25 February 2009

புகை பிடிப்பதால் 25 நன்மைகள்

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
 1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.
 2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
 3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.
 4. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.
 5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
 6. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
 7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.
 8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
 9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
 10. சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
 11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
 12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.
 13. இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
 14. வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.
 15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
 16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
 17. புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.
 18. மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.
 19. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.
 20. வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.
 21. சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.
 22. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
 23. மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
 24. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.
 25. நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

Download As PDF

24 February 2009

கண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா?

நாம் கண்ணால் காணும் எல்லா காட்சிகளும் அப்படியே மூளையில் பதிவது
இல்லை. காணும் காட்சிகளை மூளை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பது தான் முக்கியம். சில காட்சிகள் கண்ணை ஏமாற்றி விடும். ஆனால் சில கருத்தை ஏமாற்றி விடும். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதுக் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பார்கள். ஆனால் பலரிடம் தீர விசாரிக்கப் போய் என்னை மிகவும் குழப்பியது இந்த படம். யான் பெற்ற கன்ஃப்யூசன் பெறுக இவ்வையகம். உங்களிடம் எளிமையான ஒரு கேள்வி சரியான பதிலை உடனே பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்.
படத்தில் ஒய்யாரமாக சுழன்றாடும் இந்த பெண் எந்த பக்கமாக சுழல்கிறாள்? வலமிருந்து இடமா? இடமிருந்து வலமா?
அல்லது இந்த பெண் தரையில் ஊன்றும் கால் வலது காலா ? இடது காலா?

நன்றாக பார்த்து பதில் சொல்லுங்கள். பதில் சொல்லும் சொல்லு முன் கண்ணை மூடி யோசித்து விட்டு மீண்டும் பார்த்து பதில் சொல்லுங்கள்.
சந்தேகமிருந்தால் நண்பர்களையும் கூட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

மனைவியிடம் அபிப்பிராயத்தை கேட்டு முதன் முதலாக கருத்து வேறுபாடு கொண்டு இதுவரை காப்பற்றி வந்த நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். " அந்த படத்தில்அப்படி என்ன தான் இருக்குகிறது? கிறங்கிப் போய் இருக்கிறீகள்" என்ற பேச்சுகளும் கேட்க வேண்டாம்.
பின் குறிப்பு: இது ஒரு சாதாரண GIF ஃபைல் தான் . கொஞ்ச நேரம் இப்படி கொஞ்ச நேரம் அப்படி திரும்பும் படி புரோகிராம் செய்யப்படவில்லை.

Download As PDF

21 February 2009

நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்?

மிகவும்     நெருங்கியவர்கள் நேசமானவர்களின் இழப்பை ஏன் தாங்கிக் கொள்ள முடியாமல் இதயம் உடைந்து போகிறோம். வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்குட்டி செத்தால் கூட மனம் உடைந்து போவோர் எத்தனை? உண்மையில் நெருங்கியவர்கள் மரணம் நம்மை எப்படி பாதிக்கிறது ? எதை நாம் இழக்கிறோம் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை சுயநல வாதியா நாம்?

எது நம்மை வருந்த செய்கிறது?: ஓர் உயிர் போய் விட்டதே என்ற வருத்தமா? இல்லை. தினமும் எவ்வளோ உயிர்கள் போய்கொண்டும் வந்து கொண்டும் தான் இருக்கிறது. தினம் எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீன், ஆடு, மாடு, கோழி அடித்து சாப்பிடுகிறோம். இயற்கையின் நியதியிலே உயிர்கள் உணவுக்காக மற்ற உயிர்களை கொன்று சாப்பிடுவது குற்றமாக எழுதப்படவில்லை. மனித உயிர் மதிப்பு மிக்கது என்பதால் சோகம் அதிகமாக இருக்கிறதா?

யாருடைய மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது?: இது நாள் வரை வீட்டில் எரிந்து கொண்டிருந்த பல்ப் ப்யூஸ் ஆகி விட்டது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதை தூக்கிப் போட்டு விட்டு வேறொன்றை எடுத்து மாட்டிக் கொள்வோம். ஒரு பல்பின் சாவு நம்மை அதிகம் பாதிக்காததற்கு காரணம் 1) பல்பு உயிரற்ற பொருள் 2)அதற்கும் நம் இனத்தோடும் அதிக பந்தமில்லை அதாவது ஒரு பல்போடு நம்மை அதிகம் பிணைத்துக் கொள்வதில்லை.3)மலிவானது4)அதற்கு பதில் இன்னொரு பல்ப் அதே வேலையை செய்யும்.

ஆனால் சில உயிரற்ற சில பொருட்களோடு நாம் அதிகம் உறவாடுகிறோம் . பந்தப்படுத்திக் கொள்கிறோம் அவற்றின் இழப்பு நம்மைப் பாதிக்கும். உதரணமாக நம் பல வருடம் காலில் கிடந்த செருப்பு வார் அறுந்து விட்டது, எனக்கு பிடித்த சட்டை கிழிந்து விட்டது, எனக்கு பழகிய மொபைல் தொலைந்து விட்டது. பல வருடம் உபயோகப்பட்ட வாகனம் தீப்பிடித்து விட்டது. ஆசையாய் கட்டிய வீடு பூகம்பத்தில் இடிந்து விட்டது என்றால் கவலை தானே. தாத்தா காலத்து சேர்,பூர்வீக வீடு என்று ஞாபகங்களை அழியாமல் பாதுகாக்கிறோமில்லையா. இப்படிப் பட்ட பொருட்கள் நமக்கு பயன்பட்டு நம் ஞாபகங்களிலும் நிறைந்திருப்பதால் அதன் முற்றுப் புள்ளியை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாமல் சோகம் வருகிறது. காருக்கும் செருப்பு வாருக்கும் ஒரு உயிர் இருந்ததே அது போய் விட்டதே அது சாகும் போது அதற்க்கு வலித்திருக்குமே என்று கவைப்படுவதில்லை. இவ்வளவு நாள் நமக்கு பழக்கமாக இருந்து பட்ட பயன் முடிந்து விட்டதே என்ற நினைப்பு தான் சோகத்துக்கு காரணம்.

