விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். ’குளொபல் வார்மிங்’(Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என விஞ்ஞானிகள் பீதி கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப்பற்றிய எந்த கவலையும் விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான். குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசு படுத்தில் மனிதனுக்கு நிகர் எதுவும் இல்லை.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் இடையறாது காற்றில் உமிழப்பட்டுக்கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடுகள் போன்ற வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு எங்கோ விண்வெளியில் ஒடிப்போய் விடாது. காற்று மண்டலத்தில் கலக்கும் இது ஒரு போர்வை போல் இது பூமியை சுற்றி மூடிக்கொண்டு மூச்சுத்திணர வைக்கும். பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக்கொண்டே போகிறதாம். மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்கு தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதும் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரிக்கக் காரணம்.
ஒயாத யுத்தங்களால் பல நாடுகள் பற்றி எரிவதும் ,பல நாடுகளில் பெருங் காடுகள் பற்றி எரிவதும் , CFC போன்ற பொருட்கள் குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படுவதும், அழுகிய உணவுப்பொருள் கழிவுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுக்களும், ரசாயன உரங்களால் வெளியாகும் N2O போன்றவையும் பூமி வெப்பத்திற்கு மற்ற முக்கிய காரணிகளாகும்.
அதிகரித்தால் அதிகரிக்கட்டும் நமக்குத்தான் ஏசி இருக்கிறதே? என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

- புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விஷயம் இது.
- இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத்தாக்குதலுக்குள்ளாகி மடிவதை பார்க்கிறோம்.
- காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓஸோன் செறிவு அதிகரிக்கச்செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும் நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோய் மேலும் தீவிரமடையச்செய்யும்.
- அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும் அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது. அதற்கும் கூட போட்டியாக மனிதனே விவசாய நிலங்களில் காங்கிரீட் போட்டு மூடி விடுகிறான்.
- நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படுத்தும்.
- பாலங்கள் ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும். (இதற்கு லஞ்சம் வாங்கும் எஞ்சினீயர்களும் காரணம் என்பது வேறு விஷயம்)
- கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் இப்படிப்பட்ட பெரும் நகரங்கள் காணாமல் போகிவிடும் அபாயம் உள்ளது. (அதற்கென்ன கடலுக்குள் பெரும் நகரங்கள் கட்டுகிறார்களே -ஆர்க்கிமிடிஸ் இருந்தால் மட்டும் எதிர்த்திருப்பார்)
- தினசரி பருவ நிலைகளை பாதிக்கும்.முக்கியமாக சில தினங்கள் மிக அதிக வெப்ப நிலையை எட்டுவதும் இதனால் தான். கால நிலையில் ஏற்படும் மாற்றம் எல்லா உயிர்களையும் பாதிக்கும்.
- மழை பொய்க்கும். (வரும் ஆனா வராது)
- துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப் பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும். அப்படி ஒரு அபாயம் இப்போது தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறதாம்.
- முடிந்த அளவு மரங்கள் நடுங்கள்.மரம் நடுவதை ஊக்குவியுங்கள்.
- எரிபொருளை விரயம் செய்யாதீர்கள்.சக்தியை முடிந்த அளவு சேமியுங்கள்.
- வீணான பொருட்களை ரீ சைக்ளிங் செய்யவும்.
- சுற்று சூழல் மாசு படுத்தும் செயல்களை தவிர்க்கவும் எதிர்க்கவும் வேண்டும்.
- பூமி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களிடம் ஏற்படுத்தவும்.
கருத்துகள்
இதை செவ்வனே தாங்கள் செய்துவிட்டீர்கள்
நாமும் முயற்சிப்போம்.
Global warming is the destroyer