நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் கோடிக் கணக்கான கண்ணுக்குத் தெரியாத நோய் கிருமிகள் நிறைந்திருக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் நேரம் பார்த்து இவை நம்மை தாக்கி நோயாளியாக்கக் காத்திருக்கின்றன. பொதுவாக எங்கெங்கே இந்த கிருமிகள் கூடாரம் போட்டு தங்கக் கூடும் என்று பார்ப்போம். அவற்றை இல்லாது ஒழிப்பதன் மூலம் உடல் நலத்தைக் காப்போம்.
- சமையல் அறையும் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
- சமையலறையில் பாத்திரம் துலக்க உதவும் ஸ்பாஞ்ச் அதிக அளவு கிருமிகள் இருக்கும் இடம். அதன் ஒரு சதுர இஞ்ச் பரப்பில் 134,000 பாக்டீரியாக்கள் இருக்கலாம் என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அதன் ஈரப்பதம் கிருமிகள் பல்கி பெருகுவதற்கு ஏற்ற சூழ்லைக் கொடுக்கிறது. வயிற்றோட்டட்டம் மற்றும் வயிற்று வலி உருவாக்கும் Salmonella , Campylobacter போன்ற கிருமிகள் அதில் இருக்கலாம்.
- சமையலறை ஸ்பாஞ்சுகளை வாரம் ஒரு முறை மாற்றவும். அல்லது ப்ளீச் கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து கழுவி உபயோகப்படுத்தவும்.
- சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி கிருமிகள் நிறைந்திருக்கும் மற்றொரு இடம். சமையலறை கழிவு நீர் குழாய்களில் ஒரு சதுர இஞ்ச் இடத்தில் சுமார் 500,000 பாக்டீரியாக்கள் சாதாரணமாக காணப்படுமாம்.
- சோப்புக்கள் கிருமிகளை கொல்வதில்லை.பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் தான் கிருமிகள் ஒழிப்பதற்கு சிறந்தது.
- சமயலறை மற்றும் பாத்ரூம்களில் உள்ள தண்ணீர் குழய்களின் கைப்பிடிகள், கதவுகள் கைப்பிடிகள் போன்றவற்றில் ஏராளமான் கிருமிகள் இருக்கக்கூடும். ஒரு சதுர இஞ்சில் 13,000 பாக்டீரியாக்களும் 6000 மற்ற கிருமிகளும் இருக்கலாம்.
- சமையலறை கட்டிங் போர்டு ஏராளமான கிருமிகளின் உறைவிடம்.
- கழிவறை பீங்கானில் சதுர இஞ்சுக்கு சராசரி 3.2 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
- குளியல் தொட்டிகளில் நீர் வெளியேறும் பகுதியில் சதுர இஞ்சுக்கு 120,000 சராசரி பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
- குளியலறை திரை சீலைகளில் Sphingomonas மற்றும் Methylobacterium போன்ற பாக்டீரியாக்கள் பெருமளவில் பதுங்கிஇருக்கின்றன.
- வாஷிங் மெசினிலும் மிகப்பெருமளவு கிருமிகள் நிறைந்திருக்கிறது. கழுவிய துணிகளிலும் எளிதில் இக்கிருமிகள் தொற்றி விடுகின்றன.
- வாக்குவம் கிளீனர்களின் புருஸ் களில் பெருமளவு பாக்டீரியாகாள் இருக்கின்றன, அதில் 50% fecal bacteria மற்றும் 13% e-coli bacteria காணப்படுகின்றன.சுத்தமான இடத்தை முதலிலும் அசுத்தமான இடத்தை கடைசியிலும் சுத்தம் செய்வது மூலம் கிருமிகள் எல்லா இடமும் பரவாது தடுக்கலாம். வாக்குவம் கிளீனர் உபயோகப்படுத்திய பின் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.
- மிதியடிகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
- படுக்கைகள், படுக்கை விரிப்புகள் ,போர்வைகள் ,தலையணைகள் பல்வேறு வகை கிருமிகள் மற்றும் நுண்ணிய பூச்சிகளின் உறைவிடம் .எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். இல்லையேல் பலவிதமான அலர்ஜிகளை இக்கிருமிகள் ஏற்படுத்தக்கூடும். இந்த துணிகளை கழுவிய பின் பூச்சிகள் சாகும் வரை கொதிநீரில் போட்டு, பின் உலர்த்தி உபயோகிக்கவும்.
- குளிர் பதன பெட்டியில் கெட்டுப்போன, நாள்பட்ட எதையும் வைக்காதீர்கள்.
- லாட்ஜுகளில் உள்ள போர்வைகள், ரிமோட் கண்ட்ரோல்களில் ஆபத்தான கிருமிகள் காணப்படலாம்.
- பொது தொலை பேசி கிருமிகளின் சந்தை.
- உதடுகளை அடிக்கடி நாக்கால் நக்கி ஈரப்படுத்தும் பழக்கம் நல்லதல்ல. உதடுகளின் வெளிப்புறம் நிறைய கிருமிகள் இருக்கலாம்.
- நாற்றமான சூழல் பாக்டீரியாக்களின் தேசம். அங்கே அதிக நேரம் நிற்க வேண்டாம்.
- சாலையோர உணவு விடுதிகளில் உணவு உண்பதை தவிர்க்கவும்.
