இறைவனைக் காண முடியுமா?

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே கேட்கப்பட்டு இன்றுவரை சற்றும் அசராமல் நிலைத்திருக்கும் கேள்வி இது. இறைவனை பற்றி சிந்திக்காத மனிதர்கள் இருப்பது சந்தேகமே.

ஒவ்வொரு மனிதனும் "தன்னையும்" "தன்னைச்சுற்றியுள்ள உலகத்தையும்" "உணர்கிறான்". இது" என்ன?", "ஏன்?" , "எப்படி வந்தது?" என்ற கேள்வியால் தோன்றியது தான். " இறைவன் " என்ற சொல். இந்த சொல்லுக்கு உரிய பரம் பொருள், கண்ணால் காணவோ, அறிவால் உணர்த்தவோ முடியாத தன்மயுடையது. ஆனால் உணரமுடியும். உணர முடிந்த ஒரு சிலராலும் பிறருக்கு விளக்கமுடியாத தன்மை உடையது. அறிவை விளக்கலாம். உணர்வை அப்படி முடியாது. ஏன் இந்த சிக்கல். அறிவின் அடிப்படத்தகராறு இது. ஒன்றை புதிதாக அறிந்து கொள்ள வேண்டுமானால் அதன் வெவ்வேறு தன்மைகளை கொண்ட குறைந்தபட்சம் வேறு இரு பொருட்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒன்றை பற்றிய அறிவை எப்பொதும் இன்னொன்றை தொடர்பு படுத்தியே பெற முடியும். அது மட்டுமல்ல அறிவை வெளிப்படுத்துபவர் மட்டுமின்றி பெறுபவரையும் பொறுத்து தான் பெறப்படும் அறிவு அமைகிறது.

 அறிவு என்பது சார்பானது . சார்பான ஒன்றால் ஒருபோதும் முழுமயான பரம் பொருளை விளக்க முடியாது "ரோஜா மாம்பழம்" என்றதும் என்ன அறிந்து கொள்வீர்கள். இதற்கு முன் "ரோஜாப்பூ நிறம்"" மற்றும்"மாம்பழம்" உங்களுக்கு தெரிந்திருந்தால் ரோஜா நிறமுள்ள மாம்பழம் என்று அறிந்து விடுவீர்கள். மாம்பழ ரோஜா என்றால் அது வேறு அர்த்தம். நீங்கள் ரோஜா அல்லது மாம்பழத்தை இதற்கு முன் அறிந்திருக்காவிட்டால் "ரோஜா மாம்பழத்தை உங்களுக்கு விளக்கவே முடியாது. ஒன்று இன்னொரு ரோஜா என்றோ அல்லது இன்னொரு மாம்பழம் என்று தான் அறிந்திருப்பீர்கள். மட்டுமல்ல நீங்கள் மஞ்சள் நிற ரோஜாப்பூ மட்டுமே இதற்கு முன் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நான் ரோஜா மாம்பழம் என்று சொன்னதை மஞ்சள் மாம்பழமாகவே அறிவீர்கள். பிறவியிலேயே  பார்வையற்றவ்ரிடம் "நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" என்று பாடினால் எப்படி பொருள் கொள்ளுவார்.

அன்பு, காதல் இதெல்லாம் உணர்வது. அறிவது அல்ல. எல்லோரும் இதை தனிதனியாக உணர்ந்திருந்தாலும், ஒருவருடையா அன்பை , காதலை பிறருக்கு சொல்வதில் எவ்வளவு கஸ்டம்.. ஒரு ப்ளேட் மட்டன் பிரியானியானியின் சுவை சமையல்காரரை பொறுத்துத்து மட்டுமல்ல .சாப்பிடுபவரின் பசியையும் பொறுத்தது

இறைவனை பற்றி, பரம்பொருளை பற்றி எவரிடமும், எந்த வேதங்களிலும், எந்த மஹான்களிடமும் கேட்காதீர்கள், அப்படி அறிய முடியாது அறிவித்து கொடுக்கவும் அவர்களால் முடியாது. இந்த கேள்வி எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே கேளுங்கள். கேட்டு உங்களால் அறிய முடியாது என்றாலும் உணர முடியும்.

மெய்ஞான அறிவு என்பது விண்ணிலிருந்து பூமியை பார்ப்பது போல் என்றால் மனிதனின் சாதாரண பவுதீக அறிவு என்பது ஒரு இடுங்கிய 14 " டீ வி யில் உலகக் காட்சிகள் பார்ப்பது போன்றது. இங்கே காட்டப்படுவதை தான் பார்க்கிறோம். உள்ளதை உள்ள படி அறிவதில்லை.  காட்சிகளுக்கு எல்லை உண்டு..நாம் உண்மை என்று உணரும் எல்லாமே மற்றொரு உண்மை நம் கருத்தில் உண்டாக்கும் விளைவுகளேயே..  இந்தகைய காட்சிப் பிழைக்கு காரணம் நம் புலன்களின் குறைபாடே, முனனே  இருக்கும் கண்ணாடி போன்றது உணமை அதை உணராமல் அதன் பிதிபலிப்பு  எனும் விளைவால் தெரியும் காட்சி தான் நாம் உண்மையென்று உணருவது.மனம் இந்த மயக்கத்திலிருந்து  மீளும் போது அதுவரை தெரிந்த காட்சிகள் மறைந்து கண்ணாடி மட்டுமே தெரி்யும்.

ஒரு நாத்திகன் தன் வீட்டு வாசலில் GOD is No where என்று எழுதி வைத்தானாம். அதைப் பார்த்து ஒரு துறவி அந்த வீட்டுக்குள் வந்து எங்கே கடவுள் என்று தேடினான். நாத்திகனோ துறவியிடம் ஏன் "நீ வாசலில் போர்டை சரியாகப் படிக் வில்லையா? என்றானாம். அதற்கு அந்த துறவி சொன்னார் "படித்தேன் God is now here என்றிருந்தது அதனால் தான் வந்தேன் . பார்வைகள் பல விதம்.