வீட்டில் எப்போதும் நம்மைச்சுற்றி வந்து வாலாட்டிய நாய் குட்டி செத்துப் போனால் அதிக சோகம் இருக்கும் ஆனால் மட்டன் பிரியானி சாப்பிடும் போது பிரியானியான ஆட்டைப் பற்றி சோகம் வருவதில்லை. தூரத்து நாடுகளில் மனித உயிர்கள் கொத்து கொத்தாக செத்தால் அது செய்தி. அதுவே பக்கத்து தெரு பாண்டி செத்தால் இரண்டு நாள். அடுத்த வீட்டில் மண்டயைப் போட்டால் ஒரு வாரம். நண்பன் செத்தால் பெரும் சோகம் எதிரி செத்தால் களிப்பு. இந்திரியதுளியில் எததனையோ உயிர்கள் இருக்கிறது. அது எவ்வளவு வேஸ்ட் ஆனாலும் கவலையில்லை அதுவே கருவாகி கலைந்தால் கொஞ்சம் சோகம் பிள்ளையாக பிறந்து வளர்ந்து உள்ளத்தில் பல நினைவுக்ளை எழுதி விட்டு பிரிந்து போனால், பயங்கர சோகம். மகனை வைத்து எவ்வளவோ கற்பனைகள் வளர்த்து வைத்திருப்பார்க்கள். வயதான பெற்றோர்களை இழப்பதை விட சோகம். ரொம்ப வயதான தாத்தா பாட்டி இறந்தால் சிலர் சந்தோசக் கூத்தாடுவார்கள். ஏனென்றால் அவர்களால் இனி பயன் இல்லை எப்படா கட்டில் ஒழியுமென்று காத்து கிடப்பார்கள். சம்பாதிக்கும் நிலையிலுள்ள மகன், குடும்பத்தை கட்டிக் காக்கும் கணவன், சுக துக்கங்களையெல்லாம் பகிர்ந்து கொண்ட மனைவி, நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள், இறந்தால் கடும் துக்கம் தான்.

தனி உலகங்கள்:
நாம் காணும் இந்த உலகம் ஒரே உலகமல்ல. ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம். உங்கள் உலகம் வேறு என் பார்வையில் உலகம் வேறு.எனக்கு முக்கியமாகப்படுவது உங்கள்ல் உலகத்தில் அற்பமானதாக இருக்கலாம்.என் உலகத்தை உருவாகுவது நான் அதை என்னை சுற்றியுள்ள பொருட்கள் மனிதர்கள், விஷயங்கள், உறவுகள் . அதில் என் தேவைகள் அடங்கியிருக்கின்றன. என் மதம் ,என் மொழி, என் நாடு இவையெல்லாம் சேர்ந்தது தான் நான். இவை என்னை பாதிக்கின்றன, நான் அவற்றைப் பாதிக்கிறேன். எதைக் கொண்டு என் உலகத்தை அமைத்துக்கொண்டேனோ அவற்றில் உண்டாகும் மாற்றங்கள் என் உலகத்தில் மாற்றம் உண்டாகிறது. சாதிக் அலி என்ற என் பெயரை இழந்தால் நான் யாராக அறியப்படுவேன்.எனவே நெருங்கியவர்கள் மரணம் என் உலகில் ஒர் காலி இடத்தை உருவாக்கும். அந்த வெறுமை என்பது யாரை இழந்தேனோ அவரால் அனுபவித்த பயனின் இழப்பு தான். அந்த இடம் சிறியதாக இருந்தாலோ. எளிதில் அந்த இடத்தை நிரப்பும் வேறொன்றுடன் உள்ளம் பந்தம் கொண்டலோ அந்த வெறுமை நீங்கி விடும்.

சிலர் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளாமலேயே பிடிவாதமாக இருப்பதால் தங்கள் உலகத்தில் ஏற்பட்ட வெறுமை நிரப்பப் படாமல் இருக்கும். அவர்கள் அப்படி தங்களையே ஏமாற்றக்காரணம். அவர்களது உலகத்தின் பெரும்பகுதி , இழந்து போன அந்த உறவால் ஏற்பட்ட நினவுகளால் அமைத்தது தான் காரணம். இது தான் டிப்ரெசன் போன்ற நிலமை. அவர்களது மொத்த உலகமும் சிதைந்து தன்னுணர்வே ஆட்டம் கண்டிருக்கும். எவ்வளவு சீக்கிரம் வெறுமைகளை புதிய பந்தங்களால் செப்பனிடுகிறாரோ அவ்வளவு சீக்கிரம் சோகத்திலிருந்து மீண்டு வர முடியும். நெருங்கியவர் மரணம், காதல் தோல்வி, திருமண முறிவு எல்லவற்றுக்கும் இது பொருந்தும். இந்த சோகத்திற்கு காரணம் நிச்சயம் சுயநலம் தான்.

ஒரு நாணயத்தை கண்ணுக்கு மிக அருகே வைத்துப் பார்த்தால் அது உலகத்தை மறைக்கும். தூரவைத்துப் பார்த்தால் நம் அழகிய உலகில் அது ஒரு புள்ளி மட்டுமே சோகங்களும் அப்படித்தான்.

ஞானிகளை பொறுத்தவரை இந்த உலகமும் அதன் பந்தங்களும் மாயை என்று தங்களை அதோடு பிணைத்துக் கொள்ள மாட்டர்கள. இழப்பும் அவர்களுக்கு இல்லை. இயற்கையை பொறுத்தவரை உயிர் அனந்தம். உயிர் அழிவதில்லை, அழிக்கவும் முடியாது என்பார்கள்

இனி மரணத்திற்கான காரணங்கள் தான் சிலருக்கு வலி தருமே ஒழிய மரணம் என்பது உண்மையிலேயே மரணிப்பவருக்கு எந்த வித துன்பமும் தருவதில்லை. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பது என்னொரு பதிவு விஷயம்.
-----------------------------------------------------------------------------------------------------------------

Alan Watts - Acceptance of Death
Download As PDF

19 February 2009

எப்படியெல்லாம் பேசக்கூடாது?

மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான். நாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும்.

மனதை தகர்க்கும் பேச்சு:
குழந்தைகள் கேட்க நேரும் வார்த்தைகள் ,டிவி,சினிமாக்களின் வசனங்கள் அவனை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று யார் கவலைப்படுகிறார்கள்.
"என் மகன் சாப்பிடுவதே இல்லை" என்று சொல்லி கவலைப்படும் அன்னயின் சிம்பதியை பெற வேண்டி அவன் சாப்பிட அடம் பிடிப்பான்.
"உன் தம்பியப் பாரு எவ்வளவு நல்லா படிக்கிறான் நீ என்னடா மக்கு, சோம்பேறி மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று ஒரு தாய் அடிக்கடி திட்டுவதே அவனை மக்கு பிள்ளையாக்கி விடும்.
"மூணு கண்ணன் வரான், பூச்சாண்டி வரான் சாப்பிடு" என்று பயப்படுத்துவது அவர்களை கோழையாக்கும்.
"அவன் பிடிவாதக்காரன்","தலை போனாலும் அவன் பால் சாப்பிட மாட்டான்","சோம்பேறி" ,"முட்டாள்,"தூங்கு மூஞ்சி" என்று திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால். அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள். எதிர் மறையான பேச்சுக்கள் தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.சுய மரியாதயை பலவீனமாக்கும்.