- டின்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அதன் விளிம்புகளில் நம் உதடு படும் இடங்கள் கிருமிகள் இருக்கக்கூடும்.மூடியுள்ள பாட்டில்கள் நல்லது.
- காலணிகளை வீட்டின் வெளியே கழற்றியிடவும்.
- பாத்ரூம் காலணிகளில் கிருமிகள் அதிகம் இருக்கும். சுத்தமாக வைத்திருக்கவும்.
- வீட்டில் எல்லா இடமும் ஈரப்பதமின்றியும் சூரிய வெளிச்சம் படும்படியும் பார்த்துக்கொள்வோம்.
- கைகள் நோய் கிருமிகளின் வளர்ப்புப் பண்ணை. எனவே நோயாளிகள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஜலதோசத்துடன் கூடிய காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கையை கழுவுதல் நல்லது. நோய்த்தொற்றை குறைக்கும்.
- பிறருடன் கைகுலுக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். பிறரது கைகள் எந்த அளவு சுத்தமானவை என்பது தெரியாது. சும்மா விஷ் பண்ணுதே நல்லது.
- உணவு உண்ணும் முன்பும் பிறகும் கைகளை சுத்தமாக கழுவுவது மிக முக்கியம்.
- ரிமோட் கண்ட்ரோல்கள், மொபைல் ஃபோன்கள், டெலிஃபோன் பட்டன்கள் , ஃபிரிட்ஜ் கதவு கைப்பிடி , கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ், கதவு குமிழ்கள், சுவிட்சுகள், ரூபாய் நோட்டுகள், பேருந்துகளில் கைப் பிடிகள். பேனாக்கள், விசிட்டிங் கார்டுகள், மருத்துவமனை வராண்டாக்கள் , கைப்பிடிச்சுவர்கள், புத்தகங்கள் இவை யாவும் நோய்கிருமிகள் சர்வ சாதாரணமாக புழங்கும் இடங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
- ரூபாய் நோட்டுகளை எச்சில் தொட்டு எண்ணாதீர்கள்.
- பேருந்துகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் எங்கும் நோய்கிருமிகள் நிறைந்திருக்கும்.
- தினமும் குளிப்பது மிக நல்ல பழக்கம்.இது தினமும் உடலில் தங்கும் கிருமிகளை நீக்குகிறது.
- டால்கம் பவுடர் போடுவது தோலில் கிருமிகள் வளர்வதை தடுக்கிறது.
- அழுக்கான ஆடைகளை உடுக்காதீர்கள்.
- தண்ணீர் தேங்க விடாமல் நோய் பரப்பும் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- தூங்கும் போது கொசு வலைகள் உப்யோகித்து கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா,போன்ற வைரசுகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்
- வைரஸ் அதிகமாக புழங்கக்கூடும் என கருதும் மேற்கண்ட இடங்களை சோப்பு மற்றும் டெட்டால் போன்ற மருந்துகள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது.
- வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் நாள் தோறும் அப்புறப்படுத்த வேண்டும்.
கருத்துகள்
ரொம்ப நன்றிங்கோ ...
அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து தட்டச்சு செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் உணவு பொருட்கள் கணினிகளில் குறிப்பாக, மவுஸ், கீபோர்ட் மீது படிந்துவிடுகின்றன. இதனால், பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற இடமாகவும் அவை மாறிவிடுகின்றன என்று தொழில்நுட்ப மேலாளரான பீட்டர் பாரட் கூறியுள்ளார்.
ஆண்கள் பயன்படுத்தும் மவுஸ்களில் மட்டும் 40 விழுக்காடு பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், மவுஸ்களுக்கு அடுத்ததாக விசைப்பலகை உள்ளதாம்.அடுத்ததாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகளில் அதிக கிருமிகள் உள்ளன. சமையலறை, வாகன ஸ்டியரிங், நாற்காலிகள், ஷாப்பிங் டிராலிகள், லிப்ட் பட்டன்கள் என பல இடங்களில் கிருமிகள் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.
அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.
ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.
கொசுத் தொல்லை ஒழிய…
கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
ஈ மொய்ப்பதை தடுக்க…
சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.
பல்லியை விரட்ட…
வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது. நாமும் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.
எறும்புகள் வராமல் தடுக்க…
எறும்பு பவுடர் போடும் போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணெயில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது. அதிகப் பவுடரும் ஆகாது.
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க…
கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.
மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க…
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.
விஷக்கடி
விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.
பூச்சிக்கடி, உடல் அரிப்பு
பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனீ , குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
தேள் கொட்டுதல்
தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.
வேர்க்குரு, அரிப்பு
குளித்த பிறகு ஈரம் போக துடைத்து, மருதாணி எண்ணைய் தடவி வந்தால், அரிப்பு நின்று புண் ஆறி பரிபூரண குணம் கிடைக்கும்.
வேப்பிலையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குறித்தால் சரும நோய்கள் வராது.
பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொறி , சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது.
1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
அப்படியாக பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.
2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.
"காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள். பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.
3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.
அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?
4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.
5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம் ( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.
அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?
6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.
மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான். அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள். ஆனால் நாம்.....................?
இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும். இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம். ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.