தேங்காய் - மகத்துவம்

உணவில் சுவையும் மணமும் ஊட்டும் தேங்காய் சிறந்த மருந்தாகவும் பயன் படுகிறது.
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
தேங்காயில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என அனைத்தும் உள்ளன.
தேங்காயால் உடல் வலிமை பெறும். தீ புண்களை ஆற்றும். தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. தேமல்,படை,சிரங்கு நீக்கும்.
தோலை புதுப்பித்து தோல் சுருக்கங்கள் அகற்றும்.

இதய நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாம்
தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என ஓர் ஆய்வு கூறுகிறது
"தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல" என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது.உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும் Capric Acid, மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம். அதோடு இந்த அமிலங்கள் வைரஸ் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்க வல்லது.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.தேங்காயில் உள்ள Mono Laurin வைரஸ்களின் செல் சுவர்களை கரைக்கிறது.தேங்காய் சர்க்கரை நோயால் ஏற்படும் தளர்ச்சியை போக்கும்.
இயற்கையான தேங்காய் எண்னெயால் இதயத்துக்கு எந்தக் கெடுதியும் இல்லை.ஆனால் தேங்காய் எண்னெய் கெட்டுப் போகாமலிருக்க பதப்படுத்தும் போது அதாவது hydrogenation என்னும் முறையில் ஒரு hydrogen மூலக்கூறை செயற்கையாக தேங்காய் எண்ணெயின் மூலக்கூறுடன் சேர்க்கிறார்கள்.இது தான் கெடுதல். இவ்வாறு செய்யப்படும் எல்லா எண்ணெயும் கெடுதல் தான் எனவே தூய இயற்கையான வடிவில் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது சிறந்தது.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்லது:
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பை குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.
ஆண்மைப் பெருக்கி:
முற்றிய தேங்காய் ஆண்மையை அதிகரிக்கும். அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தள்ளிப் போடும் தைராய்டு சுரப்பியை ஊக்குவிக்கிறது. குறை தைராய்டு நோய்க்கு தேங்காய் எண்ணெய் நல்லது.

கர்ப்பிணிகளுக்கு நல்லது:
தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுத்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமாம்
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

இளநீர் இயற்கை மனிதனுக்கு தந்த வரம் . சுத்தமான சுவையான பானம். பல்வேறு வகைகள் உள்ளன. எல்லா வகையிலும் சிறந்தது தான்.
  • உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்
  • இரத்தத்தில் தேவையான தாது உப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
  • அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் .
  • இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணத்தை கட்டுப்படுத்துகிறது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும்.
  • மேக நோய்களைக் குணப்படுத்தும்.
  • உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
  • இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
  • இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து.
  • ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன.
  • அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை மூலம் செலுத்தலாம்.
  • பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச்சமமாகும்.
  • இளநீர் மிக மிகச் சுத்தமானது.
  • ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது.
  • ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.
  • இளநீரிலிருந்து கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தான . "ஜெல்' என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது
  • இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
  • இளநீரில் தாய்ப்பாலுக்கு ஈடான புரதச்சத்து உள்ளது.
  • மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
  • கடும் வெயில் காரணம் அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர் கடுப்பு உண்டாகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்த் பாதையில் புண் இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகி வர ஐந்து நாளில் சரியாகும்.
  • மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீரே மருந்து.
  • கடும் காய்ச்சலுக்கு இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தணியும்.
  • பேதி, சீதபேதி, இரத்த பேதியின் போது மற்ற உணவுகள தவிர்த்து உடனே இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் மாறும்.
  • சிறுநீரகக் கல், சதையடைப்பு URINARYINFECTION போன்ற கோளாறுகளுக்கு இளநீர் நல்ல மருந்து
  • கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
  • டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
  • அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைப் புண் (OPERATION SORE) சீக்கிரம் ஆறிவிடும்..
  • இளநீரில் உள்ள தாதுக்கள் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு பயன்படுவதால் ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
  • இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.
தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
  • மாத விடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப் போக்குக்கு,தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படு சாறு நல்ல மருந்து.
  • வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • தேங்காய் புண்ணாக்கும் கருஞ்சீரகமும் சேர்த்து தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.
  • தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
  • மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
  • தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு. இது சேராங்கொட்டை , பாதரசத்தால் உண்டாகும் நஞ்சு போன்ற பல நஞ்சுகளை முறிக்கும்.
தைலங்கள்;
நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு முக்கியமானது.

