கடந்த வாரம் எனது தம்பியின் 3 வயது குழந்தைக்கு லேசான காய்ச்சல் அடித்தது. உடனே நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். மருத்துவர் சோதித்து விட்டு "குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் தொற்றி ஆபத்தான நிலையில் இருக்கிறது, சிறிது நேரம் போனால் மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் வரும் "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி அட்மிட் செய்த்திருக்கிறார்கள். உடனே குளுகோஸ் ட்ரிப் போட்டு விட்டார்கள். தொடர்ந்து ஒரே நாளில் எக்ஸ்ரே, பல முறை குருதி சோதனை, ஸ்கேன், மலம், சிறுநீர் சோதனை, என கமிஷன் கிடைக்கும் எல்லா சோதனைகளும் செய்தார்கள். இதற்கு தூரத்திலுள்ள அவர்கள் பரிந்துரைத்த ஆய்வகத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. வெறும் காய்ச்லோடு வந்த குழந்தை பேச்சு மூச்சில்லாமல் மிகவும் தளர்ந்து விட்டது. பயம் ,அழுகை மற்றும் பரிதவிப்பில் தாய் மட்டுமே அருகில்.
தகவல் அறிந்து நான் போய் பார்தேன். டெங்கு கிருமிகளுக்கான குருதி சோதனை ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தால் டெங்கு இல்லை என்று சொல்கிறது. பிலேட்லெட் எண்ணிக்கை நார்மல் என்று மற்றொரு ரிபோர்ட் சொல்கிறது ஆனால் மருத்துவரோ "ரிபோர்ட் சரியில்லை டெங்கு தான், ஆபத்தான நிலமை, இரத்தத்தில் பிலேட் லெட்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்" என்று சொல்கிறார்.
காலையிலும் மாலையிலும் பதினந்து நிமிடம் மட்டுமே மருத்துவமனைக்கு மருத்துவரின் வருகை. பகலில் மருத்துவமனை போலிருந்தது இரவானதும் ஒரு விடுதி போல் தோன்றியது. மூன்று நிலை மருத்துவமனை முழுதும் வெறிச்சோடி எல்லா அறைகளிலும் பூட்டு தொங்கியது. இரண்டாம் தளத்தில் நம்மைத்தவிர இன்னும் ஒரு குழந்தையும் பெற்றோரும் மட்டுமே. அங்கேயும் இதே கதை தான். ஒரே ஒரு ட்யூட்டி நர்ஸ். இரவு 9 மணிக்கு வெளி கேட்டில் ஒரு பெரிய பூட்டு. உணவு வங்கக்கூட வெளியே செல்ல முடியாதபடி. முதல் நாளிலே அட்வான்ஸாக நாலாயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். ஒரு மருத்துவமனைக்கான எந்த ஒரு வசதியும் அங்கே இல்லை. இரவு குழந்தை சிறு நீர் கழிக்க எழுந்தான். உடனே ட்ரிப்புக்காக போடப்பட்ட ட்யூப் வழி இரத்தம் ரிவர்சில் வேகமாக வரத்தொடங்கியது. உதவிக்கு எந்த நர்சும் அங்கே இல்லை. எப்படியோ சமாளித்தேன். நடுக்காட்டில் மாட்டிக் கொண்டது போல் தோன்றியது. மருத்துவமனையும், மருத்துவரின் பேச்சும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மறு நாள் காலை முதல் வேலையாக கேட்ட பணத்தை கட்டி(எங்கே போய் முட்டிக்கொள்ள?), எல்லா ரிப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் கேட்டுவாங்கி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு அட்மிட் செய்தேன். மருத்துவர் நன்றாக சோதித்துப் பார்த்துவிட்டு. குழந்தைக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் இத்தனை டெஸ்ட் எதுவும் தேவையில்லை. எல்லா டெஸ்டு ரிஸல்டும் நார்மல் தான். பார்த்தாலே தெரிகிறது. ஒரு நாள் ட்ரிப் போட்டால் போதும். பயப்பட வேண்டாம் என்றார். சொன்னபடி செய்து மறுநாள் குழந்தையை நலமாக வீட்டுக்கு கொண்டு வந்தோம்.