நோயாளியை பார்க்கப் போகும் போது
"அட கடவுளே உனக்கா இப்படி வரவேண்டும்?"
"எதற்கும் ஸ்கேன் எடுத்துப் பாரு ப்ரெய்ன் ட்யூமராயிருக்கப் போகுது"
"இப்படித் தான் என் மாமனாரின் தம்பி பையனுக்கு லேசா வயித்து வலிதான் வந்தது, மூணாம் நாளே ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்து செத்துப் போனான், கேன்சராம்"
"நெஞ்சு வலி வந்தா இங்க்லீஸ் டாக்டரிடம் போனால் அறுத்து தைத்து விடுவான். பெரியப்பாவுக்கு அட்டாக் வந்தபோது நம்மூர் வைத்தியருகிட்ட ஒரு தடவை தான் கஷாயம் குடிச்சாரு அப்புறம் வரவே இல்லை"
தாயத்து கட்டிக்கோ, காத்து கருப்பு அடிச்சிருக்கும், சாமி குத்தம், அம்மன் விளையாட்டு என்று எத்தனையோ அபத்தங்களை உளறிக் கொட்டி நோயாளியின் BP எகிறச்செய்து குழியில் தள்ளி மண்ணை மூடுகிறார்கள்.
"என்ன உடம்புக்கு இளைச்சிருக்கே, அன்னிக்கு பாத்தப்போ நல்லாத் தானே இருந்தே"
"என்ன கலர் ட்ரெஸ் இது நல்லாவே இல்ல,எங்கெயிருந்து எடுத்தே விலை அதிகம்"
"இது பழைய மாடல் கார் உன் தலையிலே கட்டிட்டான்"
இனி தப்பாது , எழவு, நரகம், பிரயோஜனமில்லை, நடக்காது , சான்சே இல்லை. சுத்த வேஸ்ட். வீணா ட்ரை பண்றே ,அவளாவது உன்னப் பாக்கிறதாவது. இதப் பாருடா காமடியெ .பொளைக்கிறது கஸ்டம் தான். இது போன்ற வார்த்தைகள் முயற்சிக்கு முட்டுக் கட்டையிடும்

வளைந்த பேச்சுகள்:
என்னதான் நடுநிலை செய்தித் தாளானாலும் தொலைக் காட்சியானாலும் அதில் வரும் செய்திகள் பெரும்பாலும் மதம் அரசியல,மொழி இன சாயம் பூசித்தான் வரும். குறைந்த பட்சம் அந்த செய்தி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். செய்திகளில் அவர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளை வளைத்து எழுதுவார்கள.சாதகமானதை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்திலும் பாதகமானதை மூலையில் பொடி எழுத்திலும் போடுவார்கள். சில செய்திகள் மத, இனக் கலவர நெருப்பை பற்ற வைக்கும், எண்ணெய் ஊற்றும். வளைத்து எழுதப்படும் வார்த்தைகளால் அரசியல்வாதிகள் தமக்குள் அடித்துக்கொள்ள நேரிடும். சில செய்திகள் பங்கு வர்த்தகத்தை பாதிக்கும். தவறான,கற்பனையான செய்திகள் உங்கள் நம்பிக்கைகளத் திசை திருப்பிவிடக் கூடும். கேட்கும் எதையும் அப்படியே நம்பி விடக்கூடாது. நாம் தான் அதன் உண்மையை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
வானிலை அறிக்கை, தேர்தல் ஆரூடம், ராசிபலன் , வக்கீலின் வாதம் எல்லமே ரப்பர் பேச்சுகள் தான்.

நெருப்புப் பொறிகள்:
சில மாமியார் மருமகள் பேச்சு, தொழிலாளி முதலாளி பேச்சு, எல்லை தகராறு பற்றிய பேச்சு வார்த்தை முள் மேல் சேலை தான்.
"நான் என்ன அவனப் போய் பாக்குறது, அவன் வேணுமின்னா என்ன வந்து பாக்கட்டும்""என் குடும்ப மென்ன பாரம்பரியமென்ன" "அவர் முதல்ல பேசட்டும் அப்புறம் நாம பேசலாம்" போன்ற ஈகோ பேச்சுகளால் இழப்புகள் தான் உண்டாகும்.
சின்ன சின்ன வார்த்தைகளுக்கு விபரீத அர்த்த்ங்கள் எடுத்துக்கொண்டு "என்னை பார்த்து எப்படி அவன் அந்த வார்த்தையை சொல்லலாம்"."இதை குத்திக் காட்டத்தான் அப்படி பேசினான்" என்று மல்லுக்கு போவது. இது போல சில தீப்பொறி வார்த்த்தைகளால் பஞ்சு பொதிகள் பற்றிக்கொண்டு வெட்டு குத்து, கொலை, கோர்ட், கேஸ், ஆயுள் தண்டனை வரை போய் கடைசியில் அன்று அப்படி பேசாதிருந்தால் இன்று இப்படி களி தின்ன வேண்டி வருமா என்று தாமதமாக யோசிப்பார்கள். சிலர் அலட்சியமாக சிந்தும் வார்த்தைகளால் அன்னியோனியமாக பல வருடம் குடும்பம் நடத்திய கணவனும் மனைவியும் டைவோர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் ஏறி இறங்குவார்கள். பிள்ளைகள் அனாதைகளாகும்.

பொறுப்பற்ற பேச்சு:
சில தலைவர்கள் விடும் பொறுப்பற்ற அறிக்கைகள் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடும். அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஒபாமாவின் அறிக்கையால் நம்மூர் சந்தையில் காய்கறி விலை எகிறக்கூடும் .இந்திய அரசியலில் பேசிப் பேசி நாட்டைக் கெடுத்தவர்களும், பேசாமலேயே நாட்டைக் கெடுத்தவர்களும் உண்டு. சில தலைவர்களின் திமிர் பேச்சால் போர் ஏற்பட்டு நாடு அழியும். அவர்களும் அழிவார்கள்.