தேங்காயில் உள்ள சத்துக்கள்:
ஒரு கப் (80 gm துருவிய )தேங்காயில் உள்ள சத்துக்கள்
கலோரிகள்- 283 : கொழுப்பிலிருந்து பெறப்படும் கலோரி-224
மொத்தக் கொழுப்பு : 27 gm (41%)
ஸேச்சுரேட்டட் கொழுப்பு:24 gm (119%)
கொலெஸ்ட்ரால் : 0gm (0%)
சோடியம் : 16 mg (1%)
மொத்த மாவுச்சத்து :12gm(4%)
உண்ணத்தக்க நார் சத்து :7gm (29%)
சர்க்கரை :5gm
புரதம் :3 gm
விட்டமின் A : (0%)
விட்டாமின் C :(4%)
சுண்ணாம்பு சத்து :(1%)
இரும்பு சத்து :(11%)

மேலு அறிய: Super Foods - The Truth about Coconut - vide


 Coconut Oil Touted as Alzheimer's Remedy




கருத்துகள்

Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
If you ask most doctors, they’ll tell you there is no cure for Alzheimer’s, nor is there a treatment. Dr. Mary Newport begs to disagree. When her husband was diagnosed with Alzheimer’s at the young age of 51, she set to work researching the disease and understanding why it happens and how it can be stopped.

Her husband’s traditional medication was not working to slow the disease, and it was progressing rapidly. It didn’t take long before he wasn’t even able to tie his shoes anymore. So Dr. Newport tried something that was, in a way, out of desperation.
Coconut oil.

She started her husband on four teaspoons daily and noticed results right away. He became more mentally agile and was able to read again, have conversations, and tie his shoes again. Mary had her husband back. But Mary, being a doctor and knowing that one instance of Alzheimer’s being treated makes not a cure, so she decided to quantify her findings with more in-depth research. Her next step has been to apply for funding for investigating this treatment.

After some time, she was given the green light to study 65 individuals with early onset to moderate Alzheimer’s. She’s studying how coconut oil impacts the ability of Alzheimer’s sufferers to continue to function at some higher level. Alzheimer’s has been called type 3 diabetes. To function normally, your brain needs fat and glucose. It’s what the brain considers fuel. Studies have shown that low carb and fat diets, for example, can impact brain function negatively. So this is where coconut oil comes into play.

Coconut oil is rich in ketones. Ketones are a molecule that the brain uses for energy when there isn’t enough glucose around. Dr. Newport thinks this is how her husband was helped by coconut oil. His brain was no longer using glucose and fats for food, and in their absence, added ketones filled in some of the blanks for energy.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
தேங்காய் எண்ணை அல்சீமர் நோய்க்கு மருந்து கானொளி

https://www.youtube.com/watch?v=ZZOR-Qd3QSg
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Coconut oil is a powerful plant extract that is capable of killing bacteria responsible for oral decay. Irish scientists found that coconut oil is able to kill steptococcus mutans, which is the bacteria that causes dental erosion. It’s also able to kill Candida albicans.

So how should coconut oil be used as a toothpaste? You can use straight coconut oil or try this recipe.

You will need:
•6 tablespoons of coconut oil
•6 tablespoons of baking soda
•25 drops of essential oil (if you prefer a flavor)
•1 tsp of stevia (only if you want it to be sweeter)

Instructions:
1.Mix ingredients in a bowl and whip until it’s a light, creamy texture.
2.Pour into a mason jar. Leave the lid on between uses.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Homemade Coconut Oil Lotion Bars

Coconut oil is one of the single most nutritious superfoods you can put in and on your body. It is loaded with lauric acid, capric acid and caprylic acid. The presence of these acids contributes to coconuts antioxidant, antifungal, antibacterial, antimicrobial and general body nourishing properties.

Coconut oil is an amazing oil that is known to rebuild our skin tissue. It should be used regularly for the elimination of wrinkles. Coconut oil is both hydrating and rebuilds our connective tissues which cause wrinkles. Try making these homemade coconut oil lotion bars that will may do wonders to your skin.

Ingredients:

– 1 Cup Coconut Oil

– 1 Cup Beeswax

– ½ Cup Shea Butter

– 1/3 Cup Almond Oil

– Essential Oils of your Choice

Directions:

Place all ingredients, except the essential oils in a quart mason jar. Boil a pot full of water placing the uncapped jar sitting inside. Stir regularly until all ingredients melt completely.

Let it cool down, Add oils and stir. Pour into silicone molds.

Once they have fully dried, pop out of the molds and place in mason jars.