ஒன்றைத் தேடும் முன் எதை தேடுகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.
உதாரணமாக கூகிளில் ஒன்றைத் தேடும் போது எதைப் பற்றி தேடுகிறோம் என்பதை டைப் செய்தால் தான் தேட முடியும். இதுவரை எந்த டிக்ஸ்னரியிலும் காணப்படாத ஒன்றை dfdoaiuetjhzdckldsditekl என்று தேடினால் என்ன கிடைக்கும்.

இறைவன் என்று நம்மால் கற்பனை செய்யக்கூடிய எல்லாமே இறைவன் படைத்ததாக நம்பப்படும் இந்த பூமியில் நம் மூளை உணரக்கூடிய உருவங்களை மட்டும் தான் . படைத்தவனும் படைப்பும் ஒன்றாகாது..இந்த உலகத்தின் காட்சிகளை ,பண்புகளை மனம் தான் உருவாக்கி அறிந்து கொள்கிறது,எனவே இறைவனை இந்த உலகத்தில் தேடுவது அபத்தம்

எத்தனை மனங்கள் இருக்கிறதோ அத்தனை விதமாக.மனிதர்கள் இறைவனை கற்பனை செய்கிறார்கள். இறைவன் உருவமற்றவன் என்று சொன்னாலும் கூட இறைவனை ஏதாவது மனித அடையாளங்களில் தான் உள்ளத்தில் உருவகப்படுத்துகிறார்கள். அதுவே அந்த இறைவனுக்கு இணை வைக்கும் ஒன்றாகி விடுகிறது..ஒரு தலைவரை  நாம் பார்த்ததிலை. ஆனால் நம்மை அவர் எப்போதும் அருகிலிருந்து கவனிக்கிறார். என்று வைத்துகொள்வோம்..அவரை கவுரவிக்க விரும்புகிறோம் .தலைர் எப்படியிருப்பார் என்று தெரியாது என்பதற்காக   தெரிந்த இன்னொருவரை  அல்லது  ஒரு அடையாளத்தை அவர் முன்னிலையிலே கவுரவித்து மாலையிட்டால் அது தலைவரை அவமதிப்பதாகாதா?

மனித அறிவால் உணர்ந்து கொள்ள முடியாததை எப்படி உருவகப்படுத்தி வணங்குவது. எல்லோரும் அவரவருக்கு தோன்றிய உருவகத்தில் இறைவனை நம்புகிறார்கள். அனால் அந்த இறைவனுக்கும் உண்மைக்கும் தூரம் மிக அதிகம். இதில் உன் கடவுள் என் கடவுள் என்று அடித்துக்கொண்டு உயிரை விடுகிறார்கள். ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஒரே இறைவனையா நம்புகிறார்கள். இல்லை அவர்களது கடவுளின் பெயர் தான் ஒன்றாக இருக்கும். கடவுளைப் பற்றிய அகக் காட்சிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தான்.

கடவுள் உண்டு என்று ஆத்திகனும் கடவுள் இல்லை என்று நாத்திகனும் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்டு என்றும் இல்லையென்றும் கூறும் முன் அந்தக் கடவுள் எது என்பதில் ஒத்த கருத்து கொள்கிறார்களா? இல்லை. ராமசாமி ஆணா? பெண்ணா? என்று விவாதிக்கலாம். ஆடு கத்துவதை எந்த மொழி என்று வகைப்படுத்துவது. இறைவன் உண்டு என்பதும் உண்மை தான் இல்லை என்பதும் உண்மை தான் . இறைவன் என்பதற்கு நாம் கொள்ளும் பொருளைப் பொறுத்தது அது.

இறைவன் எப்படி இருக்க முடியும் என்று சிந்திப்பது நம் அறிவால் அமைத்துப் பார்க்க முடியாத விஷயம் . ஆனால் இறைவன் எப்படியெல்லாம் இருக்க முடியாது என்று கூடவா அறிவுக்கு எட்டாது.  அறிவுக்கும்  முரண் பாடாக தெரிந்தும் பிடிவாதமாக மனித குணாதிசயங்களுடன் மனிதச் சாயலாகவே கடவுளை உருவகப்படுத்துவது  பகுத்தறிவல்ல

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
கூகிளின்Follower widget தற்போது எனது பதிவில் வேலை செய்ய வில்லை.என் பதிவைத் தொடரும் மதிப்பு மிக்க நண்பர்களை காண முடியவில்லை.இதை எப்படி கொண்டு வருவது என தெரிந்த பதிவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்
நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
\\பார்வைகள் பல விதம்.\\

மிகச்சரி.
நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
add my id for the follower widget we shall discuss

adiraijamal@gmail.com
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டி
னர்.

இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.

மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.organiclab.narod.ru/books/DMT-The-spirit-molecule.pdf
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பு, காதல் இதெல்லாம் உணர்வது. அறிவது அல்ல. எல்லோரும் இதை தனிதனியாக உணர்ந்திருந்தாலும், ஒருவருடையா அன்பை , காதலை பிறருக்கு சொல்வதில் எவ்வளவு கஸ்டம்.. ஒரு ப்ளேட் மட்டன் பிரியானியானியின் சுவை சமையல்காரரை பொறுத்துத்து மட்டுமல்ல .சாப்பிடுபவரின் பசியையும் பொறுத்தது
arumai
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கேள்வி எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே கேளுங்கள். கேட்டு உங்களால் அறிய முடியாது என்றாலும் உணர முடியும்.// Good Advice