மோசடிப் பேச்சு:
சாமியார்கள்,மத குருக்கள, ஜோசியக்காரர்கள் சொல்வதை கண்னை மூடிக்கொண்டு கேட்கலாம் ஆனால் அறிவை மூடிகொண்டு அல்ல.இது தான் சத்தியத்தின் பாதை என்று தவறாக வழி காட்டும் போலி ஆன்மீக வாதிகளின் கவர்ச்சி பேச்சுகளில் கற்பழிப்பின் லட்சியங்கள் மறைந்திருக்கலாம்.
சமயவாதிகளின், அரசியல் வாதிகளின் சாதுரியப் பேச்சுகள் இளைய சமுதாயத்தை பலிகடாக்களாக மாற்றக்கூடும் .மதங்கள் உருவாக்கும் பயத்தையும், பக்தியையும், சற்று ஒதுக்கி வைத்து விட்டு தர்க்க அறிவின் ஒளியில் பார்த்தால் எல்லா மதத்திலும் அடியில் பெரும் ஓட்டை தான் தெரியும்.

மந்திரவாதி "உனக்கு பக்கத்து வீட்டுக்காரன் சூனியம் வைத்திருக்கிறான் நாற்பது நாளில் கை கால் விளங்காமல் போவாய் ’என்று சொல்வதை நீங்கள் நம்பினால் உங்கள் மனம் அதை உண்மயாக்கும.
குடுகுடுப்பைக்காரன் " நீ ரத்தம் கககி சாவாய்" என்று சொன்னால் அவன் சொல்லுக்கு அந்த பவர் உண்டு என்று மனம் நம்பி விட்டால் பயத்தில் உடனே அட்ரீனலின் சுரக்கும் இதயத்துடிப்பு தாறு மாறாகும், இரத்த அழுத்தம் கூடும்,தாக்குப் பிடிக்காமல் ஏதோ ரத்தக்குழாய் வாய் பிளக்க அவன் வார்த்தை பலித்து விடும்.
சின்ன காஸ் ட்ரபுளை பல மருத்துவ வார்த்தைகளை சொல்லி பயமுறுத்தி ஹார்ட் அட்டாக்காக நம்ப வைத்து பணம் கறக்கும ஒருசில மருத்துவர்களின் வார்த்தைகள் அது போன்றது. ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு வாழ்கையை பாழக்குபவர்கள் எத்தனை பேர்கள். நம்பிக்கையை சிறிது மாற்றி வைத்து விட்டு சிறிது சிந்தித்துப் பார்த்தாலே தெரியும் அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே உங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று்.

நீர் குமிழிகள்:
குடிகாரன் பேச்சு, கடன் கேட்பவர்கள் பேச்சு, காதலன் பேச்சு, அரசியல்வாதியின் வாக்குறுதி, சீட்டுக்கம்பனி வாக்குறுதி எல்லாவற்றுக்கும் அற்ப அயுள் தான்.

உயர்வு நவிற்சி:
கல்யாணத் தரகரின் பேச்சு, வியாபாரியின் பேச்சு, சேல்ஸ் ரெப்பின் பேச்சு, ரசிகர்கள் பேச்சு, முகஸ்துதி பேச்சு, அடிவருடி பேச்சு ,மாப்பிள்ளை தந்தையின் பேச்சு ,பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்களின் பேச்சு, ரியல் எஸ்டேட் காரர்கள் பேச்சு எல்லாமே 70 mm ல் DTS effect உடன் இருக்கும். அப்படியே நம்புவோர்க்கு நாமம் தான்.

வஞ்சப் புகழ்சி: சிலர் தமாஷ் பண்ணுகிறேன் என்று கூட இருப்பவர்களையே குத்திக் காட்டுவார்கள். நையாண்டி அடிப்பார்கள் இந்த நகைச்சுவைத் திலகங்கள் நளை வாழ்வின் சறுக்குப்பாதையில் சறுக்கி கீழே போகும் போது அனாதைகளாக மற்றவர்களின் நைய்யாண்டிகளுக்கு கதா பாத்திரமாவார்கள்.

மூடப் பேச்சுகள்:
பூனை குறுக்கே போனால்,விதவை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.போன்ற மூட நம்பிக்கைகளை தனிப் பதிவுதான் போட வேண்டும்.முன்னோர்களின் சாத்திர சம்பபிரதாயாங்கள் அவர்கள் காலத்தில் எதோ ஒரு தேவைக்கு உருவாக்கப்பட்டது,அதை கண்மூடி பின் பற்றாமல் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு இப்போதும் அந்த தேவை உண்டா என் ஆய்ந்து அவற்றின் உண்மையான நோக்கமறிந்து செயல் படவேண்டும்.

காதல் பேச்சு:காதலிப்பதை சொல்லி கெட்டவர்களை விட சொல்லாமலேயே கெட்டவர்கள் அனேகம் ."உன்னை விட அழகி யாரும் இல்லை", "நீ தான் நான் பார்த்த முதல் பெண்", "உனக்காக உயிரையும் தருவேன்", நீயின்றி நான் இல்லை" இப்படி எத்தனை பொய்களில் காதலை கட்டி எழுப்புவார்கள், கல்யாணம் என்றால் காணாமல் போவார்கள். அப்படியே கல்யாணம் செய்து கொண்டால் பொய்கள் எல்லாம் சாயம் வெளுக்கும் போது காலம் கடந்திருக்கும்.

குதர்க்கப் பேச்சு: தர்க்கம் ஆரோக்கியமானது,ஆனால் முயலுக்கு மூணுகால் பார்ட்டிகளின் "அதான் அந்த இன்னொரு வாழைப்பழம்" டைப் குதர்கங்களை விட்டு விலகுவது நேரம் மிச்சப்படுத்தும்.

கோபப்பேச்சு: திருத்தும் நோக்கம் கொண்ட கோபம் தேவையானது, நல்லது. தன்னையும் பிறரையும் அழிக்கும் கோபம் தவறானது. கோபமாக பேசுபவர் நம் தவறை திருத்தும் நோக்கத்தில் உரிமை எடுத்துக் கொண்டு கோபப் படலாம். அப்படி ஒருவர் நம்மிடம் கோபமாக பேசும்போது அவரைப் பேச விடாமல் எதிர்த்து பேசக்கூடாது. அவர் நாம் அதிகமாக கோப பட்டு விட்டோமோ என கருதி நி்றுத்திய பின் உங்கள நியாயத்தை சொல்லிப்பாருங்கள். கோபம் பாசமாகிவிடும்.

