எலுமிச்சம் பழம்

  • எலுமிச்சம் பழச் சாறு தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படும் பானம் தாகத்தை தணிக்க மிகச்சிறந்த மலிவான பானம். இது புத்துணர்வு ஊட்டுகிறது ஈரலை சுத்தப் படுத்துகிறது.
  • வைட்டமின் C நிறைந்தது.
  • கோடை வெப்பத்தாலும் உடல் நலக் குறைவாலும் ஏற்படும் நீரிழப்பை ஈடு கட்ட எலுமிச்சை ஜூஸ் நல்லது. வயிற்றுப் போக்கால் உடலில் உள்ள நீரும் தாதுக்களும் குறையும் போது,நிறைய தண்ணீரில் எலுமிச்சப் பழச் சாறும் சிறிது உப்பும்,ஒரு சிட்டிகை சோடா உப்பும் கலந்து அருந்துவது நீர் தாது இழப்பை ஈடு கட்டும்.
  • எலுமிச்சம் பழம் பண்டைய காலத்தில் காயங்களை ஆற்றவும், பல்வேறு விஷ முறிவாகவும் பயன் பட்டது.
  • சாதாரணமாக ஒரு எலுமிச்சம் பழத்தில் மூன்று மேஜைக்கரண்டி சாறு இருக்கும். இதனை சாறு பிழிவதற்கு முன் சில வினாடி மைக்ரோ வேவ் அவனில் வைத்து எடுத்து சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
  • எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலச்சத்து மீன் உணவிலிருந்து வாடையை வெளிப்படும் amines களை ஆவியாகாத ammonium உப்புக்களாக மாற்றி விடுகிறது.எனவே மீன் உணவுகளின் வாடையை போக்குவதற்கு எலுமிச்சை சாறு நல்லது.
  • சமைப்பதற்கு முன் மாமிசத்தில் எலுமிச்சை சாறு தடவுவது மாமிசத்தை மென்மையாக ஆக்கும்.
  • கிரீஸ்,மற்றும் கறைகளை நீக்குகிறது.
  • கிருமிகளை ஒழித்து துர்நாற்றத்தை போக்குகிறது.
  • எலுமிச்சைத் தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் இயற்க்கையான பூச்சிக்கொல்லியாகப் பயன் படுகிறது.
  • முடியை செம்பட்டை யாக்க உதவுகிறது.முடி கொட்டுவதை தடுக்கும்
  • சருமத்தை வெளுப்பாக்கவும் உதவுவதாக நம்பப் படுகிறது.
  • எலுமிச்சை சற்றில் pH அளவு குறைவாக இருப்பதால் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல் படுகிறது.
  • எலுமிச்சைச் சாறு முகப்பருவுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. முகத்திற்கு புத்துணர்வு ஊட்டும். அதோடு சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி் சிறிது நேரம் களித்து முகம் கழுவி வர தோல்சுருக்கம் , கரும்புள்ளிகள், நீங்கி முகம் பளபளக்கும்.
  • எலுமிச்சையின் நறுமணம் புத்துணர்வு தருகிறது.
  • எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி உப்பு அல்லது,சோடாப் பொடியில் முக்கி செம்புப் பாத்திரங்களைத் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளக்கும்.
  • எலுமிச்சையில் உள்ள மெக்னீசியச்சத்து கால்சியத்துடன் சேர்ந்து இரத்ததில் ஆல்புமினை உருவாக்கப் பயன் படுகிறது.
  • எலுமிச்சையிலுள்ள அனேகத் தாதுப்பொருட்கள் பித்த வாந்தி,இருமல்,ஈரல் கோளாறு, போன்ற நோய்களை குணமாக்க உதவுகிறது.
  • தொண்டை வலிக்கு எலுமிச்சை சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து அடிக்கடி வாய்க் கொப்பளிக்க குணமாகும்.
  • நகச்சுற்று , பருக்கள் போன்றவற்றில் எலுமிச்சம் பழத்தை வெட்டி க் கட்டி வைத்தால் சீழ் வெளியேறும் வலி குறையும்
  • அரை கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது நெஞ்செரிச்சலைக் குறைக்கிறது.வயிற்றுப் பொருமல், போன்ற ஜீரணக் கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுப் புண்ணைக் நீக்கும்
  • அதிக மாத விடாய்,மற்றும் இரத்தப்போக்கிற்கு எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து அருந்தி வர நிற்கும்.பேதி, சீதபேதி, இரத்தபேதி, இரத்தப் போக்கு ஏற்பட்டால் காய்ச்சிய நூறு மில்லி பாலில் பாதி எலுமிச்சம் பழச் சாறு கலந்து, வடிகட்டியபாலை மட்டும் குடிக்கவும். நோய் விரைவில் கட்டுப்படும்
  • ஒவ்வொரு இரண்டு முதல் நான்கு மணிக்கொருமுறை எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து அருந்த scurvy நோய் குணமாகும்.
  • தூக்கமின்மையை நீக்கும்.
  • அஜீரண வாந்திக்கும், கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை சாறு நல்லது.
  • மயக்கத்தை நீக்கும், பித்தத்தைத் தணிக்கும்.
  • மூல நோய், மற்றும் வயிற்றுக் கடுப்பைப் போக்கும்.
  • புதிதாகப் பிழிந்த எலுமிச்சை சாற்றை இளநீரில் கலந்து கொடுத்துவர டைபாய்டு காய்ச்சலில் குணம் தெரிவதுடன் வாந்தி உணர்ச்சியும் குறையும்.
  • இரண்டு துளி எலுமிச்சை சாற்றை காலை மாலை காதில் விட்டு வந்தால் காது குடைச்சல் தீரும்.
  • எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரை கலந்து தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை, கட்டுப்படும்.
  • கண் நோய்கள் நீக்கும்.
  • நூறு மில்லி நீரில் பாதி எலுமிச்சை சாறும் சிறிதளவுஉப்பு சேர்த்து குடிக்க காம உணர்வு குறையும்.
  • எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிப் பழச்சாறு, தேன் கலந்து தினசரி ஒருவேளை வீதம் தொடர்ந்துகுடிக்க காசம் கட்டுப்படும்.
  • உடல் எரிச்சல் தோல் வறட்சி உள்ளவர்கள் குளிக்கும் நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறை சேர்த்து குளித்தால் நலமாகும்.
  • உணவில் தவறாமல் எலுமிச்சைச் சாறு, வல்லாரைக் கீரை அல்லது மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய வற்றை சேர்த்துக்கொள்வது வெண் புள்ளிகளை குணமாகும்.
  • மூத்திரப் பிரச்சினையய் சரியாக்கும்
  • நீரிழிவைத் தணிக்கும்.
  • வாய் நாற்றம் நீங்கும்.பல் ஆட்டம் நிற்கும்.
  • தூக்க ஸ்கலிதத்தை நீக்கும்.
  • எலுமிச்சை சாறும் ,தேனும் சம பங்கு எடுத்து இருமல் மருந்தாக உபயோகிக்கலாம்.
பாதக அம்சம்:
  • அளவுக்கு அதிகம் அருந்துவது பல் எனாமலை தேய்க்கும்.
  • அதிக காய்ச்சலின் போது அருந்த நிலமை மோசமாகும்.
  • மருந்துண்ணும் நாளில் மருந்தின் சக்தியை குறைக்கும்.
  • சிறு குழந்தைகளுக்கு ஆகாது.
  • ஆஸ்துமாவிற்கு ஒத்துக்கொள்வதில்லை.
  • வாத நோய்க்கும் சளிக்கும் ஆகாது.
  • மாத விலக்கு நாட்களில் குளிரும் காய்ச்சலும் உண்டாக்கும்.
  • விந்து உறுதியை தளர்த்தும்
எலுமிச்சையிலுள்ள சத்துக்கள்:
நீர் --- 48.6 gm
புரதம் --- 1.5 gm
கொழுப்பு --- 1.0 gm
தாது உப்புக்கள் ---- 0.7 gm
நார் சத்து ---- 1.3 gm
சர்க்கரை ---- 10.9 gm
சக்தி ---- 59K Cal
சுண்ணாம்பு ---- 90 mg
பாஸ்பரஸ் ---- 20 mg
இரும்பு ---- 0.3 mg
மாவு --- 15 Ug
தையமின் --- 0.02 mg
ரிபோஃப்லெவின்-- 0.03 mg
நியாசின் ---- 0.1 mg
வைட்டமின் C --- 63mg

