25 July 2009

பயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை தேடிஎடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:
------------------------------------------
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/

planetebook.com/  ---- Classic literature for download
e-book.com.au/freebooks
www.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/

gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/

free-ebooks-canada.com/
book-bot.com/
witguides.com/
2020ok.com/
manybooks.net/

globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!

http://www.freebookspot.com/
http://obooko.com/
http://www.bookyards.com/
http://www.onlinefreeebooks.net/ - general books,computer,technical,user manuals and service manuals available.
http://digital.library.upenn.edu/books/
http://e-library.net/


cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.
bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.
TAMIL E-BOOKS DOWNLOADS
தமிழ் முஸ்லிம் நூலகம்
knowledge at fingertips
tamilvu.org- தமிழ் இணைய பல்கலை கழக நூலகம்

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
Electronics Service manual,data-sheets,Schematic diagram 

கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
http://ebooks-library.blogspot.com/ 
http://www.zillr.org/
http://freecomputerbooks.com/

மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

EncyclopaediaBritannica 29 Volumes in djvu format. Use djvu viewer program to view the files

Maran Collects & Shares -Software related EBooks, Personality Development Books, Audiobooks, IT Certification Materials with Test Engines, Software Video Tutorials, Encyclopedia of All Kinds, Rare Collection of Tamil Songs, Tamil Devotional Songs, Indian Instrumentals & Many More.

http://www.magazinesdownload.com/   -Download Popular magazines from this site.

http://www.booksshouldbefree.com/  Download Audio books as mp3 files

இனி படிச்சு கிழிக்க வேண்டாம்."கிளிக்"கி படிங்க.

Updated:27/jan/2011.
If links not working or any site not  "free" please let me know

Download As PDF

11 July 2009

பி.இ. நன்கொடை: புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி

சென்னை, ஜூலை 9: பி.இ. படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதி செய்யப்பட்டுள்ளது.5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவில் புகார் அளிப்பதுடன் மாவட்ட அளவிலும்புகார் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வி முதன்மைச்செயலாளர் கே. கணேசன் கூறினார்.

பி.இ. படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பிரிவு கவுன்சலிங் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் சுமார் 1 லட்சம் பி.இ. இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கட்டணம்: அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் கல்விக் கட்டணம் ரூ.7,500.
அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.8,500.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் குழு நிர்ணயித்துள்ளது.இதன்படி,
தரச் சான்று பெற்ற பாடப் பிரிவுக்கு கல்விக் கட்டணம் ரூ.40ஆயிரம்;
தரச் சான்று பெறாத பாடப் பிரிவுக்கு கல்விக் கட்டணம் ரூ.32,500.

எச்சரிக்கை: சுயநிதிக் கல்லூரிகள், நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும். கல்லூரியின் பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அங்கீகாரம் ரத்து: அரசின் எச்சரிக்கையை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கவும், புகார்களின் மீது கல்லூரிகளில் சோதனை செய்யவும் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு சட்டப்படி அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கையின் போது,அதிகக் கட்டணம் கேட்கும் கல்லூரிகள் மீது மாநிலம் முழுவதும் புகார் அளிக்க வசதி இருந்தது.இந்த ஆண்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், குழுவிடம் மட்டும் தான் புகார் அளிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு பதில் அளித்து உயர்கல்வி முதன்மைச் செயலர் கே. கணேசன் கூறியதாவது:
அதிகக் கட்டணம், நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது ஆய்வுக் குழுவில் மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மாநிலம் முழுவதும் புகார் செய்யலாம். புகார் செய்ய கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என்றார்.

தமிழகம் முழுவதும் வசதி: இதன்படி, நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது தமிழகம் முழுவதும் புகார் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். பேக்ஸ் எண்கள் அடைப்புக் குறிக்குள்.

1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் -
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை: 044-22351018 (044 22201514)

2. ஈரோடு, கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல்-கோவை அரசு பொறியியல் கல்லூரி :0422-2432221/436 (0422-2455230)

3. சேலம், நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர்-சேலம் அரசு பொறியியல் கல்லூரி :0427-2346157/102 (0427-2346458)

4. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை,சிவகங்கை, நாகப்பட்டினம்-காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி:
04565-224535/225349 (04565-224528)

5. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், தேனி-திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி:
0462-2552448/50 (0462-2554012)

6. தர்மபுரி, கிருஷ்ணகிரி-பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி :
04343-266101/067 (04343-265875)

7. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்-தந்தை பெரியார் ஈ.வே.ரா.அரசு பொறியியல் கல்லூரி :
0416-2267498/762 (0416-2267498).

----எல். சரவணன்:
நன்றி: தினமணி நாளிதழ்

Download As PDF