சவால் பேச்சு: ஏதோ ஒரு வேகத்தில் பெரிய சவால்கள் விடும்போது அதை நிறைவேற்றும் சக்தி இருக்கிறதா என்று யோசிப்பதில்லை.பின்னர் பெரும் விலை கொடுத்து சவாலை ஜெயிப்பது அல்லது சவால் பிசு பிசுத்து முன்னை விடக் கேவலமாக உணர்வது தேவைதானா?

வசைப் பேச்சு: வசை பாடுவது, திட்டுவது எல்லாம் இயலமையை பறை சாற்றும் வார்த்தைகள்

பொய் :எதெற்கெடுத்தாலும் பொய் பேசுபவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். பின்னர் அவர்களால் எங்கே யாரிடம் என்ன பொய் சொன்னோம் எனறு மறந்து பலரிடம் வகையாய் மாட்டிக்கொள்வார்கள். எல்லோரிடம் "பொய்யன்" என்று சர்டிஃபிகேட் வாங்கிய பின் தனிமைப் படுத்தப்பட்டு மதிப்பிழந்து சிறுமைப் படுவார்கள்.

அதிகமான கெட்ட பேச்சுகள் இருப்பதனால் பதிவு பெரிதாகி விட்டது மன்னிக்கவும். இன்னும் வாழ்வில் தவிர்க்க வேண்டிய பேச்சுகள் ஞாபகம் வந்தால் எழுதுவேன் (ஹி ஹி கெட்டதை அதிகம் என் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை) உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள். பேச வேண்டிய நல்ல விசயங்கள் பற்றி அப்புறம் சின்னதா ஒரு பதிவு போடலாம்.

Download As PDF

17 February 2009

அலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்

எப்போதாவது கடுமையான வலி ஏற்பட்டு அவசரம் , வேலைப்பளு அல்லது மருத்துவச் செலவு காரணம் அதை அலட்சியப் படுத்தியிருக்கிறீகளா? ஜாக்கிரதை! சில வலிகள் பெரும் ஆபத்தின் எச்சரிக்கைகளாக வரும். அப்படிப்பட்ட வலிகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள் தொடர்ந்து படியுங்கள்.

1. மிகமோசமான தலைவலி: தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான் வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.
2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி அல்லது சுகவீனம்:-பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான் நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அனேக மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது ஆஞ்ஜைனாவாக (Angina) இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்.
3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி:-அனேகமாக இது arthritis ஆக இருக்கலாம்.
4. கடுமையான வயிற்று வலி: வயிற்றிலுள்ள குடல் வால் (appendix) பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendicitis எனப்படுகிறது. மருத்துவரிடம் சென்றால் அதை உடனே ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். Gallbladder மற்றும் pancreas பாதிப்புகள்குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.
5. கெண்டைக்கால் வலி: கெண்டைக்கால் பகுதியில் வலி அல்லது வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரை ஈரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி: கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.
7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி: சிலருக்கு மனச்சோர்வு(dippression) காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் " கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது "என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிட்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையையும் பாதித்து விடும்.

சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போது நல்லது. வலி என்பது உடல் நமக்கு தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாம்ல் விழித்துக் கொண்டால் உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.

இது தொடர்பான மற்ற இடுகைகள்:
வலி
ஒற்றைத் தலைவலி

Download As PDF

16 February 2009

ஆறுதல் சொல்வது எப்படி?

உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஸ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.
 • "அட , என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது, காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோசமாக ஆகிவிட முடியாது. காலம் தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.
 • மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத்தோன்றும்.அதைக் கேட்க காதுகள் தான் தேவை.எனவே கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சிலவேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம்.அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.
 • பொதுவாக உளம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல் படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள்.
 • வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும் போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.
 • சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டி கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள்.
 • அவர்களை ஊக்கப்படுத்துங்கள் ஆனால் எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.
 • நன்றாக சாப்பிட, நன்றாக தூங்க உதவுங்கள்.
 • புகை, போதைப் பொருட்களை நாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • மனச்சோர்வு அகற்ற நிறைய மருந்துகள் உண்டு. மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளத் தூண்டுங்கள். சரியான உளவியல் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று தக்க ஆலோசனையும் சிகிட்சையும் பெற உதவி செய்யுங்கள்.
 • பிரச்சனைகள் ஏதுமற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். வீட்டில் மேலும் மன அழுத்தங்கள் உருவாக்கும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • அவர்களது தினசரி வாழ்க்கையில் ஒரு சிட்டையை, ஒழுங்கை அமைத்துக் கொள்ள உதவுங்கள்.
 • கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும்.
 • மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள்.
 • எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறு சுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச்செய்யும்.
 • உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிட்ச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும்.
ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது. இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்று அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். உறவுகளை இழக்கும் போது உண்டாகும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், கடும் துயரத்திலிருந்து விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:
சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதற்கு சோளம், புரதம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு, ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, தயாமின் என்ற வைட்டமின் நிறைந்த கொண்டைக்கடலை, இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலிய உணவுகள் அடிக்கடி உணவில் இடம் பெறச் செய்வது நல்லது.

தொடர்புடைய பக்கம்: - மூளை வளர என்ன சாப்பிடலாம்?

Download As PDF

13 February 2009

மூட்டுவலி (Arthritis)

   காலையில் நீங்கள்  எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால் தாங்கலாகத் தான் நடக்க வேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்சினை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பாம்ஸ் (balm) மற்றும் தைலம், மாத்திரைகள் உபயோகிக்கும்போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா? அனேகமாக நீங்கள் ‘ஆர்திரிடிஸ்’ மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

பருவக் கால மாற்றங்கள் நம் உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்துவிடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால் தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

ஆர்திரிடிஸ் என்றால் என்ன?
 ‘ஆர்திரிடிஸ்’ என்பது (ஆர்த் : இணைப்புகள் ஐடிஸ் : வீக்கம்) முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கமாகும். முழங்கால் அழற்சி மூலம் வலி, முழங்கால் மடக்க முடியாமை மற்றும் வீக்கம் ஆகியவை முழங்கால் மூட்டில் உண்டாகிறது.