சில நல்ல மருத்துவர்களிடையே ஒநாய்கள் போல் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு சில மருத்துவமனைகள். வைரஸ்களை விட கொடியதாய் சில மருத்துவர்கள்.அலையில் தப்பி உலையில் விழுவதை போன்று கொள்ளை நோய்களிடமிருந்து தப்பிக்க கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
யார் இதற்கு மருந்து கொடுப்பது? பொதுவாக முறைகேடாக சம்பாதிப்பவர்களிடம் கொள்ளை பணம் சேருகிறது. கொள்ளை பணம் இருப்பவர்களுக்கு மருத்துவப்படிப்பு எளிது. உயர் கல்விக்காக பெரும் பணம் செலவழிப்பவர்கள் மனசாட்சியை அடகு வைத்து அதைக்கொண்டு பெரும் பொருளீட்டவே விரும்புவார்கள். எனவே ஏழைகளும் , நடுத்தர மக்களும் இத்தகைய வியாபார நோக்கம் கொண்ட பெரிய மருத்துவ மனைகளை தவிர்த்து ஆரோக்கிய விஷயங்களில் போலி கவுரவத்தை விடுத்து சிறந்த மருத்துவர்களை கண்டறிந்து மருத்துவம் செய்வது நல்லது. அரசும், உலக ஆரோக்கிய மையமும் மக்களின் ஆரோக்கியம் காக்க எத்தனையோ கோடிகள் வாரி இறைத்தாலும் எத்தனையோ பேர் அதன் பலனை அனுபவிக்கும் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள் என்னாலானது இதுபோன்ற மோசடியை பதிவு செய்வது, யாராவது விழித்துக் கொள்ளட்டும்.

கருத்துகள்
சரியாகச் சொன்னீர்கள நண்பரே...
என்னவென்றால், "க்ளிமேப்ரிடே" என்ற இந்த மருந்து சர்க்கரை நோய்க்கு
கொடுக்கப்படும் ஒரு உப்பு. பத்து மாத்திரை கொண்ட ஒரு பட்டியின் விலை ரூ 2 .ஆனால் "Amaryl " என்ற கம்பெனி பிரண்டு பெயரில் வரும் இதே மருந்தின் விலை ரூ.125.
"Cetrizine" எனப்படும் ஒரு மருந்து சாதாரண ஜலதோஷத்துக்கு தரப்படுவது. இதன் விலை பத்துக்கு ரூ.1.20 . ஆனால் "Cetzine" என்ற பெயரில் இது ரூ.35 க்கு விற்க்கபடுகிறது. டாக்டர் அதைத்தான் எழுதுகிறார்.
ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் “streptokinase” அல்லது “urokinase” என்ற மாரடைப்புக்கான ஊசி, மார்க்கெட்டில் பிரண்டு செய்யப்பட்டு ஐயாயிரத்துக்கு விற்கபடுகிறது.
ஏழைகள் எப்படி இந்த மருந்துகளை வாங்க முடியும்..டாக்டர்கள் மருந்துகளின் பொது பெயரை எழுதி பழக வேண்டும்?
இது அமீர்கான் தன்னுடைய column ஒன்றில் ஹிந்துவில் எழுதியது..
மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்டதை தருகிறார்.
1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.
உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.
2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.
சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.
3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.
4. நெஞ்சுவலி என்று போனால்,
சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.
மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது.
சிசேரியன் செய்யப்பட்டதற்கான காரணம் விநோதமானது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மருத்துவமனையில்பணியாற்றும் மயக்கமடைய செய்யும் மருத்துவ நிபுணர் (Anaesthetist) பத்து நாட்களுக்கு விடுமுறையில் செல்ல இருந்ததால், பிரசவங்கள் முன்கூட்டியே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவ அதிகாரியை இது சம்பந்தமாக விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடூரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால், ஆலப்புழா அரசு மருத்துவமனையில்48 மணி நேரங்களில் 4 மருத்துவர்கள் 21 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். காரணம் என்ன தெரியுமா? இந்த மருத்துவர்கள் தங்களுக்கு ஈஸ்டர் (புனித வெள்ளி) விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரசவங்களை முன்கூட்டியே சிசேரியன் மூலம் செய்துள்ளனா;.
இன்று அரசாங்க மருத்துவமனை, ஏதுமற்ற ஏழைகள் மட்டும் உயிருக்குத் துணிந்து போகும் இடமாக்கப்பட்டுள்ளது (சில விதிவிலக்குகள் உண்டு).
ஆனால், தனியார் மருத்துவமனைகளோ, வீதிகள் தோறும் புற்றீசல்போலப் பெருகியுள்ளன.
ஊடகங்களில், பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்வுப் பொருள்களின் விளம்பரங்களோடு, மருத்துவமனை விளம்பரங்களும் போட்டி போடுகின்றன. மருத்துவமனைகள் ஆடித் தள்ளுபடி அறிவிக்காததுதான் பாக்கி.
