்க கஸ்டமாக இருந்தாலோ , நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வலி அல்லது அழுத்தம், திடீரென உடல் தளர்ந்து விடுதல், மனக்குழப்பம், இடைவிடாத வாந்தி காணப்பட்டால் உடனே மருத்துவ உதவி நாடவும்.

எப்படி பரவுகிறது?
ஜலதோசம் எப்படி பரவுகிறதோ அது போலத்தான் இருமல், மற்றும் சளி மூலம் தான் இந்த கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது.ஒருவருக்கு இதன் அறிகுறிகள் வெளிப்பட ஒரு நாள் முன்னதாகவோ காய்ச்சல் வந்து ஏழு நாட்கள் வரை பிறருக்கு தொற்றக்கூடும்.

எப்படிங்க தடுக்கிறது?
  • மூக்கு ஒழுகுபவர்களை கண்டால் ரூட்டை மாற்றி எஸ்கேப் ஆகி விடுவது முன் ஜாக்கிரதை.
  • சும்மா சும்மா ஹாய் என்று கர்சீஃப் வைத்திருப்பவர்களிடம் கை கொடுக்காதீர்கள்.அப்படி கொடுத்தாலும் அந்தக் கையைக் கொண்டு கண்,மூககு,வாயைத் தொடாதீர்கள்.
  • கைகளை நன்றாக அடிக்கடி சோப் போட்டு கழுவுவது நல்லது.
  • நல்லா தூங்கி போதுமான ரெஸ்ட் எடுத்து நல்ல ஆரோக்கியத்தை பேணுங்க.
  • சுறுசுறுப்பா இருங்க.
  • டென்ஸன் , மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
  • சத்தான உணவு உணணுங்கள்.
  • அசுத்தமான இடங்களில் கை வைக்காதீர்கள்.
  • பன்றிப் பண்ணைகளுக்கு தேவையில்லாமல் போகாதீர்கள்.
  • நன்றாக வேகாத பன்றி இறைச்சி உண்பதால் பரவக்கூடும். பன்றி உணவை தவிர்த்தல் நலம். (ஆச்சரியம்! இஸ்லாம் பன்றிகளை தவிர்க்க அன்றே அறிவுறுத்தியிருக்கிறது)
தடுப்பு மருந்து இருக்கிறதா?
இந்த வகை வைரசுகள் தங்கள் அடையாளத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு புதிய வகை வைரசுகளாக மாறுவதால் குறிப்பிட்ட வைரசுக்கான தடுப்பு மருந்து உருவாக்குவதில் சிரமமிருக்கிறது. முயற்சி வெற்றி பெறும்

என்ன மருந்துகள் உள்ளன?
ஃப்ளு காய்ச்சலுக்கான பொதுவான ஆன்டி வைரல் மருந்துகள்.சில நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. அவற்றில் இரு வகைகள் உள்ளன 1) adamantanes 2) inhibitors of influenza neuraminidase(oseltamivir and zanamivir)
பன்றிக் காய்ச்சலுக்கு சிகிட்சையும் மருந்தும் தாராளமாக இருக்கிறது. பன்றிக்காய்ச்சல் வந்தால் யாவரும் கண்டிப்பாக இறந்து விடுவதாகப் பயப்பட வேண்டாம். சமயத்தில் சிகிட்சையின்றி மோசமாக பாதிக்கப்பட்டாலே மரணத்தை நோக்கி தள்ளப்படுவார்கள்.

இந்த பதிவால் எதாவது பிரயோசனம் உண்டு என்றால் முகத்திலிருந்து மாஸ்க் எடுத்து விட்டு எதாவது சொல்லிட்டுப் போங்க

Related Articles:
கிருமிகள்- கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல
மருத்துவரை காணும் முன்.....
பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

Links For More Info:
http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic

Global Alert and Response (GAR)

பன்றி காய்ச்சல் நோய் குறித்துத் தகவல் மற்றும் உதவிக்கு:-044 - 2432 1569 ( சென்னை )

கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
சமையத்துக்கேத்த பதிவு

நன்றி சாதிக்.
ஷாஜி இவ்வாறு கூறியுள்ளார்…
Nice and Useful article.

Thanks Sathik bhai
ஆனந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவு அருமை,சரியான நேரத்தில் சரியான பதிவு.
பன்றி உணவை தவிர்த்து விடுங்கள் (ஆச்சரியம்.இஸ்லாம் பன்றிகளை தவிர்க்க அன்றே அறிவுறித்தியிருக்கிறது)
இதுதான் தேவையில்லாதது போல் இருக்கிறது?
அப்படியானால் பறவைக் காய்ச்சல் என்று ஒன்று வந்ததே? பறவை உணவுகளே தவிர்க்கவும் என இசுலாம் சொல்லவில்லையா?