ஆர்திரிடிஸ் வகைகள்
இன்றைய நிலையில் 100_க்கும் அதிகமான ‘ஆர்திரிடிஸ்’ நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக ‘ஆர்திரிடிஸ்’ இரண்டு வகையாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

1. ருமேட்டாய்டு ஆர்திரிடிஸ் :
உடலில் இரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும் தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும் இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2. ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் :
இது பொதுவாக மற்றொரு வகை ஆர்திரிடிஸ் நோயாகும். இந்நோய் மேலும் வளரக்கூடியது அல்ல. உடல் எடை அதிகமாகி முழங்கால் மூலமாக அதிக எடையை தாங்கும்போது இந்நோய் முக்கியமாக வருகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது. சாதாணமாக மக்கள் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயினால் பாதிக்கப்படுவதால் மூட்டு வலி ஏற்பட்டு, அதிகமாக அசைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஆர்திரிடிஸ் நோய், ரியூமேட்டாய்டு ஆர்திரிடிஸ் போன்று உடலின் உட்புற பாகங்களை பாதிப்பதில்லை. மூட்டுகளை மட்டுமே பாதிக்கிறது.

மூட்டு வலி : காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.
 • ஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்.
 • கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது)
 • டெண்டிரைடிஸ் (தசைநார் பாதித்தல்)- முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும், மாடிப்படி ஏறி இறங்கும்போது மற்றும் சாயும்போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்.
 • பேக்கர்ஸ் சிஸ்ட் - கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணுப்படுதல். இந்த பை போன்ற சிஸ்ட் உடையும்போது வலி ஏற்பட்டு இந்த வலி முழுங்காலுக்கு கீழ் பரவும்.
 • கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள் வெளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்.
 • எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல் - இதனால் வலி மற்றும் முட்டியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
 • சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள்.
 • முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது.
 • மூட்டுகளில் நோய் தொற்றுவது.
 • மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்.
 • இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். உதாரணம் ஈலியோடிபியல் சின்ட்ரோம் - அதாவது இடுப்பிலிருந்து மூட்டி பகுதிக்கு செல்லும் கயிறுபோன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்.
 • அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.
 • குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.
 • வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.
 • சமீபத்திய மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய் வாய்பட்டிருத்தல்.
 • ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் இரத்தம் உறைந்து விடுதல்.
அறிகுறிகள் : இவ்விரு மூட்டு நோய்களையும் சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும்போது அதிக வலியுடன் விறைப்பு தன்மை உடலிலிருந்தால் அதை ரியூ மேட்டாய்டு நோய் அறிகுறி என அறியலாம். வயதானவர்கள் இதனால் அதிகம் இயங்க முடியாது. குளிர் காலங்களில். உடற்பயிற்சி மற்றும் நடக்கும்போது அதிக வலி ஏற்பட்டால் அது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் அறிகுறியாகும்.

 முழங்கால் மூட்டு தேய்மான வலியில் 4 நிலைகள் உள்ளன. முதல் நிலையில் முழங்கால் விரைப்பாக இருக்கும். மடக்கவோ, நீட்டவோ சிரமப்படுவார்கள். குறிப்பாக காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது!

இரண்டாவது நிலையில் முழங்காலின் உள்ளே வலிக்கும். மூன்றாவது நிலையில் முழங்கால் மிகவும் சேதமடைந்து, வீங்கும். கடைசியாக, முழங்கால் மிகவும் பாதித்து, வளைந்து காணப்படும். நடக்கவே முடியாது.

இந்த வலியில், முதல் நிலையான விரைப்புடன் வலி வரும்போதே, சிகிச்சையை ஆரம்பித்தால், எளிதில் குணப்படுத்தலாம். கடைசி நிலை வரை விட்டால், பெரும்பாலும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். மற்ற இரு நிலைகளில் வலியைத் தடுப்பதற்கு மருந்துகளும், மூட்டினுள்ளே செலுத்தக்கூடிய ஓஸோன் வாயு சிகிச்சை, ரேடியோ அலை சிகிச்சை போன்றவை உதவும்.

சோதனைகள்: இரத்த சோதனைகள் மற்றும் எக்ஸ்-ரே மூலம் இந்த நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

வலியைக் குறைக்க உதவும் வழிகள்:
 • வலியை அதிகப்படுத்தும் செயல்களை (உதாரணம் -பழுதூக்குதல்) தவிர்த்து ஓய்ந்திருத்தல்.
 • வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.
 • கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீ’க்கங்களை குறைக்கலாம்.
 • ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாய்யிருக்கும். இவ்வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.
 • மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.
 • சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.
 • சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, மூங், பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
 • தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30_லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம்.
 • தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.
 • ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.
 • இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தை குறைக்கலாம்.
 • 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
 • போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்படவேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
 தவிர்க்க வேண்டியவை
 • கீல் வாதத்தை பொறுத்தவரை உணவு கட்டுப்பாடு அவசியமானது. மாமிசம், சிப்பி, நத்தை வகைகள் கீல்வாதத்துக்கு எதிராக அமைந்துவிடும்..
 • ஆல்கஹால் போன்ற யூரிக் அமிலத்தை அதிகமாக்குபவை, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 
 • குளூட்டன் ஒவ்வாமை உடையவர்கள் கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களை உட்கொண்டால் மூட்டுவலி அதிகமாக வாய்ப்பு உள்ளது.

Download As PDF

12 February 2009

பயனுள்ள முகவரிகள்-அரசு சேவைகள்

Download As PDF

11 February 2009

பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

  
              இரத்ததானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் அவசரமாக தேவைப் படுபவர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம். 
                                         Indian Blood Donors.com

 மருத்துவ தேடு தளம்:
http://www.attricia.com/ 
     
பொது மருத்துவ தளங்கள்:
Interactive Health Tutorials
healthopedia.com/
webmd.com/
health.discovery.com/
health.nih.gov/
mercksource.com/

medlineplus.gov/
medicinenet.com
en.wikipedia.org/wiki/Health
cdc.gov/datastatistics/
health.yahoo.com/

goodhealthnyou.com/
menshealth.digitaltoday.in/menshealth/
cnn.com/HEALTH/
webhealthcentre.com/
health.howstuffworks.com/

aolhealth.com/health
health.ninemsn.com.au/
dir.yahoo.com/Health/
nhsdirect.nhs.uk/help/
Disease Index

online-medical-dictionary.org/
e health md.com
family doctor.org
nccam.nih.gov

yourtotalhealth.ivillage.com/
intelihealth.com/
my.clevelandclinic.org
lib.uiowa.edu/hardin/md/
healthfinder.gov/

mayoclinic.com/
medhelp.org/
noah-health.org/
emedicinehealth.com/
medicdirect.co.uk/