ஒரு நோயாளியிடம் பிரபல மருத்துவர், குறிப்பிட்ட இடத்தில் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த நோயாளி, கட்டணம் குறைவான இடத்தில் ஸ்கேன் எடுத்துக் கொண்டு, அதை மருத்துவரிடம் காட்டுகிறார்.
மருத்துவர் முகத்தில் எரிமலை வெடிக்கிறது. "நான் சொன்ன இடத்தை விட்டுவிட்டு எங்கோ போய் எடுத்துள்ளீர்கள். இது உயிர் விஷயம், இதிலா கணக்குப் பார்ப்பது? பாருங்கள் தெளிவாக இல்லை. நான் சொன்ன இடத்தில் போய் எடுத்து வாருங்கள்' என்று விரட்டுகிறார்.
நோயாளியோ, தான் ஸ்கேன் எடுத்த இடத்திற்குக் கோபமாகச் சென்றபோது, அவர் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த அங்கிருந்த பொறுப்பாளி, "டாக்டர் ஸ்கேன் தெளிவாக இல்லை எனத் திட்டியிருப்பாரே' என்று கேட்க, ஆச்சர்யமான அந்த நோயாளி "ஆமாம்' என்கிறார்.
"அதே ஸ்கேனை இதோ இந்த கவரில் போட்டுத் தருகிறேன். எடுத்துப் போங்கள்' என்று கூறி மருத்துவர் பரிந்துரைத்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட உறையில் அதை இட்டுத் தருகிறார்.
மீண்டும் மருத்துவரிடம் போன நோயாளியிடம் மருத்துவர் சொல்கிறார்:
"பார்த்தீர்களா. இது எவ்வளவு தெளிவா இருக்குன்னு. முன்னாடியே இங்கே போயிருந்தா உங்களுக்கு வீண் செலவு ஏற்பட்டிருக்காதல்லவா?'
எல்லா மருத்துவர்களுமே இப்படியா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், கணிசமான தொகையினர், இப்படித்தான் இயங்குகிறார்கள் என்பது உண்மை.
மருந்து நிறுவனங்கள், மருத்துவர்கள் நடத்தும் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை, மேசை, நாற்காலி, படுக்கை உள்பட வாங்கித் தருகின்றன.
கருத்தரங்குகளுக்கோ, பணியை முன்னிட்டோ, அல்லது இன்பச் சுற்றுலாவாகவோ, மருத்துவர் வெளியூர்கள் அல்லது வெளிநாடுகள் செல்லும்போது, விமானப் பயணம், நட்சத்திர விடுதிகளில் தங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை மருந்து நிறுவனங்கள் மனமுவந்து செய்து தருகின்றன.
நூற்றுக்கு நூறு தொடங்கி நூற்றுக்கு ஐநூறு தாண்டி, சலுகை மருந்துகளைத் தருகின்றன. மருத்துவர் தனது மருத்துவமனையிலேயே மருந்தகமும் வைத்திருந்தால் நோயாளிகள் சுரண்டப்படும் விதம் சொல்லி மாளாது.
மருந்து நிறுவனங்கள் சில மாத(ா)ந்திர கையூட்டுகளை மருத்துவர்களுக்கு அளிக்கின்றன. இப்படி ஏராளமான சலுகைகளும், லஞ்சங்களும், தாராளமாகத் தரப்படுகின்றன.
இதற்கு மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு அந்நிறுவனத்தின் மருந்துகளை, அதிகமாக எழுதி, நோயாளிகளை வாங்கச் செய்ய வேண்டும்.
சில மருத்துவர்கள் சிறிய நோய்க்கும் பெரிய பட்டியலே எழுதுவார்கள். காரணம், அவர் பல நிறுவனங்களுக்கும் கடமைப்பட்டவர். அதிக மருந்துகள் உட்கொள்வதால், குடலில் அமிலப் பாதிப்பு வருமல்லவா அதற்கும் சேர்த்து ஒரு மருந்தை எழுதி விடுவார்.
மருத்துவர் தந்த அதீத மருந்துகளின் பக்க விளைவு மெதுவாகத் தெரியும்.
---முனைவர். ஜெ. ஹாஜாகனி
Thanks
Dhinamani 09 October 2014
“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.
‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.
இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம்.
ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.
1. எய்ட்ஸ்
2. நெஞ்சுவலி
3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்
16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
17. மூளைக்காய்ச்சல்.
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து (தைராய்டு) வீக்கம்
24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்
34. இரத்தப் புற்றுநேரய்.
35. வெண் குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
37. மூளை வளர்ச்சிக்குறைவு.
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்க வாதம்
41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த வயதில் தலை நரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்குவாய்
50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.
ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.