எனவே இது போன்ற மக்களுக்கு தேவையான பதிவுகளில் மதப் பார்வை வேண்டாமே பிளிஸ்

அன்புடன் ஆனந்தன்
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
காலத்தின் கட்டாயம்

நல்ல பகிர்வு
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள ஆனந்தன் இந்த பதிவு பறவைக் காய்ச்சல் பற்றியதோ இஸ்லாத்தைப் பற்றியதோ அல்ல.இஸ்லாம் சொன்ன ஒரு கருத்து அதுவும் இந்த பதிவுக்கு தொடர்புடைய கருத்து என்னை ஆச்சரியப்படுத்தியால் பிராக்கட்டுள் என் ஆச்சரிய உணர்வை பதிவு
செய்திருந்தேன் அவ்வளவுதான். இஸ்லாத்துக்கு மாறுங்கள் பன்றிக்
காய்ச்சல் வராது என்று சொல்ல வில்லை. நல்ல கருத்து எங்கிருந்து வந்தால் என்ன நல்லது நல்லது தானே.நல்லதை பதிவு செய்வதும் பாராட்டுவதும் தானே பதிவர் பண்பு.

பகுத்தறிவு பாசறைகளான பெரியார், அண்ணா,எல்லாம் மீலாது விழாக்களில் இஸ்லாத்தில் நல்லவற்றை பேசியிருக்கிறார்கள். மகாத்மா காந்தி குரான் வசனம் படித்துக் காட்டியிருக்கிறார். பிராமணரான பாரதி இஸ்லாம் பற்றி கவிதை எழுதவில்லையா.இவர்களின் பார்வை தான் எனக்கும்.

என் பதிவுகளுக்கு அவசரப்பட்டு மதச்சாயம் பூசி விடாதீர்கள்.என் பார்வையில் விஞ்ஞானமும் பகுத்தறிவும் தான் இருக்கும்.
எல்லா மதங்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டத்தான் பிறந்தது. ஆனால் காலப்போக்கில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தவறாக உபயோகப்படுத்தப்பட்டு மூட நம்பிக்கைகளின் கூடாரமாகப் போனது மதங்களின் குற்றமல்ல. மனித மனங்களின் குற்றம். பகுத்தறிவு பேசிய பெரியார் சிலைக்கு மாலை.
எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் அது மத நம்பிக்கைகளில் இருந்தாலும் அதற்கு எதிரான பார்வை தான் என்னுடையது. என் பார்வை என்
உணர்வுகளை சொல்வது தான் என் பதிவு. தவறான கருத்தையோ யாரையாவது புண்படுத்தும் கருத்தையோ பதிவு செய்திருந்தால்
தயவு செய்து சுட்டிக் காட்டவும். நிச்சயம் திருத்திக் கொள்வேன்.
நன்றி
அன்புடன் சாதிக்
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நட்புடன் ஜமால்,ஷாஜி,ஆனந்தன்,அபூ அஃப்ஸர் எல்லோருக்கும் மிக்க நன்றி.
-----------------------------------
ஆனந்தன் said...
//பன்றி உணவை தவிர்த்து விடுங்கள் (ஆச்சரியம்.இஸ்லாம் பன்றிகளை தவிர்க்க அன்றே அறிவுறித்தியிருக்கிறது)
இதுதான் தேவையில்லாதது போல் இருக்கிறது?//
எது பன்றி உணவை தவிர்க்க வேண்டும் என்று சொன்னதா?

//அப்படியானால் பறவைக் காய்ச்சல் என்று ஒன்று வந்ததே? பறவை உணவுகளே தவிர்க்கவும் என இசுலாம் சொல்லவில்லையா?

எனவே இது போன்ற மக்களுக்கு தேவையான பதிவுகளில் மதப் பார்வை வேண்டாமே பிளிஸ்//
-- நீங்கள் கேட்ட கேள்விக்கு மதப்பார்வையின்றி எப்படி பதில் சொல்லுவதாம்?
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பன்றிக் காய்ச்சலை பொருத்தவரை சித்த மருத்துவ நூலில் "விஷக்காய்ச்சல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். அதற்கு நிலவேம்பு, விஷ்ணுகரந்தை, பற்பாடகம், சீந்தில் கொடி, ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, மிளகு, கிராம்பு தூள் செய்து கலந்து, வயிறு காலியாக இருக்கும்போது மூன்று வேளை குடித்தால் 5 நாளில் காய்ச்சல் சரியாகும். பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம் பக்கவிளைவு கிடையாது.