 ஹாய் நலமா?
மருத்துவம் பேசுகிறது


மனித உடற்கூறு பற்றிய தளம்: www.innerbody.com/

மருந்துக்களின் தன்மைகள், பக்க விளைவுகள் பற்றி  தெரிந்து கொள்ள:
fda.gov/
nlm.nih.gov/
webmd.com/
webmd.com
mercksource.com/pp/us

Medicine Net.com
centerwatch.com/
dailymed.nlm.nih.gov/
druginfonet.com/
druginfo.nlm.nih.gov/

needymeds.org/
rxlist.com/           நீங்கள் வாங்கும் மருத்தினை  http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா?, காலாவதியானதா? என உறுதிப் படுத்திக் கொள்ளலாம்
                       (அல்லது)
 மருந்து அட்டையின் மேல் உள்ள ஒன்பது இலக்கை எண்ணை (Uniform product identifivation code ) 9901099010  என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்யலாம்
பத்து வினாடிகளில் அந்த மருந்தின் பேட்ச் எண், காலாவதி நாள், கம்பனி பெயர் பற்றிய பதில் வரும் மருந்துகளும் அதற்கு ஒவ்வாத உணவுகளும் -அறிந்து கொள்ளுங்கள்
http://www.hoptechno.com/book10.htm
Food and Drug Interactions - FDA

மருத்துவத் துறையில் மோசடிகள், மூட நம்பிக்கைகளை அலசும் தளம்
www.quackwatch.com/
http://www.herbological.com/- மூலிகைகள் பற்றிய தகவல் திரட்டுக்களையும் புரட்டுக்களையும் ஆராயும் தளம்
wrong diagnosis.com

மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ள
மூலிகை வளம்
ஆயுர்வேத மருத்துவம்
சித்த வைத்தியன் 

http://rainforest-database.com/index.html
mskcc.org/
http://www.richters.com/
http://www.botanical.com/botanical/mgmh/mgmh.html
http://www.planetherbs.com/

http://www.medherb.com/
http://www.christopherhobbs.com/
abc.herbalgram.org-Herbal_Library
http://rain-tree.com/plants.htm
phytotherapies.org/

http://envis.frlht.org.in/

மாற்று மருத்துவம்:
http://www.skepdic.com/tialtmed.html
http://www.thenewmedicine.org/
http://nccam.nih.gov/
http://www.drweil.com/drw/ecs/ask_dr_weil/index.html
 http://www.yogajournal.com/          --யோகா
http://www.meditationcenter.com/-   --தியானம் 
 http://www.kjartan.org/backrubfaq/- -மசாஜ் 
 www.alternativementalhealth.com/-- -மனநலம்

மருத்துவச் செய்திகள்:
mercksource.com/
nlm.nih.gov/

தனிப்பட்ட நோய்கள் பற்றிய தளங்கள்:

நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி பற்றி அறிய:
diabetes.niddk.nih.gov/
National Institute Of Diabetes, Digestive & Kidney Disease
http://www.diabetes.org/

        சிறுநீரக நோயாளிகள், அவர்களை கவனித்துக்கொள்ளும் நபர்கள் ஆகியவர்களுக்கு உதவும் பொருட்டு தமிழில் இந்த இணையதளம்


இதயம் நுரையீரல் ,இரத்தம் சம்பந்தமான நோய்கள் பற்றி அறிய:
nhlbi.nih.gov/
National Heart ,Lung and Blood Institute
American heart Association
http://www.lungusa.org
Asthma and Allergy Foundation of America

கிட்னி சம்பந்தமான பக்கம்:
Kidney & Urologic Disease

ஜீரண மண்டல நோய்கள்:
Digestive Diseases A to z
digestive.niddk.nih.gov/

மூளை மற்றும் நரம்பியல்
http://www.ninds.nih.gov/index.htm
Alzheimer’s Association
http://www.migraines.org/
http://www.epilepsy.com/
National Stroke Associatio
National Institute of Neurological Disorders and Stoke (NINDS) 
Pain Resource Center

தோல்
http://www.aad.org/public

பற்கள்
http://www.ada.org/public/index.asp

புற்று நோய்
http://www.cancer.gov

கண் பாதுகாப்பு
http://www.nei.nih.gov/health
http://www.allaboutvision.com/
http://www.mic.stacken.kth.se/Diseases/C11.html
http://www.agingeye.net/

திக்கு வாய்
 http://www.stutteringhelp.org/

எலும்பியல்
http://www.spine-health.com/---முதுகு வலி ,கழுத்து வலி
http://orthoinfo.aaos.org/

குழந்தை மருத்துவம்
http://www.nichd.nih.gov/
http://kidshealth.org
குழந்தை நலம்

முதியோர் பாதுகாப்பு:
Tips for Older adults
Smart parent Health Source
Aging well
National Institute on Aging
http://www.nia.nih.gov/

பெண்கள் நலம்
http://www.obgyn.net/women/conditions/conditions.asp

National Institute on Arthritis and Musculoskeletal and Skin Diseases
http://www.niams.nih.gov/

National Institute of Mental Health (NIMH) Health Information
http://www.nimh.nih.gov/healthinformation/index.cfm

உணவியல்
 ifr.ac.uk/
Weight loss and control
Nutrition
Better Health and You
Nutrition Fact Sheets

Nutrients - Food Research Institute
The Nutrition source
Nutrition Index
Vitamin index
Overview of Dietary Supplements - FDA

Nutrition Table For 7,248 Foods
Food Standards Agency
Nutrition and Your Health
Healthy Eating on the Run: A Month of Tips
Vegetarian Nutrition

Vegetarian Recipes
Recipes for Cooking the Heart Hearty Way
Ingredient Information
Lactose Intolerance - American Dietetic Association
Chemical Cuisine: CSPI's Guide to Food Additives 


A Fresh Look at Food Preservatives
Food Additives
Staking a Claim to Good Health - FDA
Consumer Advice
Micronutrient Information Center

உணவு உட்பொருட்கள் பற்றிய கேள்வி பதில்:
http://www.vrg.org/nutshell/faqingredients.htm
Food Nutrition ,Cosmetics Q&A
ask Noah

போதைப் பொருள் விடுதலை
www.cdc.gov/tobacco/index.htm -புகைப்பழக்கம்
www.usd.edu/cd/publications/fashandbook.cfm -மதுப்பழக்கம்
http://www.habitsmart.com/

பூச்சி ஒழிப்பு:
The p(B)est Control

சுற்று சூழல் மாசு உருவாக்கும் உடல் நலக் கேடு
http://www.scorecard.org/health-effects/

இந்தியாவில் பரிந்துரை செய்யப்படும் மருத்துவர்களின் பட்டியல் 

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள்


  டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்
         தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.

last updated:  Apr- 1- 2013

Download As PDF

உங்களுக்கு என்ன நோய்?

