31 January 2009

மைக்ரோ வேவ் சமையல்- உஷார்

மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார்.
அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கும் போது மிக அதிக அளவில் நஷ்டப்படுவதாக Dr Cristina Garcia-Viguera சோதித்து அறிவிக்கிறார்.

ஆன்டியாக்ஸிடென்டும் அதன் நஷ்ட விகிதமும்
ஆவியில் --- மைக்ரோ வேவ்அவனில்

flavonoids ----------- - 11% --- 97%
sinapics ----------- -- 0% --- 74%
caffeoyl-quinic derivatives--- 8% --- 87%

மைக்ரோ வேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது .குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது.

மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.

"குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது."1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.

ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோ வேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள். மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும்.--updated 18/03/2015 மன்னிக்கவும் இந்த  தகவல் தவறானது http://www.snopes.com/science/microwave/plants.asp
------------------------------------------------------------------------------------

ம்ம்.. இணையத்தில் காணப்பட்ட இந்த தகவலை நம்பி அவசரத்துக்கு உதவும் அவனை(oven)த் தூக்கி பரணில் போடவும் மனமில்லை. கான்சர் அபாயம் என்று வேறு பயமுறுத்துகிறார்கள். எல்லவற்றையும் விட உயிர் தான் முக்கியம். இது பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்பட்டு விரிவான ஆராய்ச்சிகளும் நடந்தால் ந்ல்லது.சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப்படுவதற்கும் மைக்ரோ வேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்து சூடாக்குகின்றன்.குறிப்பாக நீர் மூலக்கூறுகளை.இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம் புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது. நான் அறிந்ததை பதிவு செய்கிறேன்.
புதிதாக மார்கட்டில் வலம் வரும் இண்டக்சன் குக்கரும் இந்த வகை தான்.*

-------------------------------------------------------------------------------------
சாதாரண அடுப்பில் எரிபொருள் எரியும் போது அது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இன்னொரு மூலக்கூறாக மாறும்போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. இந்த வெப்பம வெப்ப அலைகளாக்ப் பரவி உணவை அடைந்து சூடாக்குகிறது.

மைக்ரோ அவனில் மின்சார அலை உண்டாக்கும் அதிர்வுகளால் (சுமார் 2.5 gigahertz) நீர் ,கொழுப்பு, சர்கரை மூலக்கூறுகள் அதிர்வடைந்து உராய்வடைந்து வெப்பம் உண்டாகிறது. பிளாஸ்டிக் , கண்ணாடி,பீங்கான் பாத்திரங்களில் இந்த அலை பாதிக்காது. சமையலுக்கு இத்தகைய பாத்திரங்களையே உப்யோகிக்க வேண்டும்.
மேலும் அறிய: How Microwave Cooking Works?

மைக்ரோ வேவும் உலோக பாத்திரமும்

ஆனால் உலோகப் பாத்திரங்கள் ,அலுமினியம் ஃபாயில்கள் மைக்ரோ வேவ் அவனில் உபயோகப் படுத்தக்க்கூடாது. உலோகங்களில் மைக்ரோ வேவ் மின்சாரததை தூண்டுகிறது. இது மெல்லிய உலோகங்களில் ஸ்பார்க் (spark) ஐ உருவாக்கி எரியச் செய்கிறது.

மைக்ரோ வேவில் முட்டை வெடிக்குமா?

மைக்ரோ வேவ் அவனில் முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. முட்டை வெடித்து விடும்.

மைக்ரோ வேவில் தண்ணீர் வெடிக்குமா?
சுத்தமான தண்ணீரை மைக்ரோ வேவ் அவனில் வைத்து அதிகமாக சூடாக்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் பாத்திரம் சூடாகமல் தண்ணீர் மட்டும் சூடாவதால் தண்ணீர் அதன் கொதி நிலைக்கு மேல் அதிக வெப்பமடைகிறது. வெப்பம் 100°c க்கு மேல் போனால் கூட நீர் குமிழ்களோ நீராவியோ வெளியாகாது.இந்த நிலையில் அந்த தண்ணீர் கோப்பையை அவனிலிருந்து வெளியே எடுக்க முயன்றால் உண்டாகும் சிறு அதிர்வால் தண்ணீர் வெடித்தது போன்று கொதிநிலைக்கு மேல் வெப்பமடைந்த தண்ணீர் கொப்பளித்து சிதறும். இதை தவிர்க்க தண்ணீர் சூடாக்கும் போது ஒரு உலோகமற்ற கரன்டியை அதில் இட்டு வைக்கலாம். பீதி வேண்டாம் அபூர்வமான நிகழ்வு இது என்றாலும் இப்படி நடைபெறும் வாய்ப்பு உள்ளது உண்மை.
மேலும் அறிய http://www.snopes.com/science/microwave.asp

மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப் கார்ன் தயாரிக்கும் போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரைஈரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள் , வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது.மேல் விபரம் இங்கே


update: 19-june -2009:
* Induction cooker .ன் செயல் பாடு அடிப்படையில் micro wave oven போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. micro wave oven -ல் பாத்திரம் சூடாவதில்லை ,உணவின் நீர் மூலக்கூறு தான் சூடாகிறது.இதில் தான் மேற்கண்ட பாதிப்பு உள்ளது. ஆனால் Induction cooker-ல் அடுப்பு சூடாவதில்லை.ஆனால் அதன் மீது வைப்பட்ட இரும்பு அல்லது காந்ததால் ஈர்க்கப்படும் உலோக பாத்திரத்தை மின் காந்த அலைகள் வெப்பமடையச்செய்கின்றன. அதனால் சாதாரண அடுப்பில் சமைப்பது போலவே உள்ளே இருக்கும் உணவு சூடாவதால் மேலே சொன்ன மைக்ரோ வேவ் அவனுக்குள்ள பிரச்சனை இவனுக்கு இல்லை. ஆனால் இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்களும், அரிதாக மைக்ரோவேவுக்கு சென்சிட்டி உடையவர்களும் இண்டக்சன் ஸ்டவ் ஆனாலும் ,மொபைல் போன் ஆனாலும் பார்த்து ,கேட்டு உபயோகிக்கவும்

Download As PDF

7 comments:

சாதிக் அலி said...

Microwave cooking is less efficient than conventional ovens in destroying Salmonella and Listeria, and in the case of cook-chill meals, manufacturers' recommended cooking periods may not be adequate.

எட்வின் said...

தகவலுக்கு நன்றி அன்பரே

prabhadamu said...

நல்ல தகவல் நண்பரே!

prabhadamu said...

நல்ல தகவல் நண்பரே! நான் இதையும், மற்ற நல்ல தகவலையும் என் தளத்தில் போடலாமா? உங்கள் அனுமதி தேவைப் படுகிறது.

முடிந்தால் என் தளத்தில் சொல்லவும். என் தளம் ஆழ்கடல் களஞ்சியம்.

Sathik Ali said...

''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.''

மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்

Sathik Ali said...

If you do use a microwave, never wrap anything in plastic! You can create carcinogens in the food.

The Russian government issued a warning about the health hazards microwave ovens can have on the human body and the environment.


Foods that are frozen and meant to be heated in a microwave were found containing toxic chemicals such as BPA, polyethylene terpthalate, benzene, toluene, and xylene.

The plastic containers used to heat these microwave meals have been found to release the carcinogens along with other harmful toxins into your food which is then absorbed by your body.

In a Swiss clinical study, researchers found that blood changes in individuals who consumed microwaved milk and vegetables.

They found that, with the eight participants in the study, their red blood cells decreased while white blood cells increased, along with their cholesterol levels.Healthy-and-Unhealty-Live-Blood-Cells-Anaylasis

The non-ionizing radiation of the microwave can affect changes in your blood and your heart rate.

Researchers tested 22 freshly frozen human milk samples for lysozyme activity and antibodies by heating the samples for 30 seconds on either a low or high power setting.baby-breast-milk-bottle

Breast milk microwaved at high temperatures was found to have greater E coli growth — 18 more times than un-microwaved breast milk.

Microwaving at low temperatures also dramatically decreased lysozyme activity and also promoted the growth of harmful bacteria for babies.

Microwaves Can Change the Makeup of Your Blood

In a Swiss clinical study, researchers found that blood changes in individuals who consumed microwaved milk and vegetables.

They found that, with the eight participants in the study, their red blood cells decreased while white blood cells increased, along with their cholesterol levels.Healthy-and-Unhealty-Live-Blood-Cells-Anaylasis

The non-ionizing radiation of the microwave can affect changes in your blood and your heart rate.

Microwaves Can Change Your Heart Rate

A study conducted by Dr. Magda Havas of Trent University found the levels of radiation emitted by a microwave affect both heart rate and heart rate variability.

Microwaves can produce effects on your body instantly due to the 2.4 GHz radiation — the frequency of radiation emitted by microwave ovens.imgres-1

These levels are within federal safety guidelines but that doesn’t really mean anything. We are still getting daily doses of radiation.

It’s been reported that you can experience a dramatic change in heart rate, have an irregular heart beat and chest pains if you regularly eat microwaved food.

With all these studies, and even just the sheer knowing that a higher level of radiation is coming out of a device in our homes, it seems like a good idea to throw them out. Or at least not use them as much.

Sathik Ali said...

ம் இதையும் படித்து விட்டு முடிவுக்கு வாருங்கள்
http://www.skepticink.com/health/2013/12/21/microwave-dangers-top-5-claims-vs-evidence/