லெமன் ஜூஸ் செய்முறை:
  • இரண்டு எலுமிச்சம் பழங்களை எடுத்து நன்றாக சாறு பிழியவும்.
  • நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • இரண்டு மேஜை கரண்டி சர்க்கரை ,கால் தேக்கரண்டி உப்பும் நன்கு கலக்கவும்.
  • தேவைப்பட்டால் ஃப்ரிஜ்ஜில் வைத்து அல்லது ஐஸ் கட்டி போட்டு பருகவும்.
எலுமிச்சைத் தேன் ஜூஸ்:
  • பாதி எலுமிச்சம் பழத்தை ஒரு கப் வெது வெதுப்பான நீரில் பிழிந்து,ஒரு தேக்கரண்டி தேன் விட்டு கலக்கி அருந்தவும்.
இஞ்சி லெமனேட்:
  • அரை அவுன்ஸ் தெளிந்த இஞ்சி சாற்றில் பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டு சிறிது உப்பு சேர்த்து அருந்தவும்.
லெமன் சோடா:
  • ஒரு எலுமிசம் பழத்தின் சாறெடுத்து அதில் 3 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைசியில் ஒரு சிட்டிகை சோடாப்பொடி போட்டு கலக்கிக் குடிக்கவும்.கடும் வயிற்று வலி பிரச்சனைகள் உடனே தீரும்.

கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Instead of getting a cup of coffee, why not replace it with a warm water lemon drink!? Below are the good factors to consider.

1. Boosts your immune system: Lemons are high in vitamin C, which is great for fighting colds. They’re high in potassium, which stimulates brain and nerve function. Potassium also helps control blood pressure.

2. Balances pH: Drink lemon water everyday and you’ll reduce your body’s overall acidity. Lemon is one of the most alkaline foods around. Yes, lemon has citric acid but it does not create acidity in the body once metabolized.

3. Helps with weight loss: Lemons are high in pectin fiber, which helps fight hunger cravings. It also has been shown that people who maintain a more alkaline diet lose weight faster.

4. Aids digestion: Lemon juice helps flush out unwanted materials. It encourages the liver to produce bile which is an acid that required for digestion. Efficient digestion reduces heartburn and constipation.

5. Is a diuretic: Lemons increase the rate of urination in the body, which helps purify it. Toxins are, therefore, released at a faster rate which helps keep your urinary tract healthy.

6. Clears skin: The vitamin C component helps decrease wrinkles and blemishes. Lemon water purges toxins from the blood which helps keep skin clear as well. It can actually be applied directly to scars to help reduce their appearance.

7. Freshens breath: Not only this, but it can help relieve tooth pain and gingivitis. The citric acid can erode tooth enamel, so you should monitor this.

8. Relieves respiratory problems: Warm lemon water helps get rid of chest infections and halt those pesky coughs. It’s thought to be helpful to people with asthma and allergies too.

9. Keeps you zen: Vitamin C is one of the first things depleted when you subject your mind and body to stress. As mentioned previously, lemons are chock full of vitamin C.

10. Helps kick the coffee habit: After taking a glass of warm lemon water, most people suggests of less craving for coffee in the morning.

Why it has to be warm water not cold? Cold water likely provides a shock or stress factor to the body. It takes energy for your body to process cold water.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் சரியான நிவாரணி.
2)எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.
3)ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.
4)தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.
5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
6)எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !
7)உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
8)உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும்
9)மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது
10)எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
எலுமிச்சைப்பழ சாறில் உள்ள சிட்ரேட் எனும் உப்பு சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
3 Powerful Foods and a Homemade Remedy That Could Help Unclog Your Arteries
with daily consumption of this beverage you will destroy the blockages in the arteries and get rid of the fat in the blood.
The main purpose of the elixirs is treating and preventing clogged arteries (atherosclerosis), regulation of increased blood fat, preventing general body fatigue, prevention and treatment of infections and colds, intensely strengthening the immune system, cleansing the liver and improvement of liver enzymes, preventing free radicals in the body that cause the most difficult diseases and a number of other conditions associated with diseases of the heart and circulatory system.
Necessary ingredients:

4 whole larger heads of garlic (40 cloves)
4 lemons with peel
Smaller ginger root (3-4 cm) or two tablespoons of powder
2 liters of clean water

Preparation of this beverage:

Wash the lemon well and cut it into pieces. If the lemon is not organic or it is sprayed then wash with a solution of vinegar and water. Peel the garlic and place it in the blender together with the lemon and ginger.

Mix it well into an equal mass. Put this blended mixture in a metal bowl and pour 2 liters of water and heat it all together while stirring to the boiling point.

Immediately before the boiling point turn it off and let it cool down. Strain through thick medium strainer and fill in glass bottles.

Drink this beverage every day per one glass of 200ml for at least 2 hours before meals or on a completely empty stomach. (If you do not mind you can skip the squeezing and drink the dense mixture). Keep the beverage in the fridge.