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி? : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி
என்ன வியாதி? : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ் : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி? : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ் : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி? : நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ் : குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்
என்ன வியாதி? : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ் : அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி? : உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது
என்ன வியாதி? : கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ் : அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்
என்ன வியாதி? : சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ் :வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி? : நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ் :  பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி? : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்து போகும். பாதங்களை சரிவர பாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ் : தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல் எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி? :கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ் : கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள்
என்ன வியாதி? :இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ் : இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி? : ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக் காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ் :  உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி? :சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ் : உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்து ஆலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி? : பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ் :  தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி? :வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ் : ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி? :உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ் :  நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

----பா. இந்திரா பிரியதர்ஷிணி
-----நன்றி--- Kumutham sinegithi

Download As PDF

10 February 2009

உடல் உறுப்பு தானம் - உயர்ந்த தானம்

``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்த மாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''

"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''
"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''
"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''
"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''
"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள்,அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''
"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''
"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.
ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''
"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,
ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''
"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள்,கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து,உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''
"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.
பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''
"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.
கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''
 • "நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''
 • 1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
 • 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
 • 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
 • 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
 • 1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
 • 1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 • 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
 • 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.``டென்னிஸ் டார்வெல்''என்பவரின் இதயத்தை``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.
 • 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
 • 1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
 • 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 • 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
 • 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
 • 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
 • சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
 • கல்லீரல் - 18 மணி நேரம் வரை
 • இதயம் - 5 மணி நேரம் வரை
 • இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
 • கணையம் - 20 மணி நேரம் வரை
 • கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
 • எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
 • தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
 • எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
 • இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.
---- நன்றி: தினத்தந்தி

Download As PDF

குழந்தைகளுக்கு என்ன பொம்மை வாங்கிக் கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது நமக்கு வேண்டுமானால் பிறரிடம் பெருமை அடித்துக்கொள்ளப் பயன் படலாம் ஆனால் குழந்தைகளுக்கு அது தேவை இல்லை.அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ரிமோட் கண்ட்ரோல் காரை விட ஒரு சிறிய பந்து அதைப் பொறுத்தவரை மதிப்பு மிக்கது.

கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம் தலையைத் திருப்புவது தனி அழகுதான்.

சுமார் நான்கு மாதமாகும்போது குழந்தையால் தன் கையில் சிறு பொருள்களைப் பிடித்துக்கொள்ள முடிகிறது. அதற்காகப் பாசம்பொங்க பலவித பொம்மைகளை வீட்டில் வாங்கிக் குவிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டு உணரும் சக்தி குழந்தைக்கு முழுவதுமாக ஏற்படுவதில்லை. எனவே மிருதுவான பந்து போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

ஆறு மாதத்தைத் தாண்டிவிட்டால் கையில் கிடைக்கும் பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் வேண்டாத பழக்கம் வந்து தொலைக்கிறது. எனவே கூர்மையான பொம்மையோ, சாயம் போகும் பொம்மையோ கொடுக்க வேண்டாம். அதன் கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு கூடையில் நிறையப் பொருள்களை (அவை பாதுகாப்பானவையாகவும், எடை குறைந்தவையாகவும் இருக்கட்டும்) நிரப்பிக் குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அதுபாட்டுக்கு அவற்றைக் கீழே கொட்டும். பின் அவற்றைக் கூடையில் எடுத்துப் போடும். அப்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் உற்சாகம் சுற்றியிருப்பவர்களிடம் வேகமாகப் பரவும்.

பந்தைக் கீழே தட்டி விளையாடுவது என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? கைகளையும் கண்களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது.

ஒரு வயதாகும்போது பொம்மைக்கார்கள் அளிப்பதில் தவறில்லை. டெடி பியர் போன்ற பொம்மைகளை இன்னும் வளர்ந்தபிறகு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுபோன்ற புசுபுசு பொம்மைகளில் அழுக்கு சேர சான்ஸ் அதிகம். அந்த அழுக்கு குழந்தையின் உடலுக்குள் சென்று ‘‘வீசிங்’’ எனப்படும் இழுப்பில் கொண்டு சென்றுவிட்டால்? ஐயோ வேண்டாமே.

பொம்மைத் துப்பாக்கியால் சுடுவது, பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் ஆகியவை இயந்திரத்தனமானவை. அதாவது அவற்றினால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாவதில்லை. அதேசமயம் நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும், கற்பனை சக்தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் தேவை.

வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் ஒருபக்கம் இருக்கட்டும். குழந்தையோடு உட்கார்ந்து கொண்டு விளையாடுங்கள். இரு கைகளையும் விரித்து அதற்குள் குழந்தையைக் குத்தவையுங்கள். பிடித்துவிட்டால் அது அவுட். பிடிக்காவிட்டால் நீங்கள் அவுட். அடிக்கடி நீங்களே அவுட்டாகி குழந்தைக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். குழந்தையின் உள்ளங்கையில் தோசை வார்ப்பது போன்ற விளையாட்டெல்லாம்கூட உணர்வுபூர்வமான பாலத்தை ஏற்படுத்தும்.

Download As PDF

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

 • உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.
 • கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
 • சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
 • தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
 • குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
 • மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
 • குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.
 • சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
 • குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
 • குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
 • கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
 • குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
 • கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
 • இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.
 • ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)
 • தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.
 • சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
 • கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
 • பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.
 • வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
 • மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
 • மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.
 • இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.
 • சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
 • சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
 • ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.
 • சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.
 • வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
 • கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
 • தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்
 • சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
 • ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
 • கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.
 • எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்.
 • வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.
 • குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
 • குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
 • தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.
 • வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.
 • குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
 • துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.
 • தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.
 • குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.
 • குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
 • நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.
 • வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.
 • குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.
 • விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

Download As PDF