 ஒரு துறையில் மேதையாவதற்கு தேவை என்ன? பெரிதாக ஒன்றும் தேவையில்லை. எந்த துறையை தேர்வு செய்கிறீர்களோ அந்த துறையில் பயிற்சி பெறுவதற்காக 10 ஆயிரம் மணி நேரம் தியாகம் செய்தால், நீங்கள் மேதை தான். ஜெர்மனியில் நடந்த ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 ஒரு துறையில் மேதையாவதற்கு தேவை என்ன? பெரிதாக ஒன்றும் தேவையில்லை. எந்த துறையை தேர்வு செய்கிறீர்களோ அந்த துறையில் பயிற்சி பெறுவதற்காக 10 ஆயிரம் மணி நேரம் தியாகம் செய்தால், நீங்கள் மேதை தான். ஜெர்மனியில் நடந்த ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.பெர்லின் மியூசிக் அகடமியில் இது தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு துறையில் ஒருவருக்கு ஒரு சதவீதம் ஆர்வம் இருந்தால் மட்டுமே போதுமானது. மீதம் 99 சதவீதம் அதை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டினால், அவர் அத்துறையில் மேதை தான். அதாவது, 10 ஆயிரம் மணி நேரம் அவர் அத்துறையில் பயிற்சியை தீவிரமாக்கினால், மேதையாகி விடுகிறார். இந்த ஆய்வை பொறுத்தவரை, திறமை மட்டுமின்றி, அதிர்ஷ்டமும் முக்கியமான இடத்தை பெறுகிறது. திறமை இருப்பவர்கள் சிறப்பானவர்களாகவும், அதிர்ஷ்டமும் இணையப்பெற்றவர்கள் திறமைசாலிகளாகவும் மாறுகின்றனர்.
குழந்தைகளில் ஐந்து வயது கொண்ட குழுவினர் இந்த ஆய்வுக் காக எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் ஒரு வாரத்துக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை பயிற்சி எடுத்துக் கொண்டனர். அவர்கள் வளர, வளர, அவர்கள் பயிற்சி பெறும் நேரமும் அதிகரித்துக் கொண்டே போனது.அவர்களது 20 வயதில் அவர்கள் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் மணி நேரம் பயிற்சியை முடித்திருந்தனர். சாதாரணமான திறமை கொண்டவர் கள் 8,000 மணி நேரம் மட்டுமே பயிற்சியை முடித்திருந்தனர். அதிக திறமை வாய்ந்தவர்களோ 10 ஆயிரம் மணி நேரத்துக்கு அதிகமாக பயிற்சி முடித்திருந்தனர். அவர்கள் அத்துறையில் மேதாவிலாசத்தோடு காணப்பட்டனர்.
இவ்வாறு அதிக பயிற்சி முடித்தவர்களின் மூளை, வயலின் தொடர் பான அனைத்து விஷயங்களையும் அத்துப்படியாக நினைவில் வைத்திருக்கிறது.இதேபோல, மல்காம் கிளாட் வெல்ஸ் எழுதிய, "அவுட்லையர் ஸ்தி ஸ்டோரி ஆப் சக்ஸஸ்' என்ற நூலிலும், வெற்றிக்கு அடிப்படையாக பயிற்சியே முக்கியம் என்று கூறப் பட்டுள்ளது.ஹம்பர்க்கில், நான்கு பேர் கொண்ட இசைக்குழு, வாரத்தில் ஏழு நாட்களும் இரவு நேரத்தில் 8 மணி நேரமும், இசை விருந்து அளித்து வந்தனர். அந்த நேரத்தில் அவர்களது இசை நிகழ்ச்சி மிகப்பெரும் புகழ்பெற்றது.இதற்கு முன் அவர்கள் பேண்ட் வாத்தியம் வாசித்து வந்தனர். ஆனால், அதைப் போல, அவர்கள் 1,200 மடங்கு இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்டதால், பேண்ட் வாத்தியத்தை விட இதில் மிகப்பெரும் புகழ் பெற்றனர். எனவே, எந்த ஒரு துறையிலும் மேதையாக வேண்டுமானாலும், தொடர் பயிற்சி அவசியம். குறைந் தது 10 ஆயிரம் மணி நேரம் பயிற்சி பெற்றால், அவர் அக்மார்க் குத்திய மேதையாவது எளிது.
=----தினமலர்-----------------ஜனவரி 08,2009-------------------------------
கருத்துகள்